வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது இந்திய அணி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் செயின்ட் கிட்ஸ்: மூன்றாவது ‘டி-20’ போட்டியில் சூர்யகுமார் யாதவின் அதிரடி கைகொடுக்க, வெஸ்ட் இண்டீசை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் வென்றது. மூன்றாவது போட்டி செயின்ட் கிட்சில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா ‘பவுலிங்’ தேர்வு … Read more

டேபிள் டென்னிசில் மீண்டும் தங்கம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பர்மிங்காம்: காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் வரலாற்றில் தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்திய ஆண்கள் அணி தங்கப்பதக்கம் கைப்பற்றியது. ஆண்களுக்கான டேபிள் டென்னிஸ் அரையிறுதியில் இந்திய ஆண்கள் அணி, நைஜரை சந்தித்தது. முதலில் நடந்த இரட்டையர் போட்டியில் சத்யன், ஹர்மீத் தேசாய் ஜோடி 3-0 என போடு, ஒலாஜைடு ஜோடியை வென்றது. முதல் ஒற்றையர் போட்டியில் அஜந்தா சரத்கமல், 3-1 என காட்ரியை வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் சத்யன் 3-1 என … Read more

பாக்., ஹெலிகாப்டர் விபத்து கமாண்டர் உட்பட 6 பேர் பலி| Dinamalar

இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில், ராணுவ கமாண்டர் உட்பட, ஆறு பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஆறு பேரும் உயிரிழந்தனர். நம் அண்டை நாடான பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் கன மழை மற்றும் வெள்ளத்திற்கு, 147 பேர் பலியாகியுள்ளனர்; ஏராளமானோர் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான நிவாரண உதவிகளை மேற்பார்வையிட, லெப்டினன்ட் ஜெனரல் சர்பராஸ் அலி உட்பட ஆறு ராணுவ வீரர்கள், உத்தல் பகுதியில் இருந்து கராச்சிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டனர். ஆனால், … Read more

அமெரிக்கா ட்ரோன் தாக்குதலில் அல் — குவைதா தலைவர் பலி| Dinamalar

வாஷிங்டன்:அல் – குவைதா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அய்மான் அல் – ஜவாஹிரி, 71, அமெரிக்க உளவு அமைப்பான, சி.ஐ.ஏ., நடத்திய அதிரடி ‘ட்ரோன்’ தாக்குதலில் கொல்லப்பட்டார். ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள ஒரு வீட்டில் அவர் பதுங்கியிருந்த போது, இந்த அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டது.அமெரிக்காவில், 2001 செப்., 11ல் விமானங்களை கடத்தி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட அல் – குவைதா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன், 2011ல் பாகிஸ்தானில் பதுங்கியிருந்த போது, … Read more

தைவான் வந்திறங்கினார் நான்சி பெலோசி: தைவானில் பதற்றம் அதிகரிப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங்: சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி அமெரிக்க பார்லி. சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் சென்றடைந்தார். அவருக்கு தைவான் ராணுவம் பாதுகாப்பு அளித்து. கடந்த 1949ல் நடந்த உள்நாட்டு போரைத் தொடர்ந்து, சீனாவும், தைவானும் பிரிந்தன. இரு நாடுகளுக்கும் அதிகாரப்பூர்வ உறவு இல்லையெனினும், சீனா தைவான் நாட்டை சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்நிலையில், அமெரிக்க பார்லி., சபாநாயகர் நான்சி பெலோசி, தைவானுக்கு செல்ல திட்டமிட்டுள்ளது சீனாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து … Read more

பெலோசி விமானத்தை பின்தொடர்ந்த 7 லட்சம் பேர்..!| Dinamalar

தைபே : சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி தைவானில் தரையிறங்கிய சபாநாயகர் நான்சி பெலோசியின் விமானத்தை, 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பின்தொடர்ந்துள்ளனர். கடந்த 1949ல் நடந்த உள்நாட்டு போரைத் தொடர்ந்து, சீனாவும், தைவானும் பிரிந்தன. ஆனால் தன்னாட்சி பெற்ற நாடான தைவானை சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதனிடையே அமெரிக்க பார்லி சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் செல்லவிருப்பதாக அறிவிப்பு வெளியானது. பெலோசியின் பயணத்திற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. எதிர்ப்புகளை மீறி அமெரிக்க … Read more

எதிர்ப்பை மீறி தைவான் செல்லும் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் – சீனா எச்சரிக்கை ..!

