"நாங்கள் மதம், சாதியை வைத்து அரசியல் செய்யவில்லை" – தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேச்சு

“ஆட்சிக்கு வந்த பிறகு மக்கள் பணி ஒன்றையே நோக்கமாகக் கொண்டு நாங்கள் செயல்பட்டு வருகிறோம். மதத்தை வைத்தோ, சாதியை வைத்தோ அரசியல் செய்யவில்லை” என்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் உரையாற்றினார். அரசின் திட்டங்களை அடுக்கிய அவர், “இந்த ஆட்சி மலர்ந்த இந்த … Read more

தமிழில் எழுப்பிய கேள்விக்கு ஹிந்தியில் பதில் அளித்த அமைச்சர்; தமிழக எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பு

Tamilnadu MPs oppose minister’s reply in hindhi: மக்களவையில் மதிமுக உறுப்பினர் கணேச மூர்த்தி தமிழில் எழுப்பிய கேள்விக்கு, மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இந்தியில் பதில் அளித்ததற்கு தமிழகத்தைச் சேர்ந்த மக்களைவை உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத்தில் அமைச்சர்கள் பதில் அளிக்கும்போது, அனைவருக்கும் தெரிந்த மொழியில் பேச வேண்டும் என்ற வேண்டுகோள், பல காலமாக பிற மொழி பேசும் மாநில உறுப்பினர்களால் வைக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பெரும்பாலான அமைச்சர்கள் ஹிந்தியிலே பதில் அளித்து … Read more

என் மனைவிக்கு ஒழுங்கா ஓட்டு போடு., கத்தியை காட்டி மிரட்டிய காங்கிரஸ் நகர எஸ்.சி. எஸ்.டி. துணைத்தலைவர்.!

நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளன.  வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட நிலையில், தற்போது வேட்பாளர்களும், அரசியல் கட்சி நிர்வாகிகளும், அமைச்சர்களும், கட்சித் தலைவர்களும் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர். இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ராமாபுரம் பகுதியை சேர்ந்த பூபாலன் (42வயது) மனைவி தனலட்சுமி, ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி 1-வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட களம் … Read more

பெற்றோரை தற்கொலைக்குத் தூண்டியதாக மகன் மீது வழக்குப்பதிவு <!– பெற்றோரை தற்கொலைக்குத் தூண்டியதாக மகன் மீது வழக்குப்பதிவு –>

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பெற்றோரை தற்கொலைக்குத் தூண்டியதாக மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சியோன்புரத்தைச் சேர்ந்த செல்வ ஜெயசிங் – தங்கம் தம்பதி, கடந்த திங்கட்கிழமை இரவு தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டனர். சம்பவத்தன்று செல்வ ஜெயசிங் தனது தம்பிக்கு போன் செய்து, “மகன்கள் தங்களை சரிவர கவனிக்கவில்லை, எனவே தாங்கள் தற்கொலை செய்துகொள்ளப் போகிறோம்” எனக் கூறியது விசாரணையில் தெரியவந்தது. தம்பதியின் இளைய மகன் ஏசு ஜெபினை பிடித்து விசாரிக்கையில், தனக்கு திருமணம் செய்துவைக்கக் கேட்டு, … Read more

ஸ்டாலினும் உதயநிதியும் நகைக்கடன் வாக்குறுதியால் மக்களை கடனாளியாக்கினர்: இபிஎஸ் பேச்சு

“மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஆகியோர் கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி செய்வோம் என பொய்யான வாக்குறுதி அளித்து மக்களை கடனாளியாக்கினர்” என்று தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சாடினார். மேலும், “அரசு அதிகாரிகள், காவல் துறையினர் திமுகவுக்கு சாதகமாக செயல்படுகின்றனர். இதை திருத்திக்கொள்ளாவிட்டால் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த உடன் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நிச்சயம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் எச்சரித்தார். வேலூர் மாநகராட்சி மற்றும் திருவலம் … Read more

திமுக அரசின் சாதனைகளை பழனிசாமி, பன்னீர்செல்வம் கும்பலால் தாங்க முடியவில்லை – ஸ்டாலின்

CM Stalin Tuticorin election campaign speech highlights: திமுக அரசின் சாதனைகளை பழனிசாமி, பன்னீர்செல்வம் கும்பலால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் திமுக கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை என்று பொய் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக காணொலி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின், திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் இன்று தூத்துக்குடி மாவட்ட திமுக வேட்பாளர்களை ஆதரித்து, பிரச்சாரம் … Read more

#BigBreaking || தொடரை கைப்பற்றி இந்திய அணி அபார வெற்றி.! பிரசித் கிருஷ்ணா அசத்தல் பந்து வீச்சு.!

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் நடந்து கொண்டிருக்கிறது. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று முன்னிலை பெற்றுள்ள நிலையில், இன்று இரண்டாவது ஆட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 5 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுக்க, நிதானமாக  ஆடிய … Read more

செல்பி எடுத்த போது பள்ளத்தாக்கில் விழுந்த இளைஞரின் உடல் 8 நாட்களுக்குப் பின் மீட்பு <!– செல்பி எடுத்த போது பள்ளத்தாக்கில் விழுந்த இளைஞரின் உடல் 8… –>

கொடைக்கானலில் செல்பி எடுக்கும் போது 1,500 அடி பள்ளத்தாக்கில் தவறி விழுந்த இளைஞரின் உடல் 8 நாட்களுக்குப் பின் மீட்கப்பட்டது. கடந்த வார புதன்கிழமை, ராம்குமார் என்ற இளைஞர், தடை செய்யப்பட்டுள்ள ரெட் ராக் பகுதியில் உள்ள பாறையின் முனையில் நின்று செல்பி எடுத்த போது தவறி பள்ளத்தாக்கில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. திங்கட்கிழமை டிரோன் கேமரா உதவியுடன் 1,500 அடி இளைஞரின் உடல் அழுகிய நிலையில் தலையின்றி கண்டுபிடிக்கப்பட்டது. பலத்த பனி மூட்டத்துக்கு மத்தியில், 2 நாட்களாக … Read more

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: பிப்.19-ல் பொது விடுமுறை – தமிழக அரசு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவு தினத்தன்று பொது விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகள் உள்ளன. இவற்றில்12,838 வார்டுகள் உள்ளன. இந்தவார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த ஜன.26-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, வரும் 19-ம் தேதி ஒருகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் வாக்குப்பதிவு காலை 7 … Read more

ஜமீன் ஊதிய மகுடிக்கு பாம்பாக ஆடிய கடம்பூர்… தேர்தல் ரத்து பின்னணி!

கடம்பூர் பேரூராட்சியில் தேர்தல் நடத்தும் அலுவலர் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வேட்புமனுக்களை நிராகரித்து சுயேச்சை வேட்பாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக புகார் எழுந்ததையடுத்து, கடம்பூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. மேலும், சுயேச்சைகளுக்கு ஆதரவான நிலை ஏற்படுவதற்கு காரணம் அங்கே உள்ள ஜமீன் குடும்பத்தினர் செல்வாக்கு செலுத்துவதாக வட்டரங்கள் தெரிவிக்கின்றன. தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் பேரூராட்சிக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவியாளர் சுயேச்சை வேட்பாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி மாநில … Read more