Acrobatic Dance: வாடிகனிலும் குதூகல டான்ஸ்! ரசித்து பார்க்கும் போப் வீடியோ வைரல்

வைரல் வீடியோ: சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. கைக்குள் மொபைலில் அடங்கிவிட்ட இணையம், நம்முடன் இணைந்தே பயணிக்கிறது. ஒருகாலத்தில் தனி உலகமாக கருதப்பட்ட இணையமும் தொழில்நுட்பமும் இன்று நம் கைக்குள் அடங்கிவிட்டன. பாரம்பரியமான நிகழ்ச்சியில் அல்லது மதச்சடங்கு தொடர்பான வீடியோக்களையும் சமூக ஊடகங்களில் வைரலாகின்றன. அப்படி ஒரு வீடியோ, கிறிஸ்துவர்களின் புனித நகரான வாடிகனில் போப்பாண்டவர் முன்னிலையில் நடைபெற்ற அக்ரோபாட்டிக் நடன நிகழ்ச்சி வைரலாகிறது. கென்யாவைச் சேர்ந்த “தி பிளாக் ப்ளூஸ் பிரதர்ஸ்” என்ற ஒரு … Read more

பிரிட்டன் நிலவரம்: சரியும் கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை…எகிறும் இஸ்லாமியர்கள் எண்ணிக்கை!

பிரிட்டனில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படுகிறது. அந்த வகையில், 2021ஆம் ஆண்டுக்கான பிரிட்டன் மக்கள் தொகை கணக்கெடுப்பின் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, இங்கிலாந்தில் முஸ்லீம்களின் மக்கள்தொகை அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. கூடுதல் ஆச்சரியமாக வரலாற்றில் முதல் முறையாக அந்நாட்டின் அதிகாரப்பூர்வ மதமான கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்திற்கும் கீழே குறைந்துள்ளது. சிறுபான்மை மக்கள் தொகையை விட, பிரிட்டனின் அதிகாரப்பூர்வ மதமான கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை முதன்முறையாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் தேசிய புள்ளியியல் … Read more

ISISI தீவிரவாதி அபு அல்-ஹசன் அல்-ஹஷ்மி அல்-குரைஷி இறந்தது உறுதியானது

ISISI Leader Killed: இஸ்லாமிய அரசு பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபு அல்-ஹசன் அல்-ஹஷிமி அல்-குரேஷி கொல்லப்பட்டார். இது தொடர்பாக செய்தி தெரிவித்த இஸ்லாமிய தேசம் (ஐஎஸ்) தீவிரவாத அமைப்பின் செய்தித் தொடர்பாளர்,  ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபு ஹசன் அல் ஹஷிமி அல் குரேஷி கொல்லப்பட்டதாக தெரிவித்தார், ஆனால், புதிய தலைவர் தொடர்பான எந்த விவரங்களையும் அவர் தெரிவிக்கவில்லை. டெலிகிராம் சேனலில் வெளியிடப்பட்ட ஆடியோ செய்தியில் ஐஎஸ்ஐஎஸ் தலைவர் கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. அபு அல்-ஹசன் அல்-ஹஷ்மி அல்-குரைஷி எதிரிகளுடன் போரிட்டு … Read more

உக்ரைன் போர் முடிவுக்கு வராததால் பொருளாதார நெருக்கடி: இந்தியாவிடம் உதவி கோருகிறது ரஷ்யா

புதுடெல்லி: ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும்ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ள நிலையில், ரஷ்ய தொழில் நிறுவனங்கள், தங்களின் உற்பத்திக்குத் தேவையான மூலப் பொருட்கள், உதிரிபாகங்கள் இல்லாமல் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றன. இதனால், கார், விமான தயாரிப்புக்குத் தேவையான முக்கிய உதிரிபாகங்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட பொருட்களை ஏற்றுமதிசெய்யுமாறு, இந்தியாவிடம் ரஷ்யா வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நவம்பர் 7-ம் தேதி ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொண்டார். அதற்கு முன்னதாக இந்தக் கோரிக்கையை, … Read more