அமெரிக்க நாடாளுமன்றத்தின் சபாநாயகராக பதவி வகிப்பவர் நான்சி பொலேசி. இந்நிலையில் நான்சி பல்வேறு நாடுகளுக்கு தனது சுற்றுப்பயணத்தை துவங்கியுள்ளார். சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக தாய்வானுக்கும் சொல்கிறார். சீனாவில் இருந்து பிரிந்த நாடு தாய்வான் என்பதால் தைவானை மீண்டும் சீனாவில் இணைக்க சீனா முயற்சித்து வருகிறது. இந்நிலையில் நான்சி தைவானுக்கு பயணம் செய்வது சீனாவை கோபம் கொள்ளச் செய்துள்ளது. நான்சி பெலோசி, இன்று இரவு தைவான் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கான சிவப்பு கம்பள வரவேற்பு தயாராகி … Read more

வெள்ளத்தில் சிக்கிய காரில் இருந்து பெண்ணை போராடி மீட்ட போலீசார்

அமெரிக்காவின் ஹரிசோனா மாகாணத்தில் வெள்ளநீரில் சிக்கிய காரில் இருந்து ஒரு பெண்ணை போலீசார் கடும் போராட்டத்திற்கு பிறகு மீட்டனர். தொடர்ந்து பெய்து வரும் மழையால் அங்குள்ள சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ளம் சூழ்ந்த சாலையில் தனது வளர்ப்பு நாயுடன் சென்ற அந்த பெண்ணின் கார் வெள்ளநீரில் அடித்துச்செல்லப்பட்டது. சாலையின் நுனியில் தொற்றிக்கொண்டிருந்த அந்த காரின் ஜன்னல் வழியே கயிறு கட்டி அந்த பெண்ணை போலீசார் மீட்டனர். ஆனால், அவரது நாயை காப்பாற்ற முடியவில்லை என்று போலீசார் … Read more

அமெரிக்காவின் ஏவுகணையால் அல்-ஜவாஹிரிக்கு நடந்த கொடூர மரணம் …! அடுத்த தலைவர் யார்…?

வாஷிங்டன் டிரோன் தாக்குதலில் அல்-கொய்தா தலைவர் அல்-ஜவாஹிரியை அமெரிக்கா கொன்றது. ஜவாஹிரியின் மரணத்தை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உறுதிப்படுத்தி உள்ளார். ஜவாஹிரி அமெரிக்க இரட்டைகோபுர தாக்குதல் சதியில் ஈடுபட்டதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறினார்.இந்த தாக்குதலில் 2,977 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு தற்போது நீதி கிடைத்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.அல் ஜவாஹிரிக்கு தலைக்கு அமெரிக்க ரூ.1.97 கோடி பரிசு அறிவித்து இருந்தது. அல் ஜவாஹிரி (71) ஓசாமா பின்லேடன் இறந்ததில் இருந்து அல்கொய்தா பயங்கரவாத … Read more

அமெரிக்காவில் ஆட்குறைப்பு நடவடிக்கையை தொடங்கியது ஆரக்கிள் நிறுவனம்

முன்னணி மென்பொருள் நிறுவனமான ஆரக்கிள், அமெரிக்காவில் ஆட்குறைப்பு நடவடிக்கையை தொடங்கியுள்ளது. ஒரு லட்சத்து 43 ஆயிரம் ஊழியர்களை கொண்டுள்ள ஆரக்கிள் நிறுவனம், பணியாளர்களுக்கு ஆகும் செலவில் 100 கோடி டாலரை குறைக்கும் வகையில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக சான்பிரான்சிஸ்கோ அலுவலகத்தில் இருந்து பணியாளர்கள் சிலர் நீக்கப்பட்டுள்ளனர். இதே நடவடிக்கை ஆரக்கிள் நிறுவனம் செயல்படும் இந்தியா, கனடா மற்றும் ஐரோப்பா நாடுகளிலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார மந்தநிலை வரும் என்ற அச்சம் காரணமாக, … Read more