கோவையில் பிரதமர் மோடி பிரம்மாண்ட வாகனப் பேரணி – முழு விவரம்

கோவை: கோவையில், சாய்பாபா கோயிலில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரை இன்று (மார்ச் 18) பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட பிரம்மாண்ட வாகனப் பேரணி நடந்தது. இதில், லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மக்களவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் பல்வேறு நகரங்களுக்குச் சென்று சூறாவாளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்தச் சூழலில், கோவையில் பிரதமர் மோடி தலைமையில் பிரம்மாண்ட பேரணி நடத்த பாஜகவினரால் முடிவு செய்யப்பட்டது. … Read more

கன்னியாகுமரி மாவட்டத்தில் அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் பழங்குடியின கிராமம்!

கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையோர கிராமத்தில் எந்த வித அடிப்படை வசதிகளும் இன்றி தவிக்கும் ஆதிவாசி பழங்குடியின கிராமம்   

வாணியம்பாடி அருகே மாவட்ட நீதிமன்றம் அமைக்க திருப்பத்தூர் வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றம் வாணியம்பாடி அடுத்த சின்ன வேப்பம்பட்டு கிராமத்தில் 8 ஏக்கர் பரப்பில் அமைய இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு திருப்பத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வேலூர் மாவட்டத்துடன் இருந்த திருப்பத்தூர் கடந்த 2019-ம் ஆண்டு தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. அதன்பிறகு, மாவட்டத்துக்கு தேவையான அரசு அலுவலகங்கள், அரசு அதிகாரிகள் படிப்படியாக நியமிக்கப்பட்டனர். அதிலும், ஒரு சில அலுவலகங்கள் தற்போது வரை வேலூர் மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டுதான் கடந்த 3 … Read more

’தேசநலன் கருதி’ பாமக எடுத்த கூட்டணி முடிவு – பாஜகவுடன் சேரப்போகிறது! அதிமுக ஏமாற்றம்

pmk set to alliance with bjp: பாமக, பாஜகவுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் அறிவித்துள்ளார். எத்தனை தொகுதிகள் என்பது விரைவில் ராமதாஸ் அறிவிப்பார் எனவும் கூறியுள்ளார்.

உரிய தகுதியில்லாத செவிலியர்களை பணி நியமனம் செய்ததாக வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: உரிய தகுதியில்லாத செவிலியர்களை பணி நியமனம் செய்ததாக மருத்துவம் மற்றும் ஊரகப் பணிகள் இயக்குனர் உள்ளிட்டோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரோனா காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்ட செவிலியர்களை பணி நீக்கம் செய்து தமிழக அரசு கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி பிறப்பித்த அரசாணயை எதிர்த்து 977 செவிலியர்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி, … Read more

திமுக, காங்கிரஸ் கூட்டணி உத்தேச வேட்பாளர் பட்டியல்! யார் யார் எந்த தொகுதி?

DMK Congress Alliance Candidates for Lok Sabha Election 2024 in Tamil Nadu: திமுக, காங்கிரஸ் கூட்டணியில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் இருக்கும் தொகுதிவாரியாக போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் விவரம் வெளியாகியுள்ளது.

“தீவிர மக்கள் பணியாற்றவே விருப்பத்துடன் ராஜினாமா செய்தேன்” – தமிழிசை விளக்கம்

சென்னை: “தீவிரமான மக்கள் பணியாற்றுவதற்காக எனது விருப்பத்தின் பேரில் நான் ராஜினாமா செய்திருக்கிறேன். தெலங்கானா மக்கள் என்மீது காட்டிய அன்புக்கும், புதுச்சேரி மக்கள் என்மீது காட்டிய அபரிமிதமான அன்புக்கும் நான் நன்றி உடையவளாக இருப்பேன்” என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் சென்னை விமான நிலையத்தில் தமிழிசை சவுந்தரராஜன் திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “தீவிரமான மக்கள் பணிக்காகத் திரும்ப வேண்டும் என்பதற்காகத்தான், நான் மனமுவந்து ராஜினாமா செய்திருக்கிறேன். … Read more

கோவை: பிரதமர் மோடியின் பிரம்மாண்ட ரோடுஷோ! அப்போ நடந்த சுவாரஸ்ய சம்பவம்

Latest Update on Prime Minister Narendra Modi’s Car Rally in Coimbatore: கோவையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளும் ரோடுஷோ நிகழ்ச்சி துவங்கியது. வழிநெடுகிலும் பாஜக தொண்டர்கள் மலர் தூவி அவரை வரவேற்றனர்.

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு கிருஷ்ணகிரி தொகுதி ஒதுக்கீடு – ஐஸ்கீரிம் வழங்கி கொண்டாட்டம்

கிருஷ்ணகிரி: திமுக கூட்டணியில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், அக்கட்சியினர் பொதுமக்களுக்கு ஐஸ்கீரிம் கொடுத்தும், பட்டாசுக்கள் வெடித்தும் கொண்டாடினர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்று காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியானது. இதில், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி 5 … Read more

அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் நெறிமுறை குறித்து ஆலோசனை: கூடுதல் தலைமை செயலர்

சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கூடுதல் தலைமை செயலர் ராதாகிருஷ்ணனுடன் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.