மரண தண்டனை கைதியான தனது மகளை 11 ஆண்டுக்கு பின் சந்தித்த தாய்!

ஏமன் சிறையில் இருக்கும் தனது மகள் நிமிஷா ப்ரியாவை சந்திக்க அவரது தாய் இந்தியாவில் இருந்து வந்தார். ஏமன் நாட்டில் செவிலியராக பணிபுரிந்த கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியாவுக்கு, கொலை வழக்கு ஒன்றில் 2018ம் ஆண்டு மரணதண்டனை விதிக்கப்பட்டது.

‘மாஸ்டர் செஃப் ஆஸி.’ நடுவர்களைக் கவர்ந்த இந்திய வம்சாவளி போட்டியாளரின் பானி பூரி!

புதுடெல்லி: பிரபலமான இந்திய சாலையோர உணவான பானி பூரி, ‘மாஸ்டர் செஃப் ஆஸ்திரேலியா’வின் சீசன் 16-ல் இடம்பிடித்து நடுவர்களைக் கவர்ந்துள்ளது. சமீபத்தில் ஒளிபரப்பப்பட்ட அந்த சமையல் போட்டி நிகழ்ச்சியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த போட்டியாளரான சுமீத் சைகல் தனது விருப்பத்துக்குரிய பானி பூரியை தனித்த சுவையுடன் தயாரித்து நடுவர்களைக் கவர்ந்துள்ளார். மாஸ்டர் செஃப் ஆஸ்திரேலியா நிகழ்ச்சியில் இதற்கு முன்பு பல இந்திய வம்சாவளி போட்டியாளர்கள் தங்களின் முத்திரையைப் பதித்துள்ளனர். சஷி செலியா மற்றும் ஜஸ்டின் நாராயண் ஆகியோர் … Read more

‘காசாவுக்கான எனது ஆதரவில் எந்தவித குழப்பமும் இல்லை’ – மலாலா உறுதி

புதுடெல்லி: காசா மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலை கண்டித்துள்ள நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாய் காசாவில் வசிக்கும் பாலஸ்தீனியர்களுக்கான தனது ஆதரவில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனுடன் இணைந்து தயாரித்த பிராட்வே மியூசிக்கலுக்கு பாகிஸ்தானில் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தனது நிலைப்பாடு குறித்து வியாழக்கிழமை எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “காசா மக்களுக்கான எனது ஆதரவில் எந்தவித குழப்பமும் இருக்கக் கூடாது என்று … Read more

கென்யாவில் தொடரும் கனமழை: 23 மாவட்டங்கள் பாதிப்பு; 38 பேர் பலி

புதுடெல்லி: கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த கனமழையால் கென்யா முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. கிழக்கு ஆப்பிரிக்கா நாடான கென்யாவில் கடந்த மாதம் முதலாக கனமழை பெய்து வருகிறது. கடந்த வாரம் பெய்த கனமழையால் பலர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். ஆப்பிரிக்க நாடுகளில் பெய்து வரும் கனமழையால் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், நகரின் சில … Read more

ரஃபாவில் தரைவழித் தாக்குதலுக்கு ஆயத்தமாகும் இஸ்ரேல்: பொறுமை காக்க அமெரிக்கா வேண்டுகோள்

டெல் அவிவ்: காசாவின் தெற்கு பகுதியில் உள்ள ரஃபா நகரில் தரைவழித் தாக்குதலை மேற்கொள்ள இஸ்ரேல் ஆயத்தமாகி வரும் சூழலில். ‘இது மனிதாபிமான அளவில் பேரழிவை ஏற்படுத்தும்’ என சர்வதேச சமூகங்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாத இஸ்ரேல், ரஃபாவில் உள்ள ஹமாஸ் பதுங்கிடங்களை ஒட்டிய பகுதிகளில் இருந்து பாலஸ்தீனர்களை அப்புறப்படுத்தும் பணியை ஆரம்பிக்க ஆயத்தமாகி வருகிறது. இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இது குறித்து டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் பத்திரிகைக்கு … Read more

