மருமகள் கமீலாவுக்கு பதவி: பிரிட்டன் ராணி விருப்பம்| Dinamalar

லண்டன்,-”ஐரோப்பிய நாடான பிரிட்டனின் அடுத்த அரசராக சார்லஸ் பதவியேற்கும்போது, அவரது மனைவி கமீலா, ராணியாக இருக்க வேண்டும்,” என, ராணி இரண்டாம் எலிசபெத் விருப்பம் தெரிவித்துள்ளார்.’ குயின் கன்சார்ட்’பிரிட்டன் ராணியாக பொறுப்பேற்று வரும் ஜூனில் 70 ஆண்டுகளை நிறைவு செய்கிறார், 95 வயதாகும் ராணி எலிசபெத். இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.இந்நிலையில் ராணி எலிசபெத் கூறியுள்ளதாவது:இத்தனை ஆண்டுகளாக மக்கள் எனக்கு அளித்த ஆதரவுக்கு, ஒத்துழைப்புக்கு நன்றி; இதற்கு நான் கடமைபட்டுள்ளேன்.எனக்குப் பின், என் மகன் … Read more

சிகரெட் துண்டுகளை எடுத்து குப்பையில் போடும் காகங்களுக்கு நிலக்கடலை பரிசு …!

ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் 2 பில்லியன் டன்களுக்கும் அதிகமான கழிவுகள் “உற்பத்தி” செய்யப்படுகின்றன. இப்படியாக நாளுக்கு நாள் பெருகி கொண்டே போகும் கழிவுகளில் ஒரு சிறிய பங்களிப்பு தான் – சிகரெட் துண்டுகள்.  இந்நிலைபாட்டில் “இதே சிகரெட் கழிவுகள்” சமாச்சாரத்தின் கீழ், ஒரு ஸ்வீடிஷ் நிறுவனத்தின் செயல் இணையத்தில் மிகவும் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது; வைரல் ஆகி வருகிறது. சிகெரெட் துண்டுகளை குறிப்பிட்ட இடத்தில் உள்ள மெஷினில் காகங்கள் எடுத்து வந்து போடும். ஒவ்வொரு சிகரெட் துண்டுக்கும், சில … Read more

இந்தோனேஷியாவில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்து – 13 பேர் உயிரிழப்பு

ஜகார்த்தா : இந்தோனேசியாவின் யோககர்த்தா மாகாணத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர் மற்றும் 8 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய தேடல் மற்றும் மீட்பு அலுவலக செய்தித் தொடர்பாளர் யூசுப் லத்தீஃப் தெரிவித்துள்ளார். பந்துல் மாவட்டத்தில் விபத்து நிகழ்ந்துள்ளது. பேருந்து ஒரு தாழ்வான சாலை வழியாகச் சென்றபோது, ​​​​ஓட்டுநரால் அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து வலதுபுறம் இருந்த உயரமான தரையில் மோதியதாக  மாவட்ட காவல்துறைத் தலைவர் இஹ்சான் கூறியுள்ளார்.  விபத்துக்குள்ளான பேருந்தில் மொத்தம் 40 … Read more

கொரோனா பாதிப்பு: ரஷ்யாவில் புதிய உச்சம்

மாஸ்கோ,  ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது. தொற்று பரவிய காலம் முதல் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 1 லட்சத்து 80 ஆயிரத்து 071- ஆக பாதிப்பு பதிவாகியுள்ளது. ஒமைக்ரான் பரவல் காரணமாக தொற்று பாதிப்பு இந்த அளவுக்கு  உயர்ந்துள்ளதாக  மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளார்.  கொரோனா பாதிப்பால் மேலும் 661- பேர் உயிரிழந்துள்ளனர்.  ரஷ்யாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 12.8 மில்லியன் ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 35 … Read more

'சிறந்த பாடகரை துணைக்கண்டம் இழந்து விட்டது!' – பிரதமர் இரங்கல்!

