ஆஸ்திரேலியாவில் கொத்து, கொத்தாக கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்

கான்பெர்ரா, ஆஸ்திரேலியா நாட்டின் டாஸ்மேனியா தீவில் உள்ள மேக்வாரி துறைமுகத்துக்கு அருகே உள்ள கடற்கரையில் நேற்று 200-க்கும் அதிகமான திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. ஒரே நேரத்தில் கொத்து, கொத்தாக திமிங்கலங்கள் கரை ஒதுங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவற்றில் பாதிக்கும் அதிகமான திமிங்கலங்கள் இன்னும் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது. எனவே அவற்றை மீட்டு மீண்டும் கடலுக்குள் விடுவதற்கான முயற்சிகளில் கடற்படையினரும், தன்னார்வலர்களும் ஈடுபட்டுள்ளனர். எனினும் திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ள இடம் சிக்கலான பகுதியாக இருப்பதால் மீட்பு குழுக்களால் உடனடியாக … Read more

கத்தாரில் நடைபெற உள்ள 2022 பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரம்

தோகா, 2022 பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் வரும் நவம்பர் 20-ந்தேதி முதல் டிசம்பர் 18-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியை நடத்த கத்தார் வேகமாக தயாராகி வருவதாக பிபா உலகக்கோப்பை போட்டிக்கான உச்சிக்குழு பொதுச்செயலாளர் ஹசன் அல் தவாடி கூறியுள்ளார். மத்திய கிழக்கு மற்றும் அரபு நாடுகளில் முதல் முறையாக பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற உள்ளது. மொத்தம் 8 விளையாட்டு அரங்கங்களில் 64 போட்டிகள் நடைபெற உள்ளன. … Read more

உக்ரைன் போர் தொடர்பாக ரஷிய அதிபரிடம் பிரதமர் மோடி பேசியது சரியானது தான்- பிரான்ஸ் அதிபர் பாராட்டு

நியூயார்க், கடந்த வாரம் உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்துப் பேசினார். அப்போது உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டு வருமாறு கேட்டுக் கொண்ட அவர், போருக்கான நேரம் இதுவல்ல என்று வலியுறுத்தினார். மேலும் இது குறித்து ஏற்கனவே பலமுறை தொலைபேசி வாயிலாக பேசியதையும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார். அதற்கு பதிலளித்த ரஷிய அதிபர் புதின், போரை முடிவுக்கு கொண்டு வர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் … Read more

Russia Ukraine War: ரஷ்யாவுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்ததே இல்லை: வடகொரியா

ரஷ்யா உக்ரைன் போர்: சர்வதேச அளவில் ஏழு மாத காலமாக பல சிக்கல்களை ஏற்படுத்தியிருக்கும் ரஷ்யா – உக்ரைன் யுத்தம் முடிவுக்கு வருவதாக தெரியவில்லை. இரு தரப்பிலும் ஒரு சாமதானத்திற்கு நிலையில், போரின் நேரடி மற்றும் பக்க விளைவுகளை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். போர் மீண்டும் வேறொரு வடிவத்தை எடுத்து வரும் நிலையில், ரஷ்யா, வட கொரியாவிடமிருந்து ராக்கெட்டுகள் மற்றும் பீரங்கிகளை வாங்குகிறது என்று சில வாரங்களுக்கு முன்னதாக அமெரிக்கா குற்றம் சாட்டியிருந்தது. இது கவலைகளை மேலும் அதிகரித்த நிலையில், … Read more

பிரான்சில் மின்சாரம், எரிவாயு விலை உயர்வுக்கு கட்டுப்பாடு விதிக்க முடிவு

பாரிஸ், பிரான்ஸ் நாட்டில் அதிகரித்து வரும் எரிபொருள் விலை உயர்வை கருத்தில் கொண்டு, அங்கு அடுத்த ஆண்டு முதல் எரிபொருள் விலை கட்டுப்பாடு விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எரிவாயு மற்றும் மின்சாரத்திற்கான வீட்டு கட்டணங்களுக்கு 15 சதவீதம் உச்ச வரம்பு விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதில் எரிவாயு கட்டணத்திற்கான உச்ச வரம்பு ஜனவரியில் இருந்தும், மின்சார கட்டணத்திற்கான உச்ச வரம்பு பிப்வரியிலும் நடைமுறைக்கு வரும் என கூறப்படுகிறது. பிரான்ஸ் நாட்டிற்கு கிடைத்து வந்த … Read more

