2-ம் எண் அறை, சலுகைகள்… – டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் திகார் சிறையில் அடைப்பு

புதுடெல்லி: மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை ஏப்ரல் 15-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அரசு மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கடந்த 21-ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அவர் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், மார்ச் 28-ம் தேதி வரை அமலாக்கத் … Read more

இந்தியாவில் ஏப்ரல் – ஜூன் மாதங்களில் வெப்ப அலை எச்சரிக்கை

புதுடெல்லி: இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெறவிருக்கும் நிலையில், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஏப்ரல் – ஜூன் மாதங்களில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது குறித்து திங்கள்கிழமை இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஜெனரல் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா கூறுகையில், “நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஏப்ரல் – ஜூன் மாதங்களில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக … Read more

ராகுல் காந்தியின் ‘மேட்ச் பிக்ஸிங்’ கருத்துக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலை “மேட்ச் பிக்ஸிங்” என கூறிய ராகுல் காந்தி மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார் அளித்துள்ளது. இண்டியா கூட்டணி சார்பில் டெல்லி ராம் லீலா மைதானத்தில் நேற்று (மார்ச் 31) நடந்த பேரணியில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியின்போது பணம் கொடுத்து வீரர்களை வாங்கியோ, நடுவர்களுக்கு அழுத்தம் தந்தோ, அணியின் கேப்டன்களை … Read more

‘‘கேஜ்ரிவாலை தேர்தல் முடியும் வரை சிறையில் வைப்பதே பாஜகவின் திட்டம்’’ – சுனிதா

புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் முடியும் வரை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை சிறையில் வைக்க வேண்டும் என்பதே பாஜகவின் திட்டம் என்று அவரது மனைவி சுனிதா குற்றம் சாட்டியுள்ளார். அமலாக்கத் துறை காவல் நிறைவடைந்ததை அடுத்து அரவிந்த் கேஜ்ரிவால் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இன்று (திங்கள்கிழமை) ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அமலாக்கத் துறை காவல் நீட்டிப்பை கோரவில்லை. அதேநேரத்தில், “கேஜ்ரிவால் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. வேண்டுமென்றே விசாரணையை திசை திருப்புகிறார். அவருடைய டிஜிட்டல் உபகரணங்களின் கடவுச் சொற்களைத் தர … Read more

அரவிந்த் கேஜ்ரிவாலின் நிலை காங்கிரஸுக்கு ஒரு பாடம்: கேரள முதல்வர் பினராயி விஜயன்

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்கொள்ளும் சூழ்நிலையில் இருந்து காங்கிரஸ் கட்சி பாடம் கற்க வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கோழிக்கோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய பினராயி விஜயன், “நேற்று (மார்ச் 31) புதுடெல்லியில் நடைபெற்ற இண்டியா கூட்டணியின் பேரணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. மத்தியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு இந்த பேரணி ஒரு வலுவான எச்சரிக்கையை அளித்துள்ளது. அதேநேரத்தில், காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சித் … Read more

ஜூலை 24 வரை காங்.,க்கு எதிராக நடவடிக்கை இல்லை: வரி நிலுவை வழக்கில் வருமான வரித்துறை பதில்

புதுடெல்லி: “வரி நிலுவை தொடர்பாக ஜூலை 24-ம் தேதி வரை காங்கிரஸுக்கு எதிராக எந்த கட்டாய நடவடிக்கையும் எடுக்கமாட்டோம்” என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடைகளுக்கு அளிக்கப்பட்டு வந்த வரி விலக்கு முடிவுக்கு வந்துவிட்டது. இதையடுத்து கடந்த 2017-18 முதல் 2020-21-ம் ஆண்டு வரையிலான 4 ஆண்டுகளுக்கான வரி நிலுவை ரூ.1,823 கோடி செலுத்துமாறு காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. தற்போது 2014-15 ஆண்டுக்கான நிலுவைத் தொகை ரூ.663 கோடி, … Read more

மதுபான கொள்கை முறைகேடு வழக்கு.. டெல்லி திஹார் சிறையில் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்!

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஏப்ரல் 15ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றம் திங்கள்கிழமை ஏப்ரல் 1ஆம் தேதி உத்தரவிட்டது. இதனை அடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் திஹார் ஜெயிலில் அடைக்கப்பட இருக்கிறார். 

“கச்சத்தீவு குறித்து ஸ்டாலினுக்கு 21 முறை பதில் அளித்துள்ளேன்” – வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

புதுடெல்லி: “முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நான் 21 முறை கச்சத்தீவு தொடர்பாக பதில் அளித்துள்ளேன். இது திடீரென எழுந்த பிரச்சினை அல்ல.” என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். கச்சத்தீவு தொடர்பான 1974 ஒப்பந்தம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பெற்ற ஆர்டிஐ தகவலுக்கு பிறகு இந்த விவகாரம் மீண்டும் சர்ச்சையாகி வருகிறது. பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகிவிட்டது என்று கூறி விமர்சித்த நிலையில், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் … Read more

“அனைத்து கட்சிகளையும் தேர்தல் ஆணையம் சமமாக நடத்த வேண்டும்” – பிரியங்கா

பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பேசியதாவது: ராமாயணத்தில் ராவணனிடம் படை பலம், ஆயுத பலம், ஏராளமான செல்வம் குவிந்திருந்தது. பகவான் ராமரிடம் உண்மை, நம்பிக்கை, பொறுமை, வீரம் மட்டுமே இருந்தது. இறுதியில் ராமர்தான் வெற்றி பெற்றார். தேர்தலில் உண்மையை முன்வைத்து, மக்களை நம்பி களமிறங்கி உள்ளோம். 5 கோரிக்கைகள்: அனைத்து கட்சிகளையும் தேர்தல் ஆணையம் சமமாக நடத்த வேண்டும். எதிர்க்கட்சிகளை குறிவைக்கும் வருமான வரித் துறை, சிபிஐ, அமலாக்கத் துறையின் நடவடிக்கைகளை … Read more

மோடியின் ‘மேட்ச் பிக்ஸிங்’ – ராகுல் காந்தி விமர்சனம்

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து டெல்லியில் நேற்று இண்டியா கூட்டணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் அந்த கூட்டணியை சேர்ந்த 28 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த 21-ம்தேதி கைது செய்யப்பட்டார். இதைகண்டித்து எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி சார்பில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, … Read more