இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு உதவ இந்தியா உறுதியுடன் உள்ளது – அதிபர் ரணிலுக்கு குடியரசு தலைவர் கடிதம்

புதுடெல்லி: இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு உதவ இந்தியா உறுதியுடன் உள்ளது என இலங்கை அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கூறியுள்ளார். நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு பதவியேற்றதற்கு, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க வாழ்த்து கடிதம் அனுப்பியிருந்தார். அதில் இரு நாடுகள் இடையேயான சுமுக உறவு மேலும் வலுப்பட உங்கள் தலைமை புதிய உத்வேகம் அளிக்கிறது. உங்களுடன் இணைந்து செயல்பட ஆவலுடன் இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். இதற்கு நன்றி தெரிவித்து … Read more

இலங்கையானது ஈராக்பார்லி., கட்டடத்தை உடைத்து போராட்டம்| Dinamalar

பாக்தாத்:ஈராக் பார்லி.,க்குள் இரண்டாவது முறையாக நேற்றும் புகுந்த ஷியா பிரிவு தலைவர் முக்தாதா அல் -சதர் ஆதரவாளர்கள் கட்டடத்தை உடைத்து சேதப்படுத்தினர். மேற்காசிய நாடான ஈராக்கில், 2021அக்டோபரில் பார்லி., தேர்தல் நடந்தது. அதில் எந்தக் கட்சிக்குமே பெரும்பான்மை கிடைக்காததால் அரசியல் குழப்பம் நிலவுகிறது. ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், இடைக்கால பிரதமராக முகமது அல் காதிமி பதவி வகித்து வருகிறார்.இதற்கிடையே, ஆட்சி அமைப்பது குறித்து நடந்த பேச்சில், முன்னாள் அமைச்சர் அல் – சூடானியை புதிய பிரதமராக … Read more

பஸ் மீது ரயில் மோதி 11 பேர் பலி| Dinamalar

டாக்கா:வங்க தேசத்தில் ஆளில்லா ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பஸ் மீது ரயில் மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர். வங்கதேசத்தின் சிட்டகாங் மாவட்டத்தில் ஆளில்லா ரயில்வே கேட் ஒன்று உள்ளது. இதை தலைநகர் டாக்காவுக்கு சென்ற மினி பஸ் கடக்க முயன்றபோது அதிவேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று மோதியது. இதில் பயணித்த ஏழு மாணவர்கள் நான்கு ஆசிரியர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில் ‘விபத்தில் சிக்கிய பஸ் தண்டவாளத்தில் பல … Read more

அதிபர் மாளிகையில் சுருட்டிய ரூ.38 லட்சம் கோர்ட்டில் ஒப்படைப்பு| Dinamalar

கொழும்பு:இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே மாளிகையில் கைப்பற்றப்பட்ட 38 லட்சம் ரூபாய், நீதிமன்றத்தில் ஒப்படைக்கப் பட்டது. நம் அண்டை நாடான இலங்கை பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஆகியவற்றில் சிக்கி தவிக்கிறது.இவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் கொதித்தெழுந்து, 9ம் தேதி அதிபர் மாளிகைக்குள் புகுந்தனர். அங்கிருந்த பொருட்களை சூறையாடினர்.போராட்டம் தீவிரமானதை அறிந்த கோத்தபய, அங்கிருந்து தப்பி, மாலத் தீவு சென்று பின் சிங்கப்பூர் சென்றார். இந்நிலையில் கோத்தபய மாளிகையில் கண்டெடுத்த, 38 லட்சம் … Read more

ஆடம்பர பொருள் இறக்குமதிதடையை நீக்கியது பாகிஸ்தான்| Dinamalar

இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் ஆடம்பர பொருள் இறக்குமதிக்கு விதித்து இருந்த தடையை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.நம் அண்டை நாடான பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. கடந்த ஏப்ரலில் அந்நாட்டு பிரதமராக பொறுப்பேற்ற ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் கடந்த மே மாதம் அமைச்சரவை கூட்டம் நடந்தது. அதில், நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்துக்கு பின், அத்தியாவசியமற்ற மற்றும் ஆடம்பர பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டது. இதில் 860 பொருட்கள் இடம்பெற்று … Read more

