மலைக் கிராமத்துக்கு கழுதை மீது கொண்டு செல்லப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் @ தேன்கனிக்கோட்டை 

ஓசூர்: தேன்கனிக்கோட்டை மலைக் கிராமத்துக்கு சாலை வசதி இல்லாததால், கழுதை மீது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் பெட்டமுகிலாளம் ஊராட்சிக்கு உட்பட்ட மலைகிராமம் கடமாகுட்டை. இக்கிராமத்தில் 35-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் வசிக்கும் மக்கள் நாள்தோறும் தங்களது அன்றாட தேவைகளுக்கு மலையில் இருந்து 3.5 கி.மீ கீழே வந்து செல்கின்றனர். சாலை வசதி இல்லாததால் கரடுமுரடான சாலையில் செல்லும் நிலை உள்ளது. இக்கிராமத்தில் உள்ள 90 வாக்காளர்களுக்காக, … Read more

கோவையில் பாஜக நிர்வாகியிடம் ரூ.81,000 பறிமுதல்

கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே பாஜக நிர்வாகியிடம் ரூ.81 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொண்டாமுத்தூர், பூலுவப்பட்டி பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டபோது, சந்தேகத்திக்கிடமான வகையில் நின்ற ஜோதிமணி (37) என்பவரிம் விசாரணை நடத்தினர். அவர் அரசு டிரைவராக பணியாற்றி வருவதும், ஆலந்துறை பகுதியின் பாஜக மண்டல தலைவராக உள்ளதும் தெரியவந்தது. அதன்பின், ஜோதிமணியிடம் இருந்து ரூ.81 ஆயிரத்தை பறிமுதல் … Read more

மதுரை சித்திரைத் திருவிழா ஏற்பாடுகளை ஏப். 21-க்குள் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: மதுரை சித்திரைத் திருவிழா ஏற்பாடுகளை ஏப்ரல் 21-ம் தேதி மாலை 2 மணிக்குள் முடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை சித்திரை திருவிழாவில் போதுமான அளவு போலீஸ் பாதுகாப்பு, நடமாடும் மருத்துவ வசதி, குடிநீர் மற்றும் கழிவறை வசதிகளை வழங்கக் கோரி சிவகங்கை மணிகண்டன், மதுரை ரமேஷ் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு … Read more

திமுக, அதிமுக மீது புதிய புகார் அளித்துள்ள பாஜக! கோவையில் கலாட்டா!

கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுக மற்றும் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு  பணம் கொடுப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக கோவை மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் தலைமையில் பாஜகவினர் புகார் மனு அளித்தனர்.   

மதுரையில் பிள்ளையார் கோயிலில் வழிப்பட்ட பின் வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பி வைத்த அதிகாரிகள்!

மதுரை: மதுரையில் பிள்ளையார் கோயிலில் பூஜை செய்து வழிப்பட்ட பிறகு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தல் தளவாட பொருட்களை அதிகாரிகள் ஆயுதம் ஏந்திய போலீஸார் பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளுக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். தமிழகத்தில் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடக்கிறது. மதுரை மக்களவைத் தொகுதியில் 1,160 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வந்து வாக்களிக்க தேவையான குடிநீர், நிழல் பந்தல் போன்றவை அமைக்கப்பட்டன. வாக்குப்பதிவு இயந்திரங்கள், தளவாட … Read more

GPay மூலம் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் அண்ணாமலை? திமுக புகார்!

பாஜக வேட்பாளர் அண்ணாமலை ஆட்களை வைத்து டிஜிட்டல் பண பரிவர்த்தனை மற்றும் தொலைபேசி பிரச்சாரம் செய்து வருவதாக திமுக புகார் தெரிவித்துள்ளது.  

புதுச்சேரி – பாகூர் வாக்குச்சாவடியில் தாமரைப் பூ அலங்காரம் அகற்றம் | இடதுசாரிகள் எதிர்ப்பு எதிரொலி

புதுச்சேரி: புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது. இதற்கு கம்யூனிஸ்ட் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, அவற்றை தேர்தல் அதிகாரிகள் அகற்றி அப்புறப்படுத்தினர். புதுச்சேரி மக்களவை தொகுதிக்கான வாக்குப் பதிவு நாளை நடைபெற உள்ளது. நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்த நிலையில், நேரிலும், சமூக வலைதளம் மூலமாகவும் யாரும் வாக்கு கேட்கக் கூடாது என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. விதிமுறையை மீறி அரசியல் கட்சியினர் வாக்கு … Read more

தமிழகத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை சந்தித்த வழக்கறிஞர் குழு: காரணம் என்ன?

Lok Sabha Elections: மனுவினை பெற்றுக்கொண்ட தலைமை தேர்தல் அதிகாரி மனுவின் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து இருப்பதாகவும் கூறினார்.  

புதுச்சேரியில் ரூ.4.9 கோடி பறிமுதல் – 2 வீடுகளில் பறக்கும் படை அதிரடி

புதுச்சேரி: புதுச்சேரியில் இரு வீடுகளில் இருந்து ரூ.4.9 கோடியை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். வருமான வரித் துறையினர் விசாரணை நடந்து வருகிறது என்று மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி குலோத்துங்கன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க புதுவையில் 72 பறக்கும் படை அமைக்கப்பட்டு சோதனை செய்து வருகின்றனர். மாநில எல்லைகளிலும், வாகனங்களிலும் சோதனை செய்து வருகின்றனர். புதுச்சேரியில் பாஜக கட்சியினர் வாக்குக்கு ரூ.500-ம், காங்கிரஸ் கட்சியினர் வாக்குக்கு ரூ.200-ம் தருவதாக அதிமுக … Read more

கோவையில் வாக்கு இயந்திரங்களை பாதுகாப்புடன் கொண்டு செல்லும் போலீஸ்

வாக்குச்சாவடிகளுக்கு வாகனங்கள் மூலம் வாக்கு இயந்திரங்களை போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லும் பணி கோவையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.