“ஒட்டுமொத்த நாட்டையும் தடுப்பு முகாமாக மாற்றிவிட்டனர்” – மம்தா சாடல் @ அசாம்

புதுடெல்லி: இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை ரத்து செய்வோம் என திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். அசாமில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 4 வேட்பாளர்களை ஆதரித்து சில்சார் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மம்தா பானர்ஜி, ‘பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகமும் தேர்தலும் இருக்காது. அவர்கள் (பாஜக) ஒட்டுமொத்த நாட்டையும் தடுப்பு முகாமாக … Read more

“நாட்டின் அணு ஆயுதங்களை அழிப்போம் என கூறும் மார்க்சிஸ்ட் உடன் கூட்டா?” – காங்கிரஸுக்கு ராஜ்நாத் கேள்வி

காசர்கோடு (கேரளா): நாட்டின் அணு ஆயுதங்கள் முற்றிலுமாக அழிக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ், தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார். கேரளாவின் காசர்கோடு நகரில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பாஜக மூத்த தலைவரும், பாதுகாப்புத் துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங், “நாட்டின் அணு ஆயுதங்கள், ரசாயன மற்றும் உயிரி ஆயுதங்கள் உள்ளிட்ட பேரழிவு ஆயுதங்கள் … Read more

8 மத்திய அமைச்சர்கள், 2 முன்னாள் முதல்வர்கள், 1 முன்னாள் ஆளுநர் களம் காணும் முதற்கட்டத் தேர்தல்

புதுடெல்லி: நாளை மறுநாள் நடைபெற உள்ள முதற்கட்டத் தேர்தலில், 8 மத்திய அமைச்சர்கள், 2 முன்னாள் முதல்வர்கள், 1 முன்னாள் ஆளுநர் ஆகியோர் போட்டியில் உள்ளனர். மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், முதல் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள்(ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதில், தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 39 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ராஜஸ்தானில் 12 தொகுதிகள், உத்தரப் பிரதேசத்தில் 8 தொகுதிகள், மத்தியப் பிரதேசத்தில் 6 தொகுதிகள், … Read more

‘ஏஏபியின் ராம ராஜ்ஜியம்’: கேஜ்ரிவால் அரசின் பணிகளை முன்னிலைப்படுத்த புதிய இணையதளம்

புதுடெல்லி: ‘ஆம் ஆத்மியின் ராம ராஜ்ஜியம்’ என்ற பெயரில் ஆம் ஆத்மி கட்சி புதிய இணையதளத்தைத் தொடங்கி உள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், ராம நவமியை முன்னிட்டு https://aapkaramrajya.com/ என்ற புதிய இணையதளத்தை ஆம் ஆத்மி கட்சி தொடங்கியுள்ளது. கேஜ்ரிவால் அரசின் பணிகளை முன்னிலைப்படுத்த ஆம் ஆத்மி கட்சி ‘ஏஏபி கா ராம் ராஜ்யா’ என்ற இணையதளத்தை தொடங்கியுள்ளது டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தேசிய தலைநகரில் ராமரின் லட்சியங்களை உணர முயற்சிப்பதாகக் கூறி, “ராம் … Read more

‘மோடி அலை இல்லை’ – அமராவதி பாஜக வேட்பாளர் கருத்தால் சர்ச்சை

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி தொகுதி பாஜக வேட்பாளர் நவ்னீத் ரானா ‘மோடி அலை’ இல்லை எனப் பேசியது சர்ச்சையாகியுள்ளது. அவரது கருத்தை வைத்து மகாராஷ்டிராவின் என்சிபி (சரத் பவார் பிரிவு), சிவ சேனா (யுபிடி) பிரிவு கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளன. கடந்த திங்கள் கிழமை அமராவதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமராவதி தொகுதி பாஜக வேட்பாளர் நவ்னீத் ரானா, “நாம் இத்தேர்தலை ஒரு கிராம பஞ்சாயத்து தேர்தல் போல் பாவித்து பணிகளைச் செய்ய வேண்டும். … Read more

