தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையால் பணத்தை இழக்கும் ஓசூர் தொழிலாளர்கள்!

ஓசூர்: ஓசூரில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையால், தொழிலாளர்கள் பலரும் பணத்தை இழந்து வருகின்றனர். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிற மாநில லாட்டரி சீட்டு விற்பனை அதிகரித்துள்ளது. இதில், குறிப்பாக ஓசூரில் தொழிலாளர்களை குறிவைத்து ஒரு எண் முதல் 4 இலக்கு எண் கொண்ட லாட்டரி சீட்டுகள் ரூ.25 முதல் ரூ.200 வரையில் விற்பனை செய்யப்பட்டுகிறது. இந்த லாரிட்டரிகள் பேருந்து … Read more

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடி அரசு.. தமிழக மக்களிடம் ஓட்டு கேட்பது நியாயமா? ஸ்டாலின் விளாசல்

DMK MK Stalin Slams Modi Government: தமிழ்நாடு மக்கள் வெள்ளத்தில் பாதித்து தவிக்கும் போது பார்க்க வராத பிரதமர் மோடி, ஓட்டு கேட்க மட்டும் அடிக்கடி வருகிறார் என தமிழக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

ரூ.1,000 கோடிக்கு அதிகமான நிதி நிறுவன மோசடியை விசாரிக்க தனி புலனாய்வு குழு – ஐகோர்ட் அறிவுறுத்தல்

மதுரை: ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நடைபெறும் நிதி நிறுவன மோசடியை விசாரிக்க தனி புலனாய்வு குழு அமைக்கலாம் என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட நியோ மேக்ஸ் நிதி நிறுவனம், தமிழகம் முழுவதும் கூடுதல் வட்டி, பணம் இரட்டிப்பு, பணத்துக்கு ஈடாக வீட்டடி மனை தருவதாக கூறி பல ஆயிரம் பேரிடம் ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து மோசடி செய்துள்ளது. இந்த மோசடி தொடர்பாக மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் … Read more

பெற்றோர் திட்டியதால் 10ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி! கால் எலும்பு முறிந்தது..

ஸ்ரீவைகுண்டம் அருகே பெற்றோர் திட்டியதால் பத்தாம் வகுப்பு மாணவி பள்ளியின் 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி. அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.   

அகதிகள் முகாமில் பிறந்தோருக்கு குடியுரிமை: மத்திய அரசு பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அகதிகள் முகாமில் பிறந்தவர்களுக்கு குடியுரிமை கோரி விண்ணப்பித்தால், குடியுரிமை சட்டத்துக்கு உட்பட்டு, பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ரவிகுமார் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் அகதிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டும். இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்த 94 ஆயிரம் பேரில் 59,500 பேர் முகாம்களில் உள்ளனர். … Read more

சென்னை மக்களே உஷார்!! மெட்ரோ இரயில் பணிகளுக்காக தற்காலிக போக்குவரத்து மாற்றம்!!

Chennai Metro: பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சொந்தமான நிலத்தின் வழியாக பரிந்துரைக்கப்பட்ட தற்காலிக சாலைபோக்குவரத்து மாற்று முன்மொழிவுக்கு பாதுகாப்பு அமைச்சகம் சமீபத்தில் அனுமதி வழங்கியுள்ளது.

ரூ.1 கோடி கேட்டு இபிஎஸ்ஸுக்கு எதிராக திமுக மான நஷ்ட வழக்கு @ போதைப் பொருள் விவகாரம்

சென்னை: ‘போதைப் பொருள் பறிமுதல் மற்றும் கைது விவகாரங்களில் திமுகவை தொடர்புபடுத்தி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தடை விதிக்க வேண்டும். ரூ.1 கோடி மான நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ.பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவில், ‘தமிழகத்தில் போதைப்பொருட்கள் பறிமுதல் மற்றும் கைது விவகாரத்தில் திமுகவை தொடர்புபடுத்தி அதிமுக … Read more

பிரதமர் மோடி மார்ச் 18-ல் கோவை வருகை – ‘ரோடு ஷோ’வில் பங்கேற்பு

கோவை: பிரதமர் நரேந்திர மோடி வரும் மார்ச் 18-ம் தேதி கோவைக்கு வருகிறார். கோவையில் மூன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு ‘ரோடு ஷோ’ நிகழ்வில் பங்கேற்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கிறார். மக்களவைத் தேர்தல் நெருங்குவதைத் தொடர்ந்து, பிரதான அரசியல் கட்சிகளின் சார்பில் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளன. பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நகரங்களுக்குச் சென்று தொடர்ச்சியாக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார். நடப்பாண்டில் தமிழகத்துக்கு மட்டும் பிரதமர் மோடி இதுவரை 4 முறை வந்துள்ளார். … Read more

கொளுத்தும் வெயில்.. நாளை முதல் கோயில்களில் இலவசமாக நீர்மோர் வழங்க அரசு ஏற்பாடு

தமிழ்நாட்டில் 48 கோயில்களில் நாளை முதல் பக்தர்களுக்கு இலவசமாக நீர்மோர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.  

வெயில் தாக்கம் | முதல்கட்டமாக நாளை முதல் 48 கோயில்களில் பக்தர்களுக்கு இலவச நீர்மோர்: அமைச்சர் சேகர்பாபு

சென்னை: வெயிலின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு கோயில்களில் கயிற்றால் ஆன விரிப்புகள் அமைக்கப்பட உள்ளதாகவும், முதல்கட்டமாக 48 முதுநிலை கோயில்களில் பக்தர்களுக்கு இலவச நீர்மோர் வழங்கப்படவுள்ளதாகவும் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். சென்னையில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “தமிழகத்தில் கருங்கல் பாதிக்கப்பட்டு வெயிலின் தாக்கத்தால், சூடேறி இருக்கும் கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கயிற்றால் ஆன விரிப்புகளைப் பயன்படுத்த முடிவெடுத்துள்ளோம். மேலும், தமிழகத்தில் … Read more