“புதுச்சேரிக்கு தேவையான நிதியை பாஜக அரசு வழங்கவில்லை” – எடப்பாடி பழனிசாமி பேச்சு

புதுச்சேரி: “புதுச்சேரி தனி மாநில அந்தஸ்து பெற வேண்டும் என்றால் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற வேண்டும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற நாடாளுமன்றத்தில் அழுத்தம் கொடுக்கப்படும்” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். மேலும், “மத்தியில் காங்கிரஸ், பாஜக என மாறி மாறி ஆட்சிக்கு வருகிறது. ஆனால், எந்த ஆட்சி வந்தாலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு தேவையான நிதியை வழங்குவது கிடையாது” என்று அவர் குற்றம்சாட்டினார். புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் … Read more

தமிழகத்தில் முக்கிய வேட்பாளர்களின் சொத்து மதிப்பு – ஒரு பட்டியல்

2024-ம் ஆண்டு மக்களவைத் தொகுதிக்கான வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் முடித்து பரப்புரையை மேற்கொள்ள தொடங்கிவிட்டார்கள். முக்கிய வேட்பாளர்கள் தாக்கல் செய்திருக்கும் சொத்து மதிப்பு விவரம் என்ன என்பதைப் பார்க்கலாம். கனிமொழி: திமுக சார்பாக கனிமொழி கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் இம்முறையும் களம் காணுகிறார். கடந்த 26-ம் தேதி கனிமொழி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், தனக்கு மொத்தம் ரூ.57,32,21,177 மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஓ.பன்னீர்செல்வம்: ராமநாதபுரம் தொகுதியில் … Read more

வருமான வரித்துறை நோட்டீஸ்: இந்திய கம்யூனிஸ்ட் விளக்கம்

சென்னை: “வருமான வரித்துறை நோட்டீஸ் தொடர்பாக கட்சியின் தணிக்கையாளர்கள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில், “இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித் துறை ரூ.11 கோடி வரிப் பாக்கி நோட்டீஸ் கொடுத்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கட்சி நண்பர்கள், பொதுமக்களிடம் கேள்வி எழுந்துள்ளது. வருமானவரித் துறைக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வரி விலக்கு தொடர்பான கடிதப் … Read more

Mansoor Ali Khan : பலாப்பழ சின்னத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? மன்சூர் அலிகான் கூறிய ருசிகர பதில்!

 மன்சூர் அலிகான் வேட்புமனு தாக்கல் செய்யும்போது பலாப்பழம், லாரி, கிரிக்கெட் பேட் உள்ளிட்ட முன்று சின்னங்கள் கேட்டிருந்த நிலையில், தேர்தல் நடத்தும் அலுவலர் “பலாப்பழம்” சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளது.

விசிகவுக்கு பானை, மதிமுகவுக்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு

சென்னை: மக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருச்சி தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோவுக்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கட்சித் தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியிலும், பொதுச் செயலாளர் துரை.ரவிக்குமார் விழுப்புரம் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். இதுதவிர கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலங்கானா, மகாராஷ்டிரா மாநிலங்களிலும் விசிக போட்டியிடுகிறது. எனவே, இந்தத் தேர்தலில் தங்களுக்கு பானை சின்னத்தை, பொதுவான சின்னமாக … Read more

VCK: விசிக கேட்ட சின்னத்தை கொடுத்த தேர்தல் ஆணையம்… அதுவும் 2 தொகுதிகளுக்கும்!

VCK Party Symbol: இந்தியா கூட்டணி சார்பில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் பானை சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளது. 

“அன்று தினகரன் வீட்டுக் காவல் நாய்… இன்று நாங்கள் சீறும் சிங்கங்கள்!” – ஆர்.பி.உதயகுமார்

மதுரை: “ஜெயலலிதா இருக்கும்வரை டிடிவி தினகரனை பார்த்து பயந்தது உண்மைதான். டிடிவி தினகரன் வீட்டு காவல் நாயாக இருந்தோம். இப்போது சீறும் சிங்கங்களாக மாறிவிட்டோம்” என்று வாடிப்பட்டியில் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வாடிப்பட்டியில் ஆர்.பி.உதயகுமார் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “கடந்த 15 ஆண்டுகளாக தேனி பக்கமே எட்டிப் பார்க்காதவர் டிடிவி தினகரன். ஜெயலலிதாவால் நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியில் இருந்து 10 ஆண்டுகள் ஒதுக்கிவைக்கப்பட்டவர் அவர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழகத்தில் தலைகாட்ட ஆரம்பித்தார். ஆர்.கே.நகரில் 20 … Read more

பாஜகவின் அடிமடியிலேயே கைவைத்த கமல்! ஈரோட்டில் பின்பாயிண்ட் பேச்சு – பாஜக ரியாக்ஷன்?

ஈரோட்டில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த கமல்ஹாசன், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்துக்கு பாஜக எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

கரூர் | வேட்பாளர் இல்லாமல் அதிமுக பிரச்சாரம்: ஆரத்திக்கு ரூ.50 கொடுத்ததால் பெண்கள் வாக்குவாதம்

கரூர்: கரூரில் அதிமுக வேட்பாளரை அழைத்து வராமல் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பிரச்சாரம் செய்தார். அவர் சென்ற சில நிமிடங்களில் 2 மணி நேரத்திற்கு மேலாக தாம்பூலத் தட்டுடன் காத்திருந்த பெண்களுக்கு 50 ரூபாய் மட்டும் வழங்கியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதனால், அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கரூர் அதிமுக சார்பில் வீரராக்கியம் பகுதியில் … Read more

கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் ராமதாஸ் தேர்தல் பரப்புரை

கடலூர் நாடாளுமன்ற தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு மாம்பழ சின்னத்தில் வாக்கு கேட்டு, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விருத்தாச்சலம் வானொலி திடலில் தேர்தல் பரப்புரை செய்தார்.