அல்ஜீரியாவை அசைத்த இஸ்மாயில் படுகொலை: 49 பேருக்கு மரண தண்டனை விதிப்பு

அல்ஜியர்ஸ்: அல்ஜீரியாவில் சமூக ஆர்வலர் ஒருவர் தீ வைத்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் 49 பேருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அல்ஜீரியாவை சேர்ந்தவர் பென் இஸ்மாயில் (38). ஓவியர், இசை கலைஞர், சமூக வேகவர் என இஸ்மாயிலுக்கு பல முகங்கள் உண்டு. அல்ஜீரியாவின் மிலியானா பகுதியை சேர்ந்த இஸ்மாயில் கடந்த ஆண்டு டிசி மாவட்டத்துக்கு இடம்பெயர்ந்திருக்கிறார். அவர் இடம்பெயர்ந்தபோது அங்கு ஏற்பட்ட காட்டுத் தீ நிகழ்வு அல்ஜீரியாவை திருப்பிப் போட்டுள்ளது. காட்டுத் … Read more

7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசி., அபார வெற்றி| Dinamalar

ஆக்லாந்து: இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாம் லாதம் அதிரடியாக விளையாடி சதமடித்தார். நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, மூன்று ‛டி-20′, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்கிறது. ‛டி-20′ தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இந்த நிலையில் ஆக்லாந்தில் முதலாவது ஒருநாள் போட்டி நடந்தது. இதில் இந்திய அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக வழிநடத்துகிறார். ‛டாஸ்’ வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் … Read more

Gig workers: தற்காலிக தொழிலாளர்களுக்கு காப்பீட்டு வசதியை அதிகரிக்கும் சிங்கப்பூர்

சிங்கப்பூரில், 2024 இன் பிற்பகுதியில் மனிதவள அமைச்சகம் செயல்படுத்த எதிர்பார்க்கும் உத்தேச சட்ட மாற்றங்களின் கீழ், உணவு விநியோகம் மற்றும் வாகன ஓட்டுநர்களுக்கு (Gig workers) வேலையின்போது ஏற்படும் காயங்கள் மற்றும் சுகாதார  காப்பீடு மற்றும் ஓய்வூதிய கவரேஜை அந்நாட்டு அரசு விரிவுபடுத்தும். பொதுவாகவே, சிங்கப்பூர் தொழிலாளர் சட்டம் அனைத்து வகையான ஊழியர்களுக்கும் அடிப்படை விதிமுறைகள் மற்றும் பணி உரிமைகளை சமமாக ழங்குகிறது. இந்த சட்டம்  சில விதிவிலக்குகளுடன் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் பொருந்தும் வகையில் … Read more

634,000 SUV களை திரும்பப் பெறும் ஃபோர்டு! தீ விபத்து அச்சம்

நியூடெல்லி: உலகளவில் 634,000 ஸ்போர்ட் யூட்டிலிட்டி வாகனங்களை (SUV) திரும்பப் பெறுவதாக ஃபோர்டு கார் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தக் கார்களை வைத்திருக்கும் உரிமையாளர்கள் தங்கள் கார்களை பரிசோதிக்க வேண்டும் என்றும் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. இந்த SUV களில் உள்ள என்ஜின்கள் இயங்கும் போது, ​​கிராக் செய்யப்பட்ட ஃப்யூவல் இன்ஜெக்டர் எரிபொருளை அல்லது எரிபொருள் நீராவியை சூடான மேற்பரப்புகளுக்கு அருகில் குவித்து, வாகனத்தின் அடிப்புறத்தில் தீ ஏற்படலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இந்த முடிவை எடுத்திருப்பதாக ஃபோர்டு நிறுவனம் … Read more

அமெரிக்க கைக்கூலி; முட்டாள் அரசு – தெ.கொரியா மீது கிம் சகோதரி கடும் விமர்சனம்

பியாங்கியாங்: தென் கொரிய அரசை அமெரிக்காவின் கைக்கூலி என்றும் அதன் அதிபரை முட்டாள் என்றும் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார் வட கொரிய அதிபர் கிம்மின் சகோதரி கிம் யோ ஜாங். வட கொரியாவின் சமீபத்திய ஏவுகணை பரிசோதனைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும், ஜப்பானின் வலியுறுத்தல்படி வட கொரியாவின் மீது பொருளாதாரத் தடை விதிக்கவும் ஐக்கிய நாடுகள் சபை ஆயத்தமாகி வருகிறது. இதற்கிடையில் வட கொரியாவின் மீது கூடுதல் பொருளாதாரத் தடை விதிக்க தென் … Read more