“என்னால் பதவி விலக முடியும். ஆனால்…” – போப் பிரான்சிஸ்

ஒட்டாவா: “இன்று வரை ஓய்வுக் கதவை நான் தட்டவில்லை. என்னால் பதவி விலக முடியும். ஆனால், ஓய்வுகான அவசியம் எனக்கு தற்போது ஏற்படவில்லை” என போப் பிரான்சிஸ் தெரிவித்திருக்கிறார். போப் பிரான்சிஸ் இந்த வாரம் தொடக்கத்தில் கனடாவுக்கு பயணம் சென்றார். அப்பயணத்தில் கனடாவில் பூர்விக பழங்குடி மக்களுக்கு எதிராக 19-ம் நூற்றாண்டில் கத்தோலிக்க தேவாலயங்களால் நடத்தப்பட்ட கொடூரக் குற்றங்களுக்கு போப் பிரான்சிஸ் தார்மிக மன்னிப்புக் கேட்டது உலக அளவில் பாராட்டப்பட்டது. இந்த நிலையில், போப் பிரான்சிஸ் தனது … Read more

ஸ்பெயினில் இரண்டாவது குரங்கு அமைய மரணம் – மருத்துவ அமைச்சகம் தகவல்..!

புதிதாக குரங்கு அம்மை நோய் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. ஐரோப்பாவில் தற்போதைய குரங்கு அம்மை தொடர்புடைய முதல் மரணம் என்று அறிவித்த ஒரு நாளுக்குப் பிறகு, ஸ்பெயினில் தனது இரண்டாவது குரங்கு அம்மை தொடர்பான மரணத்தைப் பதிவு செய்தது. “3,750 நோயாளிகளில் … 120 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் இரண்டு பேர் இறந்துள்ளனர்” என்று ஸ்பெயின் சுகாதார அமைச்சகம் தனது அறிக்கையில், இரண்டாவது இறப்பு தேதியைக் குறிப்பிடாமல் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் “இரண்டு இளைஞர்கள்” என்றும், … Read more

Liz Truss: பிரிட்டன் பிரதமர் ஆகிறார் லிஸ் டிரஸ் – ஆய்வில் வெளியான தகவல்!

பிரிட்டன் பிரதமர் தேர்தலில், லிஸ் டிரஸ் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு 90 சதவீதம் உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், கடந்த சில வாரங்களுக்கு முன்பு, தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தலை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நடத்தி வருகிறது. பிரதமர் பதவிக்கான போட்டியில் 8 வேட்பாளர்கள் களம் இறங்கிய நிலையில், போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் … Read more

பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார் ? லிஸ் டிரஸ்சுக்கு 90 சதவீத வாய்ப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன் :பிரிட்டனின் அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்கான போட்டியில் லிஸ் டிரஸ் வெற்றி பெற 90 சதவீதம் வாய்ப்புள்ளதாக ஆய்வில் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரிட்டனில் பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகினார். கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவரே பிரதமராக பதவியேற்பார். அதையடுத்து கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடந்து வருகிறது. இதில் ரிஷி சுனாக் மற்றும் லிஸ் டிரஸ் இறுதிப் போட்டியில் உள்ளனர். பொருளாதார கொள்கைகள் மற்றும் வரி திட்டங்கள் … Read more

மியூசிக் ஆல்பத்திற்கான வீடியோ சூட்டின் போது துப்பாக்கி முனையில் 8 மாடல் அழகிகள் பாலியல் பலாத்காரம்

ஜோகன்ஸ்பர்க் தென்னாப்பிரிக்கா ஜோகன்னஸ்பர்க்கிற்கு மேற்கே உள்ள சிறிய நகரமான க்ரூகர்ஸ்டோர்ப்பின் புறநகர் பகுதியில் மியூசிக் ஆல்பம் ஒன்றுக்கான வீடியோ ஷூட்டிங் நடைபெற்றுள்ளது. இதில் 18 முதல் 35 வயதுக்குட்பட்ட பெண் மாடல்களும் பல ஆண்களும் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், இந்த ஷூட்டிங் போது துப்பாக்கிய ஏந்திய ஒரு கும்பல் உள்ளே புகுந்து அந்த ஷூட்டிங்கில் உள்ள பெண் மாடல்களை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். மேலும், வீடியோ ஷூட்டிங்கில் ஈடுபட்ட குழுவினரை சரமாரியாகத் தாக்கிய அந்த கும்பல் குழுவினரின் … Read more