பாகிஸ்தானுக்கு முன்னுரிமை: சீனா உறுதி!

இந்தியாவின் அண்டை நாடானா சீனாவுடனும், பாகிஸ்தானுடனும் எப்போது எல்லைப் பிரச்சினை நிலவி வருகிறது. சீனாவுடனான எல்லைப் பிரச்சினை தொடர்பாக பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை எந்த பலனும் இல்லை. இந்த நிலையில், சீனாவின் அண்டை நாடுகளில் பாகிஸ்தானுக்கு எப்போதும் முன்னுரிமை வழங்கப்படும் என அந்நாட்டு பிரதமர் லி கெக்கியாங் உறுதி தெரிவித்துள்ளார். சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. இதன் துவக்க விழாவில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கலந்து கொண்டார். இதனிடையே, சீனப் … Read more

இளவரசர் சார்லஸ் மனைவி கமிலாவுக்கு ராணி பட்டம் இங்கிலாந்து ராணி விருப்பம்

லண்டன் : இங்கிலாந்து நாட்டில் ராணியாக இருப்பவர், 2-ம் எலிசபெத் மகாராணி (வயது 95). இங்கிலாந்து மன்னராக இருந்த ஆறாம் ஜார்ஜின் மகள் இவர். மன்னர் ஆறாம் ஜார்ஜ், 1952-ம் ஆண்டு பிப்ரவரி 6-ந் தேதி மறைந்த பின்னர், 2-ம் எலிசபெத் ராணி பட்டத்துக்கு வந்தார். அப்போது அவருக்கு வயது 25. தற்போது அவர் ராணி பட்டத்துக்கு வந்து 70 ஆண்டுகள் ஆகின்றன. இதையொட்டி இங்கிலாந்து முழுவதும் வரும் ஜூன் மாதம் பிரமாண்ட கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. … Read more

கனடாவில் ஹிந்து கோவில்கள் சூறை| Dinamalar

டொரோன்டா-கனடாவில், ஹிந்து கோவில்கள் தொடர்ந்து சூறையாடப்பட்டு வருவதால் நாடு முழுதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. வட அமெரிக்க நாடான கனடாவின் பிராம்ப்டன் பகுதியில் கடந்த மாதம் ஆஞ்சநேயர் கோவிலை சில மர்ம நபர்கள் சூறையாடினர். அந்த சம்பவத்தை தொடர்ந்து அம்மன் கோவில், சிவன் கோவில், ஜெகன்நாதர் கோவில் என அடுத்தடுத்து பல கோவில்கள் சூறையாடப்பட்டன.கடந்த 30ம் தேதி மிசிசவுகா பகுதியில் உள்ள ஒரு ஹிந்து கலாசார மையத்திற்குள் நள்ளிரவில் இரண்டு மர்ம நபர்கள் அத்துமீறி நுழைந்தனர். … Read more

பிப். 21 முதல் மீண்டும் முழு ஊரடங்கு? – பிரதமர் திடீர் விளக்கம்!

வரும் பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி முதல் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கும் வகையில் ஆஸ்திரேலியா எல்லைகள் முழுமையாக திறக்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்துள்ளார். சர்வதேச அளவில் அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு நாடுகளில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதே போல், ஆஸ்திரேலியாவிலும் கொரோனா தொற்று அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் எல்லைகள் முழுமையாக மூடப்பட்டன. பிறகு, … Read more

கரிம உமிழ்வு குறித்து தவறாக விளம்பரப்படுத்தியதாக மெர்சிடெஸ் பென்ஸ் நிறுவனத்துக்கு ரூ.126 கோடி அபராதம் <!– கரிம உமிழ்வு குறித்து தவறாக விளம்பரப்படுத்தியதாக மெர்சிடெ… –>