மாஜி கால்பந்து ஜாம்பவான் பீலே மருத்துவமனையில் அட்மிட்| Dinamalar

சாபாலோ,: மாஜி கால்பந்து ஜாம்பவான் பீலே,82 உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாஜி கால்பந்து ஜாம்பவானான பீலே, 80 உலக கோப்பையை வென்ற பிரேசில் அணியில் 3 முறை இடம் பிடித்தார் . கடந்தாண்டு அவருக்கு பெருங்குடலில் சிறிய கட்டி (புற்றுநோய் ) இருப்பது கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டது. இந்நிலையில் நேற்று பீலேவுக்கு உடல் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பெருங்குடல் பகுதியில் பிரச்னை ஏற்பட்டது. தற்போது சிகிச்சை … Read more

மதரசாவில் குண்டு வெடிப்பு 10 மாணவர்கள் பரிதாப பலி

காபூல், ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு மதரசாவில், நேற்று நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தில், ௧௦ மாணவர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர். நம் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில், வடக்கு சமங்கன் மாகாணத்தின் தலைநகரான அய்பக்கில் இஸ்லாமிய மதக் கல்வி போதிக்கப்படும் மதரசா பள்ளி உள்ளது. இங்கு, நேற்று நடந்த குண்டு வெடிப்பில், ௧௦ மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர்; பல மாணவர்கள் காயமடைந்தனர். இச்சம்பவத்துக்கு, எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. … Read more

இடுக்கி அணையை காண இன்று முதல் அனுமதி| Dinamalar

மூணாறு: கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைகளையொட்டி இடுக்கி அணையைக் காண இன்று(டிச.,1) முதல் ஜன.31 வரை சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். இடுக்கி மாவட்டத்தில் உள்ள இடுக்கி அணை பல்வேறு வரலாற்று சிறப்புமிக்கதாகும். இடுக்கி அணை ஆர்ச் வடிவிலும், அதன் அருகே செருதோணி அணை நேர் வடிவிலும் கட்டப்பட்டுள்ளன. இருஅணைகளிலுமாக சேர்ந்து தண்ணீர் தேங்கும். செருதோணி அணையில் தான் தண்ணீர் திறக்கும் ஷட்டர்கள் உள்ளன. மின்வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அணை பாதுகாப்பு வளையத்தில் உள்ளது. ஓணம், கிறிஸ்துமஸ், புத்தாண்டு சீசன்களில் … Read more

இந்தியாவுடனான உறவில் தலையிடக் கூடாது சீனா எச்சரித்ததாக அமெரிக்க ராணுவம் தகவல்| Dinamalar

வாஷிங்டன், ‘இந்தியாவுடனான தங்களுடைய உறவில் தலையிடக் கூடாது’ என, சீன ராணுவம் எச்சரித்ததாக அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நம் நாட்டின் கிழக்கு லடாக்கில், ௨௦௨௦ மே மாதத்தில் சீன ராணுவம் அத்துமீற முயன்றது. இதை, நம் ராணுவம் தடுத்து நிறுத்தியது. இதைத் தொடர்ந்து, எல்லையில் இரு நாட்டுப் படைகளும் குவிக்கப்பட்டன. பல சுற்று பேச்சுகளுக்குப் பின், இரு நாடுகளும் சில இடங்களில் இருந்து ராணுவத்தை திரும்பப் பெற்றன. அதே நேரத்தில் பல இடங்களில் இரு … Read more

இன்று உலக எய்ட்ஸ் தினம்| Dinamalar

உலகின் மிகக் கொடிய நோய்களில் ஒன்று எய்ட்ஸ். எச்.ஐ.வி., (ஹியூமன் இம்யுனோ டெபிஷியன்சி வைரஸ்) எனும் வைரசால் ஏற்படுகிறது. இது மனித உடலில் உள்ள ரத்த வெள்ளை அணுக்களை அழிக்கிறது. பின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை தாக்கி, நோய்க்கு எதிராக உடல் போராட முடியாத நிலையை ஏற்படுத்துகிறது. கடைசியில் மரணம் ஏற்படுகிறது. இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக டிச.,1, உலக எய்ட்ஸ் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது எய்ட்ஸ் பாதிப்பு, தடுக்கும் முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக … Read more