ஹிஜாப் அணிய அனுமதி கோரிய வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்: இடைக்கால தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

பெங்களூரு: சிறுபான்மை வகுப்பு மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதி வழங்ககோரி தாக்கல் செய்துள்ள வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீட்ஷித் மாற்றி உத்தரவிட்டார். இஸ்லாமிய மாணவிகள் தாக்கல் செய்த மனு மீதான வழக்கில் இடைக்கால தடை விதிக்க கர்நாடக உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சிறுபான்மை வகுப்பு மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதற்கு தடை விதித்து கடந்த 5ம் தேதி கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உடுப்பி அரசு முதல்நிலை கல்லூரி மாணவிகள் … Read more

ஹிஜாப் விவகாரம்: மாணவ சமூகத்தையே கூறுபோடும் வெறுப்பரசியல் – மக்களவையில் சு.வெங்கடேசன் ஆவேசம்

புதுடெல்லி: “ஹிஜாப் அணிவதை முன்வைத்து கர்நாடகாவில் நடைபெறும் வெறுப்பரசியல் மாணவ சமூகத்தினையே கூறுபோட்டுக் கொண்டிருக்கிறது” என்று மக்களவையில் சு.வெங்கடேசன் எம்.பி ஆவேசமாக பேசினார். மக்களவையில் இன்று பேசிய அவர், “ஜனவரி 15 ஆம் தேதி தமிழகத்தில் தனியார் தொடைகாட்சியில் சிறார் நிகழ்சி ஒன்று ஒளிப்பரப்பானது. இந்த நிகழ்ச்சி பிரதமரின் மாண்பை குறைத்துவிட்டது என்று சொல்லி மத்திய இணை அமைச்சர் அவரே முன்வந்து புகாரினை கேட்டு வாங்கி அமைச்சகத்தின் மூலம் சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிலையத்திற்கு நோட்டீஸ் அனுப்புகிறார். இன்று … Read more

இவரை ஞாபகம் இருக்கா மக்களே? – காதலர் தினத்தில் போராட்டம் அறிவித்துள்ளார்!

சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒயின் வகை மதுவை விற்பனை செய்ய அனுமதி அளித்து புதிய சட்டத்தை மகாராஷ்டிர மாநில அரசு அண்மையில் கொண்டு வந்தது. இதன்படி 1,,000 சதுர அடிக்கும் மேல் பரப்பளவு கொண்ட சூப்பர் மார்க்கெட்களில் ஒயின் விற்பனை செய்யலாம். இதற்கு ஆண்டுக்கு 5,000 ரூபாய் உரிம கட்டணம் செலுத்த வேண்டும் என்று சிவசேனா அரசு தெரிவித்துள்ளது. மாநில அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சியான பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், சூப்பர் மார்க்கெட்டில் … Read more

ஹிஜாப் வழக்கு.. விரிவான அமர்வுக்குப் பரிந்துரை <!– ஹிஜாப் வழக்கு.. விரிவான அமர்வுக்குப் பரிந்துரை –>

கர்நாடகக் கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து செல்லத் தடை விதித்ததை எதிர்த்து மாணவியர் தொடுத்த வழக்குகளை விரிவான அமர்வு விசாரிக்கப் பரிந்துரைத்த உயர் நீதிமன்றத் தனி நீதிபதி, இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்துவிட்டார். நீதிபதி கிருஷ்ண தீட்சித் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் வழக்கறிஞரும், அரசு வழக்கறிஞரும் வழக்கை விரைந்து விசாரிக்கும்படி கேட்டுக்கொண்டனர். விரிவான பரிசீலனை தேவைப்படுவதால் விரிவான அமர்வுக்குப் பரிந்துரைப்பதாக நீதிபதி கிருஷ்ண தீட்சித் தெரிவித்தார். இதையடுத்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்கும்படி மனுதாரர்களின் வழக்கறிஞர்கள் கேட்டுக்கொண்டனர். … Read more

ஐ.ஏ.எஸ். அதிகாரியுடனான தொடர்பு குறித்து ஸ்வப்னாவிடம் இன்று விசாரணை

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 2019-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திற்கு வந்த பார்சலில் 30 கிலோ கடத்தல் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சுங்கதுறை அதிகாரிகள் வழக்குபதிவு செய்து தூதரக முன்னாள் அதிகாரி உள்பட சிலரை கைது செய்தனர். இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ஸ்வப்னா என்பவரும் கைதானார். இவருக்கும் கேரள அரசின் மூத்த ஐ.ஏ.எஸ்.அதிகாரி சிவசங்கரனுக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து அவரையும் அதிகாரிகள் கைது செய்தனர். ஜெயிலில் இருந்து விடுதலையான சிவசங்கரனுக்கு மீண்டும் … Read more

