1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு.. அரசு வெளியிட்ட அறிவிப்பு!

கொரோனாவின் மூன்றாம் அலை பரவல் காரணமாக ஜனவரி மாதம் முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள் மீண்டும் மூடப்பட்டன. நேரடி வகுப்புகள் ரத்தான நிலையில். மாணவர்கள் வீட்டில் இருந்தபடி ஆன்லைன் வகுப்பின் மூலம் கல்வி பயின்று வந்தனர். இந்த நிலையில் தற்போது கொரோனாவின் தாக்கம் நாடு முழுவதும் படிப்படியாக குறைந்து வருவதையடுத்து டில்லி தொடங்கி தமிழ்நாடு வரை பல்வேறு மாநிலங்களில் பிப்ரவரி 1 முதல் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. … Read more

கோவா மாநில சட்டசபைக்கான பாஜக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு <!– கோவா மாநில சட்டசபைக்கான பாஜக தேர்தல் அறிக்கை இன்று வெளி… –>

கோவா சட்டசபை தேர்தலுக்கான பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி இன்று வெளியிடுகிறார். கடந்த ஞாயிறு அன்று இந்த தேர்தல் அறிக்கை வெளியிட திட்டமிடப்பட்ட நிலையில், பிரபல பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் மறைவால் இந்த நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று பனாஜியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளார். Source link

நாடு முழுவதும் இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 170 கோடியாக உயர்வு

புதுடெல்லி : இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. பல்வேறு பிரிவுகளில் போடப்படும் இந்த தடுப்பூசி திட்டத்தின் மூலம் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இதில் நேற்று ஒரே நாளில் மட்டுமே 50 லட்சத்துக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டனர். இதன் மூலம் இதுவரை போடப்பட்ட டோஸ்களின் எண்ணிக்கை 170 கோடியை கடந்து விட்டது. இதில் முன்னெச்சரிக்கை டோஸ் எனப்படும் 3-வது டோஸ் போடப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டுமே 1.52 கோடியை கடந்து … Read more

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு

தஞ்சை : தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவை எதிர்த்து, பள்ளி நிர்வாகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அருணாச்சல் பனிச்சரிவில் 7 வீரர்கள் சிக்கித் தவிப்பு: மீட்கும் பணி தீவிரம்

இடாநகர்: அருணாச்சல பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக பனிப் பொழிவையும் பொருட்படுத் தாமல் எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மிக உயர்ந்த மலைப்பகுதி யான காமெங் செக்டார் பகுதியில் ராணுவ வீரர்கள் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடும் பனிச்சரிவு ஏற்பட்டதில் லெப்டினன்ட் கர்னல் ஹர்ஷ் வர்தன் பாண்டே உள்ளிட்ட 7 ராணுவ வீரர்கள் அதில் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து அங்கு மீட்புப் பணிகள் முழு வீச்சில் தொடங்கின. வடகிழக்கு … Read more

ஒமைக்ரானுக்கு எதிராக தடுப்பூசி: சீரம் நிறுவனத்துக்கு அனுமதி!

தென் ஆப்பிரிக்காவில் தோன்றியுள்ள கொரோனா வேரியண்ட் ஒமைக்ரான், பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய வகை திரிபானது வேகமாக பரவும் என எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருவதாலும், உலக அளவில் ஒமைக்ரான் பாதிப்புக்கு ஆளாகும் நபர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது, சுமார் 60க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமைக்ரான் பரவல் காணப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவில் பரவிய ஒமைக்ரான், சமூக பரவலாக மாறிவிட்டதாக மத்திய அரசின் INSACOG அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், கொரோனா ஒமைக்ரான் திரிபுக்கு எதிரான … Read more

மத்திய பிரதேசத்தில் பல்கலைக்கழக வளாகத்தில் சுற்றித் திரியும் புலி <!– மத்திய பிரதேசத்தில் பல்கலைக்கழக வளாகத்தில் சுற்றித் திரிய… –>

மத்திய பிரதேச மாநிலம் போபாலில், போஜ் பல்கலைக்கழக துணைவேந்தர் குடியிருப்பு வளாகத்திற்குள் புலி ஒன்று சுற்றித் திரிவதாக வீடியோ வெளியாகி உள்ளது. ரத்தன்பானி புலிகள் காப்பக பகுதியில் அமைந்துள்ள பல்கலைக்கழக வளாகத்தில் புலி அங்குமிங்கும் சுற்றுவதாக காவலாளி தெரிவித்தார். இதையடுத்து, அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை சோதனையிட்டதில், புலி நடமாட்டம் உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து, வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, புலியைப் பிடிக்க தீவிர கண்காணிப்பு எடுத்து வருவதாக தெரிவித்தனர். Source link

நதிகள் இணைப்பு விவகாரத்தில் கர்நாடகா தனது உரிமையை விட்டுக் கொடுக்காது – பசவராஜ் பொம்மை

புதுடெல்லி: கர்நாடக மாநிலத்தில் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சிக்காலம் அடுத்த ஆண்டு  மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதனால் அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் சட்டசபைக்கு தேர்தல் நடக்கிறது. கர்நாடக மந்திரிசபையை மாற்றிவிட்டு புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்க முதல் மந்திரி பசவராஜ் பொம்மை முடிவு செய்துள்ளார். மந்திரிசபையில் காலியாக உள்ள இடங்களை நிரப்பவேண்டும் என மூத்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் பலர் பசவராஜ் பொம்மைக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். இதற்கிடையே, கர்நாடக … Read more

அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: தமிழகத்தில் சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான விவகாரத்தில் மாநில அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் அரசாணையின் நிலைப்பாட்டை ஏற்று நடப்பு கல்வியாண்டில் சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ மேற்படிப்புகளில் 50சதவீத இடங்களை அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கலாம் என உயர்நீதிமன்றம் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது. இதை எதிர்த்து உச்ச … Read more

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆதார் எண் கட்டாயமில்லை: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: கரோனா தடுப்பூசியை பொதுமக்கள் செலுத்திக் கொள்ள ஆதார் எண் கட்டாயமில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. கரோனா தடுப்பூசி முகாம்களை தவிர்த்து, கரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வதற்கு முதலில் கோவின் இணைய தளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்காக கோவின் இணைய தளத்தில் ஆதார் எண் கேட்கப்படும் என்ற விதிமுறை உள்ளது. இந்நிலையில் இந்த விதிமுறையை நீக்கக் கோரி மகாராஷ்டிர மாநிலம் புனேவை சேர்ந்த வழக்கறிஞர் சித்தார்த் சங்கர் சர்மா … Read more