மதுபான கொள்கை முறைகேடு வழக்கு.. டெல்லி திஹார் சிறையில் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்!

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஏப்ரல் 15ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றம் திங்கள்கிழமை ஏப்ரல் 1ஆம் தேதி உத்தரவிட்டது. இதனை அடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் திஹார் ஜெயிலில் அடைக்கப்பட இருக்கிறார். 

“கச்சத்தீவு குறித்து ஸ்டாலினுக்கு 21 முறை பதில் அளித்துள்ளேன்” – வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

புதுடெல்லி: “முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நான் 21 முறை கச்சத்தீவு தொடர்பாக பதில் அளித்துள்ளேன். இது திடீரென எழுந்த பிரச்சினை அல்ல.” என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். கச்சத்தீவு தொடர்பான 1974 ஒப்பந்தம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பெற்ற ஆர்டிஐ தகவலுக்கு பிறகு இந்த விவகாரம் மீண்டும் சர்ச்சையாகி வருகிறது. பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகிவிட்டது என்று கூறி விமர்சித்த நிலையில், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் … Read more

“அனைத்து கட்சிகளையும் தேர்தல் ஆணையம் சமமாக நடத்த வேண்டும்” – பிரியங்கா

பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பேசியதாவது: ராமாயணத்தில் ராவணனிடம் படை பலம், ஆயுத பலம், ஏராளமான செல்வம் குவிந்திருந்தது. பகவான் ராமரிடம் உண்மை, நம்பிக்கை, பொறுமை, வீரம் மட்டுமே இருந்தது. இறுதியில் ராமர்தான் வெற்றி பெற்றார். தேர்தலில் உண்மையை முன்வைத்து, மக்களை நம்பி களமிறங்கி உள்ளோம். 5 கோரிக்கைகள்: அனைத்து கட்சிகளையும் தேர்தல் ஆணையம் சமமாக நடத்த வேண்டும். எதிர்க்கட்சிகளை குறிவைக்கும் வருமான வரித் துறை, சிபிஐ, அமலாக்கத் துறையின் நடவடிக்கைகளை … Read more

மோடியின் ‘மேட்ச் பிக்ஸிங்’ – ராகுல் காந்தி விமர்சனம்

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து டெல்லியில் நேற்று இண்டியா கூட்டணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் அந்த கூட்டணியை சேர்ந்த 28 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த 21-ம்தேதி கைது செய்யப்பட்டார். இதைகண்டித்து எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி சார்பில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, … Read more

பான் அட்டை துஷ்பிரயோகம்: குவாலியர் கல்லூரி மாணவருக்கு ரூ.46 கோடி வரி நோட்டீஸ்

குவாலியர்: கல்லூரி மாணவனின் பான் அட்டையை துஷ்பிரயோகம் செய்த கம்பெனியில் ரூ.46 கோடி அளவுக்கு பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. இதனால் அந்த மாணவருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் பிரமோத் குமார். அவருக்கு வருமான வரித்துறை மற்றும் ஜிஎஸ்டியிலிருந்து வரி நோட்டீஸ் வந்திருந்தது. அதில்ரூ. 46 கோடிக்கு பணப் பரிமாற்றம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. பிரமோத் குமார் பான் அட்டை எண்ணில் ஒரு நிறுவனம் மும்பை மற்றும் டெல்லியில் … Read more

கச்சத்தீவு: ‘ஆர்டிஐ’ ஆவணங்கள் சொல்வது என்ன?

புதுடெல்லி: கச்சத்தீவானது ராமேஸ்வரத்திலிருந்து 12 மைல் தொலைவிலும் யாழ்ப்பாணத்திலிருந்து 10.5 மைல் தொலைவிலும் அமைந்துள்ளது. மிகச் சிறிய தீவான அதன் மொத்த பரப்பளவு 285 ஏக்கர். நீளம் 1.7 கிமீ. கடந்த 1948-ம் ஆண்டு ஜமீன்தாரி முறை ஒழிக்கப்படும் வரையில் கச்சத்தீவு ராமேஸ்வரத்தின் ஜமீன்தார் வசம் இருந்தது என்றும் அதன்பிறகு அது மெட்ராஸ் மாகாணத்தின் அங்கமாக மாறியது என்றும் இந்தியா கூறியது. டச்சு மற்றும் பிரிட்டிஷாரின் காலனி ஆட்சி முதலே கச்சத்தீவு தங்கள் வசம் இருந்ததாக கூறிய … Read more

தமிழக வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உட்பட 5 பேருக்கு பாரத ரத்னா விருது

புதுடெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர்கள் மறைந்த நரசிம்ம ராவ், சரண்சிங் உள்ளிட்டோருக்கு பாரத ரத்னா விருதுகளை வழங்கி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று கவுரவித்தார். நாட்டிலேயே மிக உயரிய விருதாகக் கருதப்படும் பாரத ரத்னா விருதுகளை வழங்கும் விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இந்தியாவின் முன்னாள் பிரதமர்கள் மறைந்த நரசிம்ம ராவ், சரண்சிங், உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதுகளை அவர்களது குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர். நரசிம்ம ராவ் சார்பாக அவரது மகன் பி.வி.பிரபாகர் … Read more

‘அல்லாஹு அக்பர்’ – பாஜக பிரச்சாரத்தில் முஸ்லிம்கள் முழக்கம்

மேற்கு வங்கத்தில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இங்கு முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜக தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது. இந்நிலையில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் கோச் பிஹார் மாவட்டத்தில் உள்ள தின்ஹட்டாவில் பாஜகவின் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இங்கு பாஜக வேட்பாளராக மத்திய இணை அமைச்சர் நிசித் பிரமானிக் போட்டியிடுகிறார். இவரது கூட்டத்தில் அங்குள்ள முஸ்லிம்களும் திரளாக கலந்து கொண்டனர். இதில், உற்சாகம் அடைந்த அவர்கள் … Read more

“கச்சத்தீவை இலங்கைக்கு அநாவசியமாக தாரைவார்த்தது காங்கிரஸ்” – பிரதமர் மோடி தாக்கு

புதுடெல்லி: “கடந்த 1970 ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசு அநாவசியமாக கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது” என்று பிரதமர் மோடி அக்கட்சி மீது ஞாயிற்றுக்கிழமை குற்றம்சாட்டியுள்ளார். கச்சத்தீவு இலங்கை வசம் சென்றது தொடர்பாக வெளியாகியிருக்கும் தரவு ஒன்றின் அடிப்படையிலான ஊடகக் கட்டுரையை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, காங்கிரஸை நம்பகத்தன்மை அற்ற கட்சி என்று கடுமையாக விமர்சித்துள்ளார். பிரதமர் தனது எக்ஸ் பதிவில், “கச்சத்தீவு இலங்கை வசம் சென்றது தொடர்பான அந்தத் தரவுகள் … Read more

சோனியா, ராகுல் உள்ளிட்ட 27 நட்சத்திர பேச்சாளர்கள் ரெடி!

ஜம்மு காஷ்மீரில் வரும் ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20 ஆகிய தேதிகளில் 5 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதே நேரம் காஷ்மீர் சட்டப்பேரவைக்கான தேர்தல் மக்களவைத் தேர்தலுக்கு பிறகு நடைபெறும் என ஆணையம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில், காஷ்மீரில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ள நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை அக்கட்சி நேற்று நேற்று வெளியிட்டது. இந்தப் பட்டியலை கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் … Read more