ஏழை மாணவர்களுக்கான அன்னதான உணவை சாப்பிட்ட சர்ச்சை: கனடா வாழ் இந்திய வம்சாவளியின் வங்கி வேலை பறிபோனது

டோரன்டோ: கனடா நாட்டின் டிடி வங்கியில் தகவல் விஞ்ஞானியாக பணியாற்றிவந்தவர் இந்திய வம்சாவளி மெஹுல் பிரஜாபதி. மளிகைப் பொருட்களுக்கான செலவை குறைப்பது குறித்து விளக்கும் காணொலியை அண்மையில் வெளியிட்டார். அந்த காணொலியில் மெஹுல் கூறியதாவது: கனடாவில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு இலவச உணவு வழங்கிட தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், அறக்கட்டளைகளும், தேவாலயங்களும் உணவு வங்கிகள் நடத்துகின்றன. இங்கிருந்து ஒருவாரத்துக்கான பழங்கள், காய்கறிகள், ரொட்டித்துண்டுகள், சாஸ், பாஸ்டா மற்றும் பெட்டியில் அடைக்கப்பட்ட காய்கறிகளை … Read more

3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்

வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன. இங்கு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சுழற்சி முறையில் வீரர்கள் வீராங்கனைகள் அவ்வபோது விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். இந்த ஆய்வு மையத்துக்கு செல்லும் விண்வெளி வீரர்கள் அங்கு தங்கியிருந்தபடி பூமியில் ஏற்படும் மாற்றங்கள், செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் ஏதேனும் உள்ளதா? என்பது குறித்து ஆய்வுசெய்து வருகின்றனர். சுழற்சி முறையில் இவர்கள் மாற்றப்பட்டு புதிய … Read more

சீனாவுக்கு உளவு வேலை; தைவானில் தந்தை, மகனுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை

தைப்பே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி தைவான் நாட்டின் சி.என்.ஏ. என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டு உள்ள செய்தியில், இந்த வழக்கு தைவான் ஐகோர்ட்டின் தைனன் பிரிவில் விசாரணைக்கு வந்தது. இதில், இரண்டு பேரின் கடைசி பெயர் ஹுவாங் என அடையாளம் காணப்பட்டு உள்ளது. அவர்கள் இருவரும் குற்றம் நடந்துள்ளது என கோர்ட்டில் ஒப்பு கொண்டுள்ளனர். … Read more

விமானத்தில் இருந்து திடீரென வெளியான புகை.. பயணிகள் பீதி

டோக்கியோ: ஜப்பான் நாட்டின் ஆல் நிப்பான் விமான நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம், இன்று சுமார் 200 பயணிகளுடன் ஷின் சித்தோஷ் விமான நிலையத்திற்கு வந்தது. விமான நிலையத்தில் தரையிறங்கியதும், இறக்கை பகுதியில் இருந்து புகை வெளியேறியது. இதனால் பயணிகளிடையே பீதி ஏற்பட்டது. பயணிகள் அவசரம் அவசரமாக இறங்கினர். ஆனால் பயணிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதுதொடர்பாக ஜப்பான் பொது ஒளிபரப்பு நிறுவனமான என்.எச்.கே. செய்தி வெளியிட்டுள்ளது. அதில், விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியபின், இறக்கை பகுதியில் இருந்து … Read more

16 வயது சிறுவனை கைது செய்த பிரான்ஸ் போலீஸார்

பாரிஸ்: எதிர்வரும் பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி களத்தில் உயிரை துறக்க விரும்புவதாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட 16 வயது சிறுவனை பிரான்ஸ் நாட்டு தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். அதற்கான காரணம் குறித்து விரிவாக பார்ப்போம். பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பிரான்ஸ் நாட்டு தலைநகரான பாரிஸில் வரும் ஜூலை 26-ம் தேதி தொடங்க உள்ளது. இதில் இந்தியா உட்பட சர்வதேச நாடுகளை சேர்ந்த சுமார் 10,500 வீரர்கள், வீராங்கனைகள் தொடக்க விழாவில் … Read more