“விஜய்யுடன் சேர்ந்து பணியாற்ற தயார்” – ஓ.பி.ரவீந்திரநாத்

தேனி: தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல பாதையை வகுத்துத் தந்தால் நடிகர் விஜய் உடன் நாங்கள் இணைந்து பணியாற்ற தயாராகவே இருக்கிறோம் என தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் தெரிவித்தார். தேனியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.ரவீந்திரநாத், “திமுக வேட்பாளர் தங்கத் தமிழ்ச் செல்வன் கடந்தகாலங்களில் தேனி மாவட்டத்தின் செல்லப்பிள்ளை டிடிவி தினகரன் என்று அவர் வாயாலேயே சொல்லியிருக்கிறார். தேனி மக்களுக்கு அவர் மிகவும் பரிச்சயமானவர். அவர் எம்.பியாக இருந்தபோது கிராமம் கிராமமாக சென்றவர். நான் வேறு … Read more

இதையெல்லாம் செய்திருக்கிறேன்… குற்றச்சாட்டுகளுக்கு தமிழச்சி தங்கப்பாண்டியன் பதிலடி

DMK Candidate Thamizhachi Thangapandiyan: தென்சென்னையில் இரயில்வே துறை சார்ந்து தான் மேற்கொண்ட பணிகள் குறித்து தமிழச்சி தங்கப்பாண்டியன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் நிறைவு – இன்று பரிசீலனை

தமிழகத்தில் வேட்பு மனுத்தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. மனுக்கள் இன்று பரிசீலனை செய்யப்படுகின்றன. மக்களவைத் தேர்தல் அட்ட வணைப்படி முதல் கட்டமாக தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இடம்பெற்றுள்ளது. அதன்படி வரும் ஏப்.19-ம் தேதி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, கடந்த மார்ச் 20-ம் தேதி வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியது. முதல் நாளில் 22 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. மறுநாள் மார்ச் 21-ல் 9, 22-ம் தேதி 47 பேர் மனுக்களை … Read more

'மக்களவை தேர்தலில் போட்டியிட பணமில்லை…' நிர்மலா சீதாராமன் கூறும் காரணங்கள்!

Nirmala Sitharaman: தான் ஏன் மக்களவை பொதுத்தேர்தலில் போட்டியிடவில்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு காரணங்களை கூறி விளக்கம் அளித்துள்ளார். 

“கட்சி எல்லைகளைக் கடந்து பொதுவாழ்க்கையை நடத்தியவர் கணேசமூர்த்தி”- வைகோ புகழஞ்சலி

ஈரோடு: கட்சி எல்லைகளைக் கடந்து அனைத்துத் தரப்பினராலும் பாராட்டத்தக்க பொதுவாழ்க்கையை நடத்தியவர் என மறைந்த கணேசமூர்த்திக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினர் கணேசமூர்த்தி உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், மாரடைப்பு காரணமாக அவர் இன்று (வியாழக்கிழமை) காலை காலமானார். இந்நிலையில் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வைகோ வெளியிட்ட அறிக்கையில், “ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினரும், இளமைக் காலம் தொட்டு தியாக வேங்கையாக என்னோடு … Read more

'கொங்குச் சீமையின் கொள்கை வேங்கை' கணேசமூர்த்தி எம்.பி., மறைவு – வைகோ உருக்கம்

Erode MP Ganesamoorthy: ஈரோடு மதிமுக எம்.பி., கணேசமூர்த்தி உடல்நிலை குறைவு காரணமாக கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு  உயிரிழந்தார்.

ஈரோடு எம்பி கணேசமூர்த்தி காலமானார்

ஈரோடு: ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினர் கணேசமூர்த்தி உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், மாரடைப்பு காரணமாக அவர் காலமானார். ஈரோடு மக்களவைத் தொகுதி எம்பியாக தற்போது பதவி வகித்து வருபவர் அ.கணேசமூர்த்தி (77). கடந்த 2019-ம் ஆண்டு, மக்களவைத் தேர்தலின்போது, திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்த தேர்தலில் திமுகவின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு கணேசமூர்த்தி வெற்றி பெற்றார். ஐந்து ஆண்டுகளாக எம்பியாக பதவி வகித்து வந்த … Read more

அதிமுக வேட்பாளர்கள் ‘இரட்டை இலை’ சின்னம் பயன்படுத்த தடை இல்லை: டெல்லி நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை: அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கோரும் படிவங்களில் கையெழுத்திட பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு அதிகாரம் உள்ளது என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் ஆணையத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘தேர்தல் ஆணைய தரவுகளின்படி, நான்தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்பதால், வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கோருவதற்கான ஏ, பி படிவத்தில் கையெழுத்திட எனக்கு அதிகாரம் … Read more

நெல்லை தொகுதியில் காங்கிரஸ் போட்டி வேட்பாளர்கள் இருவர் மனு தாக்கல் – திமுக அணியில் சலசலப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் போட்டி வேட்பாளர்கள் இருவர் மனு தாக்கல் செய்துள்ளதால் திமுக கூட்டணி வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மக்களவை தொகுதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலின் இறுதி நாளான இன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கா.ப.கார்த்திகேயனிடம் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராபர்ட் புரூஸ் வேட்புமனு தாக்கல் செய்தார். இதையொட்டி, திமுக கூட்டணி கட்சியினர் அவருடன் ஊர்வலமாக வந்திருந்தனர். இந்நிலையில், அவருக்கு போட்டியாக திருநெல்வேலி மக்களவை தொகுதி … Read more

மதிமுக சின்னம் அப்டேட் முதல் பாமக வாக்குறுதி சலசலப்பு வரை | செய்தித் தெறிப்புகள் @ மார்ச் 27, 2024

தமிழகத்தில் ஏப்.1 முதல் ‘பூத் சிலிப்’ விநியோகம்: மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் புதன்கிழமை நிறைவடைந்தது. இந்த நிலையில், “இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழகத்தில் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில், 3.06 கோடி பேர் ஆண்கள், 3.16 கோடி பேர் பெண்கள் என 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.\ இதுவரை 68,144 வாக்கு மையங்கள் இருக்கும் சூழலில், தற்போது கூடுதலாக 177 வாக்குச்சாவடிகளை அமைக்கத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் அனுமதி … Read more