செவ்வாய் கிரகத்தில் உப்பு கலந்த நீர்-தாங்கும் கனிமங்கள் – சீனாவின் ஆய்வில் தகவல்

பெய்ஜிங், செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக சீனாவின் விண்வெளித்துறை டியான்வென்-1 என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. இந்த விண்கலத்தின் ஆர்பிட்டர், செவ்வாய் கிரகத்தைச் சுற்றி தனது சுற்றுவட்டப் பாதையில் 780 நாட்களுக்கும் அதிகமாக பயணித்துள்ளது. அதே போல் இந்த விண்கலத்தின் ‘ரோவர்’ செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் சுமார் 1,921 மீட்டர் தூரம் பயணித்துள்ளது. இதன் மூலம் மொத்தம் 1,480 ஜி.பி. அளவிலான தரவுகளை இந்த விண்கலம் சேமித்துள்ளது. இந்த தரவுகளின் அடிப்படையில், செவ்வாய் கிரகத்தில் நீர் தாங்கும் கனிம … Read more

அணு ஆயுத தாக்குதல் நடத்த தயங்க மாட்டோம் – அதிபர் விளாடிமிர் புதின் கடும் எச்சரிக்கை

மாஸ்கோ: ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தினால், ரஷ்யாவையும், அதன் எல்லைகள் மற்றும் மக்களையும் பாதுகாக்க, அணு ஆயுத தாக்குதல் நடத்தவும் தயங்க மாட்டோம் என்று மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யாவில் இருந்து பிரிந்து சென்ற உக்ரைன், ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைய விரும்பியது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ரஷ்யா, கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் பகுதிக்குள் ஊடுருவி, தாக்குதலைத் தொடங்கியது. கடந்த 6 மாதங்களுக்கு மேலாக நடந்து வரும் ரஷ்ய-உக்ரைன் போரால் … Read more

மோடி சொன்னது தான் சரிபிரான்ஸ் அதிபர் பாராட்டு| Dinamalar

நியூயார்க், :ஐ.நா., பொது சபை கூட்டத்தில் பேசிய பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சை குறிப்பிட்டு, பாராட்டு தெரிவித்தார்.மத்திய ஆசிய நாடான உஸ்பெகிஸ்தானில் சமீபத்தில் எஸ்.சி.ஓ., எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் நடந்தது. அப்போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது தொடர்பாக இருவரும் பேசியபோது, ‘இந்த யுகம் போருக்கானது அல்ல; எந்தப் பிரச்னைக்கும் ஜனநாயக … Read more

3,00,000 வீரர்களைதிரட்டுகிறது ரஷ்யா| Dinamalar

மாஸ்கோ :உக்ரைன் மீதான போர் துவங்கி, ஏழு மாதங்கள் எட்டியுள்ள நிலையில், தன் ராணுவத்துக்கு, மூன்று லட்சம் வீரர்களை திரட்டுகிறது ரஷ்யா. இந்நிலையில், நேற்று ‘டிவி’ வாயிலாக, நாட்டு மக்களிடையே பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா கடந்த பிப்., 25ல் போர் தொடுத்தது. தற்போது, போர் ஏழு மாதங்களை எட்டியுள்ள நிலையிலும், அது நீடித்து வருகிறது. இதற்கிடையே ரஷ்யப் படைகளுக்கு எதிராக, உக்ரைன் … Read more

வைரஸை உணர்ந்து குறுஞ்செய்தி அனுப்பும் முக கவசம்..! – சீன விஞ்ஞானிகளின் சூப்பர் கண்டு பிடிப்பு..!

கொரோனா வைரஸை உணர்ந்து குறுஞ்செய்தி அனுப்பும் முக கவசம் சீனாவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தோற்று உலக மக்களை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளது. இந்நிலையில் இன்னும் கொரோனா வைரஸ் இன்னும் முழுமையாக ஒழிந்து விடாத நிலையில் மக்கள் இன்னும் அச்ச உணர்விலேயே இன்னும் வாழ்ந்து கொண்டு உள்ளனர். இந்த கோரோனா வைரசை கட்டுபடுத்த பல்வேறு வழிமுறைகள் பின்பற்றப்பட்டாலும் இன்னும் அதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் காற்றில் வைரஸ் … Read more