அமெரிக்காவில் மர்மமாக கொல்லப்பட்ட ஹைதராபாத் மாணவர் உடல் தாயகம் வந்தது

ஹைதராபாத்: ஹைதராபாத் நாச்சாரம் அம்பேத்கர் நகரை சேர்ந்த முகமது சலீம் மகன் அப்துல் முகமது அராபத். இவர் ஐடி பொறியியல் பட்டப்படிப்பு முடித்து விட்டு, மேற்கல்விக்காக கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்கா சென்றார். அங்குள்ள ஓஹியோ மாகாணம், கிளீவ்லாந்து பல்கலைக்கழகத்தில் இவர் மேற்படிப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த வாரம், அமெரிக்கா-கனடா எல்லையில் உள்ள ஏரிக்கரையில் மாணவர் அப்துல் முகமது அராபத்தின் உடல் மீட்கப்பட்டதாக கிளீவ்லாந்து போலீஸார் ஹைதராபாத்துக்கு தகவல் கொடுத்தனர். தனது மகனின் மரணத்தில் … Read more

காங்கிரஸ், என்சி, பிடிபி ஆட்சியில் காஷ்மீரில் போலி என்கவுன்ட்டர்கள் நடைபெற்றன: அமித் ஷா குற்றச்சாட்டு

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், ஜம்மு சம்பா மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஜுகல் கிஷோர் ஷர்மாவுக்கு ஆதரவாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், “காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி (என்சி), மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) ஆகிய மூன்றும் வாரிசு அரசியல் கட்சிகள். அந்தக்கட்சித் தலைவர்கள் தங்கள் மகன்களுக்காகவும் மகள்களுக்காகவுமே உழைக்கிறார்கள். உங்களுக்காக அவர்கள் ஒருபோதும் உழைப்பதில்லை. அவர்களின் ஆட்சியில் காஷ்மீரில் … Read more

28 ஆண்டுகளாக நடந்த வழக்கில் ஜெகன் கட்சி வேட்பாளருக்கு 18 மாதங்கள் சிறை

விசாகப்பட்டினம்: கடந்த 1996-ம் ஆண்டு ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், வெங்கடய்ய பாளையத்தில் 5 தலித்துகள் அவமானப்படுத்தப்பட்டனர். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மேலவை உறுப்பினரும், தற்போதைய மண்டபேட்டா தொகுதியின் ஜெகன் கட்சியின் வேட்பாளருமான தோட்டா திருமூர்த்திலு உட்பட மொத்தம் 6 பேர் மீது தலித் வன்கொடுமை பிரிவின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கு கடந்த 28 ஆண்டுகளாக விசாகப்பட்டினம் நீதிமன்றத்தில் நடபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 5 தலித்துகள் … Read more

சத்தீஸ்கரில் பதற்றம்! 29 நக்சலைட் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..பின்னணி என்ன?

Chhattisgarh Encounter : சத்தீஸ்கரில், மாவோயிஸ்ட்கள் 29 பேர் பாதுகாப்பு படை அதிகாரிகளால் என்கவுண்டரில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர். இது குறித்த முழு தகவலை பார்க்கலாம்.   

விவிபாட் இயந்திரத்தின் அனைத்து ஒப்புகை சீட்டுகளையும் எண்ணுவது சாத்தியமற்றது: உச்ச நீதிமன்றம் கருத்து

புதுடெல்லி: காகித வாக்குச்சீட்டு முறையில் பல குறைபாடுகள் உள்ளன. அனைத்து விவிபாட் ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ணுவது சாத்தியமற்றது என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ‘மீண்டும் காகித வாக்குச்சீட்டு முறைக்கு திரும்ப வேண்டும் அல்லது மின்னணு இயந்திரத்தில் வாக்குப்பதிவு செய்யும்போது வாக்காளருக்கு விவிபாட் இயந்திரம் மூலம் ஒப்புகைச்சீட்டு வழங்கும் முறையை அமல்படுத்த வேண்டும்’ என்று கோரி, உச்ச நீதிமன்றத்தில் ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபாங்கர் … Read more