பொருளாதார வழித்தடம் குறித்த சீனா-பாக். கூட்டறிக்கையில் மீண்டும் காஷ்மீர் சர்ச்சை: இந்தியா கடும் கண்டனம்

புதுடெல்லி: பொருளாதார வழித்தடம் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக செல்வதாக குறிப்பிட்ட சீனா – பாகிஸ்தானின் கூட்டறிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வர்த்தக பயன்பாட்டிற்காக சீனா – பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை சீனா அமைத்து வருகிறது. இந்த வழித்தடம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக செல்கிறது. ஆனால், பொருளாதார வழித்தடம் குறித்து சீனா – பாகிஸ்தான் வெளியிடும் எந்தவொரு கூட்டறிக்கையிலும் இதை ஆக்கிரமிப்பு காஷ்மீர் என கூறாமல் ஜம்மு காஷ்மீர் என்று கூறுவதையே வழக்கமாக கொண்டுள்ளன.இந்நிலையில், பீஜிங்கில் … Read more

சாலைப் பராமரிப்புகளை மாநில அரசுதான் செய்யவேண்டும்: மக்களவையில் கனிமொழி கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் பதில்

புதுடெல்லி: மத்திய அரசிடம் தமிழகத்தின் கிராமப்புற சாலைகளை சீரமைப்பது தொடர்பாக திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பிய நிலையில், ‘அது மாநில அரசின் பொறுப்பு’ என்று கூறி மத்திய இணை அமைச்சர் ஃபகன்சிங் குளஸ்தே பதில் கொடுத்துள்ளார். பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை, கடந்த 2021 நவம்பரில் பெய்த பருவ மழை மற்றும் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன. இது தொடர்பாக இன்று திமுகவின் மக்களவைத் துணைத் தலைவர் கனிமொழி, … Read more

உ.பி: தேர்தலுக்கு முந்தைய நாள் கட்சி தாவிய வேட்பாளர்!

உத்தரப் பிரதேசத்தில் நாளை முதல் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கவுள்ளது. அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் பிரச்சாரத்தை முடித்துவிட்டனர். இந்த நிலையில், தேர்தலுக்கு முந்தைய நாளான இன்று கட்சி தாவியுள்ளார் வேட்பாளர் ஒருவர். உத்தரப் பிரதேச மாநிலம் சர்தாவால் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளராக யவர் ரோஷன் அறிவிக்கப்பட்டார். நாளை தேர்தல் தொடங்கவுள்ள நிலையில் யவர் ரோஷன் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து வெளியேறி சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளார். இது ஆம் ஆத்மி கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சியை … Read more

பெங்களூரில் 2 வாரங்கள் போராட்டம் நடத்தத் தடை.. <!– பெங்களூரில் 2 வாரங்கள் போராட்டம் நடத்தத் தடை.. –>

பெங்களூரில் பள்ளி கல்லூரிகளில் இருந்து 200 மீட்டர் சுற்றளவுக்குள் எந்த வகையான கூட்டங்களும் போராட்டங்களும் நடத்த இரண்டு வாரங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் பள்ளி கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவியர் ஹிஜாப் அணிவது தொடர்பாகப் போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் மாநிலம் முழுவதும் மூன்று நாட்களுக்குக் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் பெங்களூர் மாநகரக் காவல் ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பள்ளி கல்லூரிகளின் வாயிலில் இருந்து 200 மீட்டர் சுற்றளவுக்குள் கூட்டங்களோ, போராட்டங்களோ நடத்தத் தடை விதித்துள்ளது. இந்தக் … Read more

புலனாய்வு விசாரணை அமைப்புகளின் பணிகளில் மத்திய அரசு தலையிடவில்லை – பிரதமர் மோடி உறுதி

புதுடெல்லி: விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துகிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை பிரதமர் மோடி நிராகரித்துள்ளார். ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள சிறப்பு பேட்டியில் தெரிவித்துள்ளதாவது: மத்திய புலனாய்வு அமைப்பு,  மத்திய அமலாக்க இயக்குனரகம் உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் அவற்றின் விதிமுறைகளின்படி செயல்படுகின்றன. விசாரணை அமைப்புகளின் பணிகளில் அரசு தலையிடாது.  இந்தியாவில் ஊழல் என்பது கரையான்கள் போல நாட்டையே பாதிக்கிறது. இப்படிப்பட்டவர்களுக்கு எதிராக மக்கள் அவ்வப்போது குரல் எழுப்பவில்லையா? நான் ஒன்றும் செய்யவில்லை என்றால் … Read more