இந்தியாவுக்கு எதிரான கடைசி ‛டி-20: நியூசி., பேட்டிங்| Dinamalar

நேப்பியர்: நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 3 ‛டி-20′ மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் மோதுகிறது. முதல் ‛டி-20′ மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இன்று (நவ.,22) நேப்பியரில் உள்ள மெக்லீன் பார்க் மைதானத்தில் 3வது மற்றும் கடைசி ‛டி-20′ போட்டி நடக்கிறது. இன்றைய போட்டிக்கு முன்னதாக மழை குறுக்கிட்டதால் அரை மணி நேரம் தாமதத்திற்கு பிறகு ‛டாஸ்’ போடப்பட்டது. … Read more

‘ஆப்பிள்’ ஸ்டோருக்குள் புகுந்த கார்.. அங்கிருந்த வாடிக்கையாளர்கள் மீது கண்மூடித்தனமாக மோதியதில் ஒருவர் உயிரிழப்பு..!

அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் மாநிலத்தில் உள்ள ஆப்பிள் ஸ்டோரின் கண்ணாடி கதவுகளை உடைத்து, உள்ளே புகுந்த SUV ரக கார் அங்கிருந்த வாடிக்கையாளர்கள் மீது கண்மூடித்தனமாக மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். 16 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். கார் ஓட்டுநரை கைது செய்த போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்துவருகின்றனர். Source link

டி.வி.எஸ் ஆசியா ஒன் மேக் சாம்பியன்ஷிப் போட்டியில் அப்பாச்சி ஆர்.ஆர்.310 அதன் அதிகபட்ச வேகமான 211.2 கி.மீ வேகத்தை எட்டியது..!

தாய்லாந்தில் நடைபெற்ற TVS Asia One Make Championship பைக் பந்தயத்தில் TVS நிறுவனத்தின் Apache RR310 அதன் அதிகபட்ச வேகமான மணிக்கு 211.2 கி.மீ வேகத்தை எட்டியது. மேலும், உலக அளவில் போட்டியை வெற்றிகரமாக நடத்திய இந்திய நிறுவனம் என்ற பெருமையை TVS பெற்றுள்ளது. இப்போட்டியில் வோராபோங் மலாஹுவான் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். Source link

இனி ஆட்குறைப்பு இல்லை… ஆள் சேர்ப்பு தான்… எலான் மஸ்கின் அடுத்த அதிரடி!

ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதில் இருந்து எலான் மஸ்க் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஆட்குறைப்பு, வேலை நேரத்தை அதிகரித்தல் போன்ற அமைப்பு ரீதியான மாற்றத்தை தொடர்ந்து, இப்போது ஊழியர்களுக்கு நிமத்தி அளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது. ட்விட்டரின் 7,500 ஊழியர்களில் மூன்றில் இரண்டு பங்கு பணியாளர்களை பணிநீக்கம் செய்யப்பட்ட பிறகு, நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க், தற்போது, ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இப்போது நிறுவனத்தில் பணிநீக்கங்கள் இருக்காது என்பதோடு,  புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்படும் … Read more

கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடுமையாக குறைந்துள்ள கச்சா எண்ணெய் விலை.!

கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை கடுமையாக குறைந்துள்ளது. கச்சா எண்ணெய் உற்பத்தியை நாள் ஒன்றுக்கு 5 லட்சம் பீப்பாய்கள் வரை அதிகரிப்பது தொடர்பாக டிசம்பர் 4-ம் தேதி நடைபெறும் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்புக் கூட்டத்தில் பரிசீலிக்கப்படும் என அறிவித்ததையடுத்து கச்சா எண்ணெய் விலை சரிந்தது. ஜனவரி மாதத்திற்கான பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1.41 டாலர் குறைந்து பீப்பாய் ஒன்றுக்கு 86.21 டாலராக இருந்தது. அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் … Read more

சீனாவில் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து.. 36 பேர் உடல்கருகி உயிரிழப்பு.!

