அதிவேகமாக சென்ற கார் சாலையோரக் கடைகள் மீது மோதி விபத்து

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அதிவேகமாக சென்ற கார், சாலையோர கடைகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரிச்சாலை பகுதியில் சைலோ ரக காரில் சென்ற சுரேஷ் என்பவர், கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கடைகள் மீது வேகமாக மோதி விபத்தை ஏற்படுத்தினார். காரில் ஓட்டுநரும், உடனிருந்தவரும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படும் நிலையில், வியாபாரிகள் அவர்களை தாக்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விபத்தில் படுகாயமடைந்த சுற்றுலா பயணி மற்றும் … Read more

‘ஒரு நிலையம், ஒரு பொருள்’ திட்டம்: ரயில் நிலையங்களில் ரூ.1.20 கோடிக்கு விற்பனை – தெற்கு ரயில்வே

சென்னை: ரயில் நிலையங்களில் உள்ளூர் பொருட்களை விற்பனை செய்யும் ‘ஒரு நிலையம், ஒரு பொருள்’ திட்டத்தின் கீழ் தெற்கு ரயில்வேயில் உள்ள ரயில் நிலையங்களில் இதுவரை ரூ.1.20 கோடிக்கு உள்ளூர் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டள்ளன. பிரபலமான உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்க அருகில் உள்ள ரயில் நிலையங்களில் ‘ஒரு நிலையம், ஒரு பொருள்’ திட்டத்தின் கீழ் விற்பனை நிலையங்களை ரயில்வே அமைத்து வருகிறது. இதன்படி நாடு முழுதும் 5,000 ரயில் நிலையங்களில் இந்த விற்பனைக்கு அனுமதி அளிக்க இலக்கு … Read more

இலங்கை அதிபருக்கு எதிராக போராட்டம்; முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஆதரவு

Former Sri Lankan cricketers back protesters, ask President Gotabaya Rajapaksa to step down: இலங்கையின் மிக மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக அதிபர் கோட்டபய ராஜபக்சேவுக்கு எதிராக கொழும்பில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். “தோல்வியடைந்த” தலைவரை தூக்கி எறிவதற்காக தேசம் ஒன்றுபட்டதை நான் பார்த்ததில்லை என்று இலங்கையின் முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார். “தோல்வியடைந்த தலைவரை தூக்கி எறிய வேண்டும் என்ற ஒரே … Read more

ஓபிஎஸ் கூடாரம் காலியாகிறதா… கடைசி நேரத்தில் ஓடிவந்த 18 பேர்… "வலிமை" உடன் எடப்பாடி தரப்பு.! 

  அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கமும் ஓ பன்னீர்செல்வம் ஒரு பக்கமும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியை யார் கைப்பற்றுவார் என்பதை விட, பொதுச்செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி கைப்பற்றி விடக் கூடாது என்று, ஓ பன்னீர்செல்வம் தடுக்கும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். வருகின்ற 11ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. … Read more

உணவகங்கள், விடுதிகளில் சேவைக் கட்டணம் பெறக் கூடாது என வழிகாட்டுதலை உடனடியாக நடைமுறைப்படுத்த திட்டம்

உணவகங்களிலும் விடுதிகளிலும் வாடிக்கையாளர்களிடம் சேவைக்கட்டணம் பெறக் கூடாது எனப் பிறப்பித்த வழிகாட்டுதலை உடனடியாக நடைமுறைப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மாநிலத் தலைமைச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில், அரசின் வழிகாட்டுதல் குறித்துப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி கேட்டுக்கொண்டுள்ளது.   Source link

காட்டு யானை தாக்கி விவசாயி பலியான சம்பவம்: அரசுக்கு விஜயகாந்த் கண்டனம்

சென்னை: “வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனின் சொந்த மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் மூன்று பேர் காட்டு யானை தாக்க பலியாகியுள்ளனர். காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டாமல் தமிழக அரசு அலட்சியப் போக்குடன் செயல்படுகிறது. அப்பாவி மக்களின் உயிரோடு விளையாடும் வனத்துறை அமைச்சருக்கும் தமிழக அரசுக்கும் எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டம் ஆரோட்டு பாறை செல்வபுரத்தைச் சேர்ந்த … Read more

இலங்கை அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரார்கள்; வீடியோ

Sri Lanka protesters storm presidential palace as economic crisis deepens: இலங்கையின் மிக மோசமான பொருளாதார நெருக்கடி தொடர்பாக இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், வர்த்தக தலைநகர் கொழும்பில் உள்ள அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் அவரது செயலகத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் அதிபர் மாளிகை கட்டிடத்தை நோக்கி அணிவகுத்துச் செல்வதைக் காட்டும் வீடியோ கிளிப்புகள் சமூக ஊடகங்களில் வைரலாகின. செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, வார இறுதியில் திட்டமிடப்பட்ட … Read more

நாட்டில் அமைதியும், வளமும் பெருக பக்ரீத் திருநாளில் சபதம் ஏற்போம் : தமிழக இஸ்லாமிய அரசியல் தலைவர்கள் வாழ்த்து.!

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துணைப்பொதுச்செயலாளர் முஹம்மது ஷிப்லி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், “தியாகத் திருநாள் என்கிற பெருநாளை முஸ்லிம் சமுதாயம் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இந்நன்னாளில் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் சார்பில் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவிப்பதில் மகிழ்வுறுகிறேன். இப்ராஹீம் நபியின் வாழ்க்கையை மனித குலத்திற்கு படிப்பினையாக ஆக்கி,அவரது பாதையை முன்மாதிரியாக காட்டித் தருகிறான் இறைவன். படைப்புகள் கடவுள் அல்ல;படைத்தவனே கடவுள் என்ற கொள்கையை முன்வைத்து பிரச்சாரம் செய்ததால் ஏகத்துவ இமாம் இப்ராஹீம் நபி என அவரை முஸ்லிம்கள் போற்றுகிறார் … Read more

கார் மீது தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து ; இளம் தம்பதி சம்பவ இடத்திலேயே மரணம்

விருதுநகரில் கார் மீது தனியார் பேருந்து மோதியதில் சென்னையை சேர்ந்த இளம் தம்பதியினர் உயிரிழந்தனர். பெருங்குளத்தூர் பகுதியை சேர்ந்தவர் 30 வயதான மனோஜ். புல்லட் கம்பெனியில் மேலாளராக பணியாற்றிவரும் அவர் 27 வயதான தனது மனைவி நித்திஷா மற்றும் இரு குழந்தைகளுடன் காரில் நெல்லைக்கு சென்றுகொண்டிருந்தார். விருதுநகர் புதிய பேருந்துநிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது விருதுநகர் நோக்கி வந்துகொண்டிருந்த தனியார் பேருந்து கார் மீது நேருக்கு நேர் மோதியதில் மனோஜூம் அவரது மனைவியும் சம்பட இடத்திலேயே … Read more

பாலியல் வன்கொடுமையால் சிறுமி கர்ப்பம்: 24 வார கருவை கலைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு 

மதுரை: பாலியல் வன்கொடுமையால் கர்ப்பமான 15 வயது சிறுமியின் வயிற்றில் வளரும் 24 வார கருவை உடனடியாக கலைக்க மருத்துவக் குழுவுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த 15 வயது சிறுமி, வார இறுதி நாட்களில் அங்குள்ள தீப்பெட்டி தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்று வந்தார். அப்போது அதே தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளி ஒருவர், சிறுமியை திருமணம் செய்வதாக கூறி அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக கோவில்பட்டி அனைத்து … Read more