பஞ்சாபில் 8 வேட்பாளர்களை அறிவித்தது ஆம் ஆத்மி

இண்டியா கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சி இடம் பெற்றுள்ளது. என்றாலும் பஞ்சாபில் இக்கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. பஞ்சாபில் உள்ள 13 தொகுதிகளில் 8 தொகுதிகளுக்கான வேட்பாளர்களைக் கொண்ட முதல் பட்டியலை ஆம் ஆத்மி நேற்று வெளியிட்டது. இதன்படி கேபினட் அமைச்சர்களான குல்தீப் சிங் தலிவால், லால்ஜித் சிங் புல்லர், குர்மீத் சிங் குடியன், குர்மீத் சிங் மீத் ஹேயர், பல்பீர் சிங் ஆகியோர் முறையே அமிர்தசரஸ், கதூர் சாஹிப், பதிண்டா, சங்ரூர், பாட்டியாலா ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். … Read more

BS Yediyurappa : மைனர் சிறுமிக்கு பாலியல் தொல்லை, கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது போக்சோவில் வழக்கு

POCSO Act Against Former CM BS Yediyurappa: மைனர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தி அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

2024 மக்களவை தேர்தல் தேதி | தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட வாய்ப்பு

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதைத் தொடர்ந்து ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், 2024 ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 15) அறிவிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் மாநில வாரியான கள ஆய்வை தலைமைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. அண்மையில் ஜம்மு – காஷ்மீர் … Read more

மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் சுதா மூர்த்தி

புதுடெல்லி: பொறியாளராக இருந்து சமூக சேவகராக மாறிய இன்போசிஸ் சுதா மூர்த்தி மாநிலங்களவை எம்.பி.யாக நேற்று பதவியேற்றுக் கொண்டார். மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் நாடாளுமன்ற மண்டபத்தில் உள்ள அவரது அறையில்பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இன்போசிஸ் அறக்கட்டளையின் முன்னாள் தலைவரும், குழந்தைகளுக்கான பல புத்தகங்களை எழுதியவருமான சுதா மூர்த்தி (73)கடந்த வெள்ளிக்கிழமை சர்வதேசமகளிர் தினத்தன்று மாநிலங்களவைக்கு நியமன எம்.பி.யாக மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டார். கன்னடம், ஆங்கிலம் இலக்கிய படைப்பு பங்களிப்புக்காக சாகித்ய அகாடமி பால் சாகித்ய புரஸ்கார், … Read more

சிஏஏ சட்டத்தின்படி குடியுரிமைக்கு விண்ணப்பிக்க வரும் 19 முதல் பாக். இந்து அகதிகள் உயர் நீதிமன்றத்தை அணுகலாம்

புதுடெல்லி: டெல்லி வாழ் பாகிஸ்தான் இந்து அகதிகள் சிஏஏ சட்டத்தின் கீழ் குடியுரிமை பெற விண்ணப்பிக்க டெல்லி உயர் நீதிமன்றத்தை வரும் 19-ம் தேதி முதல் அணுகலாம் என்று பாகிஸ்தான் இந்து அகதி தரம்வீர் சோலங்கி தெரிவித்தார். கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) நிறைவேற்றப்பட்டது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளிலிருந்து 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவில் அடைக்கலம் புகுந்த இந்துக்கள்,சீக்கியர்கள், பவுத்த … Read more

ஹேமந்த் சோரனின் துன்புறுத்தல் புகார்: அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு ஜார்க்கண்ட் போலீஸ் சம்மன்

ராஞ்சி: தன்னையும் தன்னுடைய சமூகத்தையும் துன்புறுத்தி அவதூறு செய்தாகாக ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேம்ந்த் சோரன் அளித்த புகார் குறித்து மார்ச் 21-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு ஜார்க்கண்ட் போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். சம்மன் அனுப்பப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ள ராஞ்சியின் மூத்த காவல் கண்காணிப்பாளர் சாந்தன் குமார் சின்ஹா, அதுகுறித்த விபரங்களைக் கூற மறுத்ததுடன், மேலதிக தகவல்களை வழக்கு விசாரணை அதிகாரி வழங்குவார் என்று தெரிவித்தார். அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு எதிராக எந்த … Read more

ரூ.1,368 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கிய லாட்டரி மார்ட்டினின் நிறுவனம்

புதுடெல்லி: கோவையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் மார்ட்டினின் ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம் சார்பில் ரூ.1,368 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. கடந்த 2019 முதல் கடந்த ஜனவரி மாதம் வரையில் பல்வேறு காலகட்டங்களில் இதனை அந்நிறுவனம் வாங்கியுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, எஸ்பிஐ வங்கி அளித்த தேர்தல் பத்திரங்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் தனது அதிகாரபூர்வ தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. இதில் ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.1 கோடி ஆகிய … Read more

எம்.எஸ். சுவாமிநாதன் குழு அறிக்கையின்படி விவசாயிகளுக்கு காங்கிரஸ் அளித்த 5 வாக்குறுதிகள்

Congress Five Guarantees for Farmers: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் போது நாசிக்கில் நடந்த பேரணியில் விவசாயிகளின் பிரச்சனைகளை சுட்டிக்காட்டி மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். மேலும் விவசாயிகளுக்கு 5 வாக்குறுதிகளையும் அளித்தார்.

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் மம்தா

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில முதல்வர் நெற்றிப் பகுதியில் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார். அவர் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் உள்ள காளிகாட் வீட்டில் வியாழக்கிழமை அன்று கீழே விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது. 69 வயதான அவர், கொல்கத்தாவில் உள்ள எஸ்எஸ்கேஎம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. “ரத்தம் வழிந்த நிலையில் காயங்களுடன் முதல்வர் மம்தா … Read more

குடியுரிமை திருத்தம் சட்டம் தொடர்பாக மக்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் -ராஜ்நாத் சிங்

Citizenship Amendment Act: குடியுரிமை திருத்தம் சட்டம் மூலம் இந்தியாவில் வாழும் யாருடைய குடியுரிமையையும் பறிக்க முடியாது என மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார்.