மெர்சிடெஸ் பென்ஸ் நிறுவன கார்களின் கரிம உமிழ்வு குறித்து தவறாக விளம்பரப்படுத்தியதற்காக அந்நிறுவனத்துக்கு தென் கொரிய அரசு 126 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. ஜெர்மன் நாட்டு சொகுசு கார் நிறுவனமான மெர்சிடெஸ் பென்ஸ், தென் கொரியாவில் உள்ள அதன் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ள 15 டீசல் கார் மாடல்களின் கரிம உமிழ்வை குறைத்து கணக்கிடும் வகையில் அந்த வாகனங்களில் மென்பொருள் நிறுவப்பட்டுள்ளதாக அந்நாட்டு வர்த்தக ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் ஐரோப்பியத் தரநிலைகளுக்கு ஏற்ப கரிம உமிழ்வுகள் … Read more

ஆஸ்திரேலியா எல்லைகள் முழுமையாக திறக்கும் தேதியை அறிவித்தார் பிரதமர் ஸ்காட் மோரிசன்

சர்வதேச அளவில் அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு நாடுகளில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதேபோல், ஆஸ்திரேலியாவிலும் கொரோனா தொற்று அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் எல்லைகள் முழுமையாக மூடப்பட்டன. பிறகு, ஆஸ்திரேலியா குடிமக்கள், புலம்பெயர்ந்தவர்கள், சர்வதேச மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மட்டும் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டன. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கும் வகையில் நாட்டின் எல்லைகள் மீண்டும் திறக்கப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை … Read more

உக்ரைன் எல்லை பகுதியில் 70 சதவீத ரஷ்ய வீரர்கள்| Dinamalar

வாஷிங்டன்-உக்ரைன் எல்லைப் பகுதியில் 70 சதவீத ரஷ்ய ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்னை நிலவி வருகிறது. ‘நேட்டோ’ எனப்படும் வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் கூட்டணியில் இணைய உக்ரைன் விரும்புகிறது.இதற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்தாலும், ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதை அடுத்து உக்ரைன் எல்லையில் ராணுவ வீரர்களை ரஷ்யா குவித்தது. … Read more

தமிழக மீனவர்களின் 105 படகுகள் – ஏலம் விடும் பணி துவக்கம்!

இலங்கை கடற்படை பறிமுதல் செய்த தமிழக மீனவர்களின் 105 விசைப்படகுகளை ஏலம் விடும் பணி தொடங்கியது. எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை ஏலம் விடும் பணியை இலங்கை அரசு தொடங்கி உள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை அரசால் தமிழக மீனவா்கள் கைது செய்யப்பட்டும் அவா்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டும் உள்ளன. இந்த எதிர்பையும் மீறி … Read more

ஆப்கானிஸ்தானில் 50 ஐ.எஸ். பயங்கரவாதிகள் சரண்

காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான்கள் வசம் ஆட்சி அதிகாரம் சென்றுள்ளது. இதனை தொடர்ந்து, கடந்த ஆகஸ்டு மாதத்தில் 500 டேயீஸ் பயங்கரவாதிகள் சரண் அடைந்தனர். இந்தநிலையில், அந்நாட்டின் நங்கார்ஹர் கிழக்கு மாகாணத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 50 பேர் சரண் அடைந்து உள்ளனர்.   பழங்குடி தலைவர்களின் முயற்சியால் பயங்கரவாதிகள் சரண் அடைந்தனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் மீண்டும் டேயீஷ் இயக்கத்தில் சேர முயன்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பழங்குடி தலைவர்கள் பயங்கரவாதிகளை எச்சரித்து உள்ளனர்.

வலுப்பெறும் டிரக் ஓட்டுநர்கள் போராட்டம்: கனடா தலைநகரில் அவசரநிலை பிரகடனம்

ஒட்டா: தடுப்பூசி கட்டாயம் என்ற உத்தரவை எதிர்த்து கனடாவில் டிரக் (லாரி) ஓட்டுநர்களின் போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், தலைநகர் ஒட்டாவாவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கரோனா பாதிப்பு தீவிரம் அடைந்துள்ளதைத் தொடர்ந்து, கனடாவில் அதன் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க அந்நாட்டு அரசு கரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது. பொது இடங்களில் நடமாடுவோர், பொதுப் போக்குவரத்தில் பயணிப்போருக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டது. மேலும், லாரி ஓட்டுநர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் என்றும், தடுப்பூசி போடாதவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவர் என்றும் அரசு … Read more