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 36 தொழிலாளர்கள் உடல்கருகி உயிரிழந்தனர். அன்யாங் நகரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் திங்கள்கிழமை பிற்பகலில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு 63 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிகாலை வரை கொழுந்து விட்டு எரிந்த தீயில் கருகி இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. Source link

ப்ளூ டிக் மறுவெளியீடு மீண்டும் தள்ளிவைப்பு: ஆள்மாறாட்டத்தை தடுக்க மஸ்க் ஆலோசனை

சான் ஃப்ரான்சிஸ்கோ: ட்விட்டரில் ப்ளூ டிக் அங்கீகாரத்தை பயனர்களுக்கு மறுவெளியீடு செய்வதை மீண்டும் தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அதன் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். முன்னதாக வரும் 29ம் தேதி முதல் ப்ளூ டிக் பெறும் திட்டம் மறுவெளியீடு செய்யப்படும் என்றும், இம்முறை இத்திட்டம் மேலும் உறுதியாக செயல்படுத்தப்படும் என்றும் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். ஆனால் இது தொடர்பாக இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ப்ளூ டிக் மறுவெளியீட்டை தற்காலிகமாக நிறுத்திவைக்கிறோம். ஆள்மாற்றாட்ட பிரச்சினையைத் தீர்க்கும் நம்பிக்கை … Read more

டெயில் விளக்குகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் அமெரிக்காவில் 3.21 லட்சம் கார்களை திரும்பப் பெறுகிறது டெஸ்லா..!

டெயில் விளக்குகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறு காரணமாக எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் அமெரிக்காவில் 3 லட்சத்து 21 ஆயிரம் மின்சாரக் கார்களை திரும்பப்பெறுகிறது. 2020 முதல் 2023 வரையிலான மாடல் 3 மற்றும் ஒய் மாடல் வாகனங்களில் டெயில் விளக்குகள் ஒளிரவில்லை என வாடிக்கையாளர்கள் அளித்த புகாரை அடுத்து டெஸ்லா நிறுவனம் நடத்திய ஆய்வில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. தொழில்நுட்பக்கோளாறு காரணாக கடந்த செப்டம்பரில் 11 லட்சம் கார்களை டெஸ்லா திரும்பப்பெற்றது. Source link

அபுதாபி சால்ட் பே ரெஸ்டாரன்டில் தங்க முலாம் பூசிய இறைச்சி விலை ரூ.1.3 கோடி

அபுதாபி: துருக்கியைச் சேர்ந்த பிரபல சமையல் கலைஞர் நுஸ்ரத் கோக்சி. இவர் சால்ட் பே என்று பரவலாக அழைக்கப்படுகிறார். உலகின் முக்கிய நகரங்களில் இவருடைய ரெஸ்டாரன்ட்கள் நுஸ்ரத் என்ற பெயரில் இயங்கி வருகின்றன. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் தயாரித்த 24 கேரட் தங்க முலாம் பூசிய இஸ்தான்புல் இறைச்சி புகைப்படத்தையும், வீடியோவையும் வெளியிட்டுள்ளார். இதன் விலை ரூ.1.3 கோடி. அதில் 14 பேர் கொண்ட குழுவினர் இந்த சால்ட் பே 24 கேரட் தங்க … Read more

ரூ.12,700 கோடிக்கும் அதிகமாக சொத்து சேர்த்த பாக். ராணுவத் தளபதி குடும்பம் – வெளியான அறிக்கை

பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வாவின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், கடந்த ஆறு ஆண்டுகளில் அவரது குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்கள் பன்மடங்கு உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான டேமேஜிங் அறிக்கையில், 6 ஆண்டுகளில் பஜ்வாவின் மனைவி ஆயிஷா அம்ஜத், மருமகள் சபீர் மற்றும் பிற நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் கோடீஸ்வரர்களாகி, சர்வதேச வணிகத்தைத் தொடங்கி இஸ்லாமாபாத் மற்றும் கராச்சியில் பண்ணை வீடுகள், ரியல் எஸ்டேட், வெளிநாட்டு சொத்துக்களை வாங்கி அதிக பணம் … Read more