நாஜி பாணியில் பாலியல் வன்புணர்வு செய்யும் வீடுகளில் வெள்ளைக்கொடி – ரஷ்யா அட்டூழியம்

ரஷ்யா – உக்ரைன் போர் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து நடைபெற்று வருகிறது. இதில், ரஷ்யா, உக்ரைன் என இரு தரப்பிலும் பல்லாயிரக்கணக்கான மக்களும், போர் வீரர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  வீடுகளை இழந்து அண்டை நாடுகளுக்கு உக்ரைனிய மக்கள் பலரும் அகதிகளாக குடிபெயர்ந்து வருகின்றனர். மேலும், ரஷ்யா இதில் போர் நெறிமுறைகளை மீறி செயல்படுவதாக தொடர் குற்றச்சாட்டுகளும் எழுந்து வந்தன.  குறிப்பாக, உக்ரைன் பெண்களை ரஷ்ய ராணுவ அதிகாரிகள், வீரர்கள் உள்ளிட்டோர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்குவதாகவும் குற்றச்சாட்டுகள் … Read more

ஒரே நாளில் 32,943 பேர் பாதிப்பு| Dinamalar

வூஹான்: சீனாவில் கடந்த சில நாட்களாக கோவிட் தொற்று அதிகளவு பரவி வரும் நிலையில், நேற்று (நவ.,24) ஒரேநாளில் 32,943 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் கோவிட் தொற்று கண்டறியப்பட்டது. அதன்பிறகு உலகம் முழுவதும் பரவிய தொற்றுக்கு லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். பல நாடுகளில் கோவிட் 3 அலைகளுக்கு மேல் ஏற்பட்டு, பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட போதிலும், சீனா தொற்று பாதிப்பில் இருந்து விரைவாக மீண்டது. தற்போது படிப்படியாக சில நாடுகளில் … Read more

நியூசி.,யை துாசியாக ஊதித்தள்ளிய இந்தியா: 306 ரன்கள் குவிப்பு| Dinamalar

ஆக்லாந்து: நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 306 ரன்கள் குவித்தது. ஷிகர் தவான், சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அரைசதம் அடித்து அசத்தினர். நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, மூன்று ‛டி-20′, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்கிறது. ‛டி-20′ தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இந்த நிலையில் ஆக்லாந்தில் முதலாவது ஒருநாள் போட்டி நடக்கிறது. இதில் இந்திய அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக வழிநடத்துகிறார். ‛டாஸ்’ வென்ற … Read more

நரப்பு மண்டலத்தை தாக்கும் நோவிசோக் விஷம்… எல்லை மீறுவாரா புடின்! அச்சத்தில் அமெரிக்கா!

Russia – Ukraine War: கடந்த 9 மாதங்களாக உக்ரைன் மற்றும் ரஷ்யா போரை உலகமே உற்றுப் பார்த்து வருகிறது. ரஷ்யா ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகள் மூலம் உக்ரைன் நகரங்களைத் தாக்கும் இடம். அதே நேரத்தில், உக்ரைனும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. ஆனால் இத்தனைக்கும் நடுவில் வேறு ஒரு பயம் அமெரிக்காவை கலங்க வைத்துள்ளது. உக்ரைனில் பெரிய அளவிலான இரசாயன ஆயுதத் தாக்குதல்களில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நோவிச்சோக் விஷத்தைப் பயன்படுத்தக்கூடும் என்று அமெரிக்க … Read more

பாகிஸ்தான் புதிய ராணுவ தளபதியாக அசிம் முனீரை நியமித்தார் பிரதமர்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவத் தளபதியாக உள்ள கமர் ஜாவேத் பாஜ்வா (61), மூன்று ஆண்டுகால பணி நீட்டிப்புக்கு பிறகு வரும் 29-ம் தேதி ஓய்வு பெறுகிறார். இந்நிலையில், புதிய ராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் அசிம் முனீர், முப்படைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் ஷாகிர் ஷம்ஷத் மிர்சா ஆகியோரை பிரதமர் ஷெபாஸ் ஷரீப் நியமனம் செய்துள்ளதாக தகவல் தொடர்பு அமைச்சர் மரியம் அவுரங்கசீப் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதனிடையே, புதிய ராணுவ தளபதி நியமனத்துக்கு அந்நாட்டு அதிபர் ஆரிப் … Read more