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்வர் மறைவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் இரங்கல் தெரிவித்து உள்ளார். பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்வர், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, கடந்த மாதம் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை, சிகிச்சை பலனின்றி பாடகி லதா மங்கேஷ்வர் உயிரிழந்தார். அவருக்கு வயது 92. மும்பையில் உள்ள சிவாஜி நகரில், பாடகி லதா மங்கேஷ்வரின் உடல் அரசு முழு மரியாதையுடன் தகனம் … Read more

அமெரிக்காவில் மகாத்மா காந்தி சிலை சேதம் – இந்திய தூதரகம் கண்டனம்

நியூயார்க், அமெரிக்காவின் நியூயார்க் நகரம் மன்ஹாட்டன் பகுதியில் அமைந்திருக்கும் யூனியன் சதுக்கத்தில், மகாத்மா காந்தியின் 8 அடி உயர முழு உருவ வெண்கல சிலை வைக்கப்பட்டு உள்ளது. இந்த சிலையை நேற்று சில மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இது அமெரிக்கவாழ் இந்தியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.  மேலும் இந்த சம்பவத்துக்கு அங்குள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இந்த விவகாரத்தை உள்ளூர் விசாரணை அமைப்புகளிடம் எடுத்துச் சென்றுள்ள தூதரக அதிகாரிகள், … Read more

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மடகாஸ்கரை தாக்கிய புயலால் பல கிராமங்களில் நிலச்சரிவு.! <!– ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மடகாஸ்கரை தாக்கிய புயலால் பல … –>

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மடகாஸ்கரை தாக்கிய Batsirai புயலால், பலத்த மழை காரணமாக பல கிராமங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து மக்களில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக சாலைகள் சேதமடைந்த நிலையில், சேற்றில் சிக்கிய வாகனங்களை கிராம மக்கள் மிகுந்த சிரமத்துடன் அப்புறப்படுத்தினர். மணிக்கு சுமார் 165 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. Source link

பாடகி லதா மங்கேஷ்கர் மறைவு – உலக தலைவர்கள் இரங்கல்

லாகூர்: இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார்.  ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த லதா மங்கேஷ்கர் (92), சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை லதா மங்கேஷ்கர் பாடியுள்ளார். 2001-ம் ஆண்டு பாரத ரத்னா விருது பெற்ற லதா மங்கேஷ்கர் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.  லதா மங்கேஷ்கர் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர … Read more

ஆஸ்திரேலியாவில் கட்டுக்கடங்காமல் பரவும் புதர் தீ.. ஏராளமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்.! <!– ஆஸ்திரேலியாவில் கட்டுக்கடங்காமல் பரவும் புதர் தீ.. ஏராளமா… –>

ஆஸ்திரேலியாவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் புதர்தீயை அணைக்கும் முயற்சியில் 200 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். பெர்த் நகர் அருகே 3 வெவ்வேறு பகுதிகளில் ஏற்பட்ட புதர்தீ குடியிருப்பு பகுதிகளை நெருங்கியதால் அங்கு உச்சகட்ட அவசர எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வீடுகளை விட்டு உடனடியாக வெளியேறினர். வீட்டில் பற்றிய நெருப்பை அணைக்க முயன்ற நபர் கடுமையான தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Source link

ரஷ்யாவை கண்டித்து உக்ரைனில் மக்கள் போராட்டம்

கார்கீவ்: ரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே நீண்ட நாட்களாக எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைனை அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ரஷ்யா எல்லையில் ஒரு லட்சம் ராணுவ வீரர்களை குவித்தது. இதனால் உக்ரைன் மீது ரஷ்யா எந்த நேரத்திலும் படையெடுக்கும் என்று அமெரிக்கா தெரிவித்து வருகிறது. மேலும் உக்ரைன் மீது படையெடுத்தால் ரஷ்யா கடும் பேரழிவை சந்திக்கும் என்றும் அமெரிக்கா எச்சரித்துள்ளது. இந்த … Read more