“செல்வந்த தொழிலதிபர்களின் கருவியாக இருக்கிறார் மோடி” – ராகுல் காந்தி விமர்சனம்

கோழிக்கோடு: “இந்தியாவின் மிகப் பெரிய, பணக்கார தொழிலதிபர்களின் கருவியாக பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டு வருகிறார். நாட்டில் விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகள், வேலையில்லா திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவை பற்றி பிரதமர் மோடி பேசுவதில்லை” என்று வயநாடு எம்.பி ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். கேரள மாநிலம், கோழிக்கோட்டில் செவ்வாய்கிழமை நடைபெற்ற தேர்தல் பேரணியில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “நாட்டில் உள்ள உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்புவதும், இந்தியாவில் உள்ள … Read more

பொதுவெளியில் மன்னிப்புக் கேட்க முன்வந்த பாபா ராம்தேவ் – ‘தவறான விளம்பர’ வழக்கு அப்டேட்

புதுடெல்லி: பதஞ்சலி நிறுவன பொருட்கள் தொடர்பாக தவறான விளம்பரம் செய்ததற்கான நோக்கத்தை விவரிக்க வேண்டும் என்று பாபா ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பதஞ்சலி விளம்பர விவகாரத்தில், பிரபல யோகா குரு பாபா ராம்தேவ், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் ஆச்சாா்ய பாலகிருஷ்ணா ஆகியோருக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹிமா கோஹ்லி, ஏ.அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆயுர்வேதத்தின் நன்மைகளை வலியுறுத்த … Read more

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் 1,016 பேர் வெற்றி – ஆதித்ய ஸ்ரீவஸ்தவா முதலிடம்

புதுடெல்லி: மத்திய அரசு நடத்தும் யுபிஎஸ்சி தேர்வு (2023) முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் அகில இந்திய அளவில் ஆதித்ய ஸ்ரீவஸ்தவா என்ற இளைஞர் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இவர் ஏற்கெனவே ஐபிஎஸ் பயிற்சியில் இருக்கிறார். இவர் ஐஐடி கான்பூரில் பிடெக் பட்டம் பெற்றவராவார். இந்தத் தேர்வில் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை அனிமேஷ் ப்ரதா, டோனூரு அனன்யா ரெட்டி ஆகியோர் பிடித்துள்ளனர். கடந்த ஆண்டு தேசிய அளவில் முதல் 4 இடங்களையும் கைப்பற்றி பெண்கள் சாதனை படைத்திருந்தது நினைவுகூரத்தக்கது. … Read more

ஒரே ஸ்கூட்டர்… 270 முறை விதிமீறல்! – பெங்களூரு பெண்ணுக்கு ரூ.1.36 லட்சம் அபராதம்

பெங்களூரு: பெங்களூருவில் ஒரு ஸ்கூட்டர் மூலமாக 270 முறை சாலை விதிகளை மீறிய பெண்மணிக்கு ரூ.1.36 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு பானஸ்வாடியை சேர்ந்த அப்பெண், காக்ஸ் டவுன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அடிக்கடி தனது ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் சென்றுள்ளார். ஹெல்மெட் அணியாமல் செல்வது, விதிகளை மீறி நிறைய ஆட்களை ஸ்கூட்டரில் ஏற்றிச் செல்வது, மொபைல் போனில் பேசிக்கொண்டே சிக்னலை மதிக்காமல் செல்வது, தவறான ரூட்டில் செல்வது என கிட்டத்தட்ட 270 முறை போக்குவரத்து … Read more

மோடி மீண்டும் பிரதமராக 64% ஆதரவு: இணைய கருத்துக் கணிப்பில் தகவல்

புதுடெல்லி: நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக 64% பேரும், ராகுல் காந்தி பிரதமராக 21.8% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளதாக, டெய்லிஹன்ட் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் ராகுல் காந்தி பிரதமராக 44.1% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மோடிக்கு 43.2% பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. மக்களவைத் தேர்தல் 2024 தொடர்பாக டெய்லிஹன்ட் நிறுவனம், ஆன்லைனில் கருத்துக் கணிப்புகளை நடத்தியது. இதில், பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. இந்த கருத்துக் கணிப்புகள் ஆங்கிலம், இந்தி, … Read more

“நீண்ட காலத்துக்கு நாடு முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டும்” – பிரதமர் மோடி @ மேற்கு வங்கம்

ராய்கஞ்ச் (மேற்கு வங்கம்): நீண்ட காலத்துக்கு நாடு முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மேற்கு வங்கத்தின் ராய்கஞ்ச் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், “கடந்த 10 ஆண்டுகளில் நடந்தது வெறும் டிரெய்லர்தான். நாம் தேசத்தையும் மேற்கு வங்கத்தையும் நீண்ட காலம் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். பல ஆண்டுகளாக மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருந்தவர்கள் மாநிலத்தை மிகவும் பின்தங்கிய நிலையில் … Read more

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்… நான் தீவிரவாதி அல்ல!” – மக்களுக்கு டெல்லி முதல்வர் சிறைக் குறிப்பு

புதுடெல்லி: “என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால். நான் தீவிரவாதி அல்ல” என்று பாலிவுட் சினிமா படத் தலைப்பு பாணியில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் திஹார் சிறையிலிருந்தவாறு மக்களுக்கு செய்திக் குறிப்பு அனுப்பியுள்ளார். ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். சிறையில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஒரு கிரிமினல் குற்றவாளியைவிட மோசமாக நடத்தப்படுவதாகத் தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது, “திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மோசமாக நடத்தப்படுகிறார். ஒரு … Read more

உலகிலேயே மிக ஆழகான இடம் வயநாடு: தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி புகழாரம்

Lok Sabha Elections: கேரளாவின் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். வயநாட்டல் தனது 4 நாள் பிரச்சாரத்தின் இரண்டாவது நாளான இன்று (ஏப்ரல் 16) அவர் கோழிக்கோடு கோடியத்தூரில் ரோடு ஷோக்களை நடத்தினார். 

பிஎஸ்பி வேட்பாளர் பட்டியல்: வாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக களமிறங்கும் அதர் ஜமால் லாரி

லக்னோ: நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான பதினொரு வேட்பாளர்களின் புதிய பட்டியலை பகுஜன் சமாஜ் கட்சி இன்று (செவ்வாய்கிழமை) வெளியிட்டது. வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக பகுஜன் சமாஜ் கட்சி அதர் ஜமால் லாரியை களமிறக்கியுள்ளது. மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி கட்சி தனித்து போட்டியிடப் போவதாக அக்கட்சியின் தலைவர் மாயாவதி ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. … Read more

அயோத்தியில் கோலாகலமாக ராமநவமி கொண்டாட ஏற்பாடு.. ராம ஜென்மபூமி அறக்கட்டளை தகவல்!

Grand Ram Navami Celebrations in Ayodhya: அயோத்தியில் வெகு கோலாகலமாக ராமநவமியை கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அயோத்தி ராமர் கோயில் தலைமை பூசாரி ஆச்சார்யா சத்யேந்திரா தாஸ் தெரிவித்துள்ளார்.