“நச்சு பாம்பை நம்பலாம்… பாஜகவை நம்ப கூடாது!” – மம்தா பானர்ஜி விமர்சனம்

மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தின் கூச் பெஹார் பகுதியில் நேற்று தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: மத்திய விசாரணை அமைப்புகள், எல்லை பாதுகாப்பு படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை போன்றவை எல்லாம் பாஜக உத்தரவுப்படி செயல்படுகின்றன. இதில் தேர்தல் ஆணையம் தலையிட்டு, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சாதகமான சூழலை ஏற்படுத்த வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை பாஜக பின்பற்றுவதில்லை. ஒரே நாடு, … Read more

மீரட் | அருண் கோவிலை ஆதரித்து ராமாயண தொடரில் லஷ்மண், சீதாவாக நடித்தவர்கள் பிரச்சாரம்

புதுடெல்லி: 1980 களில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் வெளியான ராமாயணம் தொடரில் ராமராக நடித்த அருண் கோவில் பாஜக வேட்பாளராகி உள்ளார். உத்தரப்பிரதேசம் மீரட்டில் போட்டியிடும் அவருக்காக அவருடன் அத்தொடரில் லஷ்மண், சீதாவாக நடித்த சகநட்சத்திரங்கள் பிரச்சாரம் செய்ய உள்ளனர். அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டதன் பலனை மக்களவைத் தேர்தலில் அனுபவிக்க பாஜக தயாராகி வருகிறது. 1980களில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் வெளியான ராமாயணம் தொடரில் ராமராக நடித்தவருக்கு போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ராமராக நடித்தவர், மகராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த … Read more

CBSE முக்கிய அறிவிப்பு.. 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் மாற்றம்!

CBSE Changed Examination Format: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் 2024-25 ஆம் கல்வியாண்டிலிருந்து 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையை மாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது.

சிறையில் உள்ள அர்விந்த் கேஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்ய உத்தரவிட உயர் நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்ய உத்தரவிட உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத் துறையால் மார்ச் 21-ம் தேதி கைது செய்யப்பட்ட முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் சில தினங்களுக்கு முன்பு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், அர்விந்த் கேஜ்ரிவால் தனது கட்சியினருக்கு அனுப்பிய செய்திக்குறிப்பை அவரது மனைவி சுனிதா கேஜ்ரிவால் செய்தியாளர்கள் சந்திப்பில் நேற்றுவாசித்தார். அதில் கூறப்பட்டதாவது: … Read more

‘கட்டாயத்தால் அரசியல்வாதி ஆனவர் ராகுல் காந்தி!’ – பாஜக வேட்பாளர் கங்கனா கருத்து

புதுடெல்லி: “காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சொந்த விருப்பத்துக்கு மாறாக கட்டாயத்தினால் அரசியல்வாதியாக மாறியுள்ளதாக தெரிகிறது” என்று நடிகையும், பாஜக வேட்பாளருமான கங்கனா ரணாவத் கருத்து தெரிவித்துள்ளார். வரும் மக்களவைத் தேர்தலில் தனது சொந்த மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தின் மாண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார் கங்கனா. அவர் அளித்த பேட்டி ஒன்றில், “ஒரு விஷயத்தை அவரால் (ராகுல் காந்தி) செய்ய முடியுமா இல்லையா என்பதை பற்றி கவலை இல்லாம் தொடர்ந்து அவர் மீது அந்த விஷயம் … Read more

கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை 20 மணி நேரத்துக்குப் பின் மீட்பு

பெங்களூரு: கர்நாடகாவில் ஆழ்துளைக் கிணற்றில் தவறிவிழுந்த 2 வயது குழந்தையை 20 மணி நேர போராட்டத்துப் பின்னர் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர். நேற்று மாலை 6.30 மணியளவில் மீட்புப் பணி தொடங்கிய நிலையில் குழந்தை தற்போது உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டம் லச்சாயன் கிராமத்தில் நேற்று (ஏப்.3) மாலை ஸ்வஸ்திக் முஜகொண்டா என்ற 2 வயது ஆண் குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தது. வீட்டிலிருந்து விளையாட வெளியே சென்ற குழந்தை தவறிவிழுந்துவிட … Read more

பிஹாரில் சிராக் கட்சியின் 22 முக்கியத் தலைவர்கள் விலகல்: இண்டியா கூட்டணியை ஆதரிப்பதாக அறிவிப்பு

புதுடெல்லி: பிஹாரில் சிராக் பாஸ்வானின் லோக் ஜன சக்தி (எல்ஜேபி) கட்சியில் இருந்து 22 முக்கியத் தலைவர்கள் விலகியுள்ளனர். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத இவர்கள், இண்டியா கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனர். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணியின் உறுப்பினராக எல்ஜேபி உள்ளது. பிஹாரில் மொத்தம் உள்ள 40 மக்களவைத் தொகுதியில் இக்கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இவை சமஸ்திபூர், ஹாஜிபூர், வைஷாலி, ககரியா மற்றும் ஜமுவாய் ஆகியன. இவற்றில் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு அன்றி … Read more

ஹேமமாலினியை அவதூறாக பேசினாரா காங்கிரஸ் நிர்வாகி ரன்தீப்? – சர்ச்சையும் பின்னணியும்

பாஜக எம்.பி.யும், மதுரா தொகுதி வேட்பாளருமான ஹேமமாலினி குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், கட்சியின் மூத்த தலைவருமான ரன்தீப் சுர்ஜேவாலா பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், தனது கருத்தை பாஜக திரித்து வெளியிட்டிருப்பதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். “பாஜகவின் ஐ.டி துறை தலைவர் அமித் மாள்வியா தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்த வீடியோ எடிட் செய்யப்பட்டது. முழுமையாக வெளியிடாமல் சிதைத்து தவறாகப் பொருள்படும்படி வெளியிடப்பட்டுள்ளது. எனது நோக்கம் நிச்சயமாக ஹேமமாலினியை அவமதிப்பது … Read more

பட்டியலின இளம் பெண் வேட்பாளர்… யார் இந்த சாம்பவி சவுத்ரி? | 2024 தேர்தல் கள புதுமுகம்

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் களம் காணும் கவனிக்கத்தக்க புதுமுக வேட்பாளர்களைப் பற்றி பார்த்து வருகிறோம். அந்த வகையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள லோக் ஜனசக்தி கட்சியின் சார்பில் பிஹாரின் சமஸ்திபூர் தொகுதியில் களம் காண்கிறார் பிஹார் அமைச்சர் (ஜேடியு) அசோக் சவுத்ரியின் மகள் சாம்பவி குணால் சவுத்ரி. 25 வயதான இவர், பட்டியலின இளம் பெண் வேட்பாளர் என்ற அடையாளத்தையும் பெற்றுள்ளார். சமஸ்திபூர் தொகுதியில் களம் காணும் சாம்பவி குணால் சவுத்ரிவுக்கு சீட் கிடைத்ததில் அவரது … Read more

பங்குச்சந்தை முதலீடுகள், விவசாய நிலம் – ராகுல் காந்தி சொத்து மதிப்பு ரூ.20 கோடி

வயநாடு: மக்களவைத் தேர்தலில் வயநாடு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது வேட்புமனு தாக்கலின்போது பிரமாணப் பத்திரத்தில் தனக்கு 20 கோடி ரூபாய்க்கு சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி. இதற்கான வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் உடன் சொத்து மதிப்பு உள்ளிட்ட பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தார். அதில் தனக்கு 20 கோடி ரூபாய்க்கு சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி, … Read more