அமெரிக்கா : கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு, தேவாலயத்தில் 900 முறை மணி ஒலி எழுப்பி மரியாதை செலுத்த ஏற்பாடு <!– அமெரிக்கா : கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு, தேவாலயத்தில்… –>

அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக வாஷிங்டன்-ல் உள்ள நேஷனல் கேத்திட்ரல் தேவாலயத்தில் 900 முறை மணி ஒலி எழுப்பப்பட்டது. அமெரிக்காவில் ஒவ்வொரு 1 லட்சம் கொரோனா உயிரிழப்புகளுக்கும், 100 முறை மணி ஒலி எழுப்பி இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்ததை அடுத்து, 900 முறை மணி ஒலி எழுப்பப்பட்டது. இந்த முறை சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த நிகழ்வு நீடித்தது. … Read more

சைபர் தாக்குதல் நடத்தி பணத்தை கொள்ளையடிக்கும் வடகொரியா: ஐ.நா. குற்றச்சாட்டு

நியூயார்க் : ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணைகளை சோதித்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வடகொரியா 7 முறை ஏவுகணை சோதனையை நடத்தி அதிரவைத்தது. சர்வதேச நாடுகளின் பொருளாதார தடை மற்றும் கொரோனா கட்டுப்பாடுகளின் எதிரொலியால் வடகொரியாவின் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ளபோதும் அந்த நாடு ஏவுகணை சோதனையில் கவனம் செலுத்துவது வியப்பாகவே உள்ளது. இந்த நிலையில் வடகொரியா பல நாடுகளின் நிதிநிறுவனங்கள், கிரிப்டோகரன்சி பரிமாற்ற நிறுவனங்கள் உள்ளிட்டவற்றின் மீது … Read more

'போராட்டத்தை நிறுத்த வேண்டும்': டிரக் ஓட்டுநர்களை சாடிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!

கனடா எல்லையை கடக்கும் லாரி ஓட்டுநர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து கனடாவில் கட்டாய தடுப்பூசிக்கு எதிராக பெரிய அளவில் போராட்டங்கள் நடந்து வருகின்றது. கனடா தலை நகரில் நூற்றுக்கணக்கானவர்கள்  போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டிரக் ஓட்டுநர்களை சாடினார்.  கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஒட்டாவாவில் கோவிட்-19 தடுப்பூசியை கட்டாயமாக்கும் … Read more

Freedom convoy: தகிக்கும் கனடா.. அமெரிக்க எல்லை முடக்கம்.. ஸ்தம்பித்தது போக்குவரத்து!

கனடாவிலிருந்து அமெரிக்கா செல்வோர் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்ற கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடியூ பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து அங்கு நடந்து வரும் லாரி டிரைவர்கள் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. டெல்லி விவசாயிகள் நடத்திய முற்றுகைப் போராட்டம் போல இந்த போராட்டம் வீரியம் அடைந்து வருகிறது. லாரி டிரைவர்கள் மட்டுமல்லாமல், விவசாயிகள், பொதுமக்கள் என பல தரப்பட்டவர்களும் இதில் கலந்து கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது போராட்டக்காரர்கள் கனடா – அமெரிக்க எல்லையை … Read more

புதிய தொற்று மாறுபாடுகளை தடுக்கும் சக்தி கொரோனா தடுப்பூசிகளுக்கு இல்லை- கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்

உலகம் முழுவதும் கொரோனா தொற்று எண்ணிக்கை குறையவில்லை. மாறாக, டெல்டா, ஆல்பா, ஒமைக்ரான் போன்ற உருமாறிய கொரோனா தொற்றுகள் புதிதாக பரவி மக்களை மேலும் அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசிகள் பாதிப்பு எண்ணிக்கையை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசிகள் புதிய தொற்று மாறுபாடுகள் வெளிவருவதைத் தடுக்காது என கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழத்தின் மருத்துவ ஆராய்ச்சியாளர் சாரா எல் கேடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆராய்ச்சியின் முடிவில் … Read more

Johnson &amp; Johnson: ஜான்சன் &amp; ஜான்சன் பேபி பவுடர் மீது உலக அளவில் தடை விரைவில்?

பிரிட்டனின் முன்னணி ஹெல்த்கேர் நிறுவனமான ஜான்சன் & ஜான்சனின் (Johnson & Johnson) பேபி பவுடர் விற்பனை உலகம் முழுவதும் தடை செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது, அந்நிறுவனம் ஏற்கனவே 2020ம் ஆண்டு முதல் அமெரிக்கா மற்றும் கனடாவில் அதன் விற்பனையை நிறுத்திவிட்டது. புற்று நோயை ஏற்படுத்தக் கூடிய, ‘ஆஸ்பெஸ்டாஸ்’ என்ற கனிம பொருள் கலந்திருப்பதாக சில ஆண்டுகளாக தொடர்ந்து குற்ற சாட்டு முன் வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த பிரச்சனை தொடர்பாக, ஜான்சன் அண்ட் ஜான்சன் … Read more

மீண்டும் முழு ஊரடங்கு.. மறு உத்தரவு வரும் வரை – அரசு அதிரடி!

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்ததை அடுத்து மறு உத்தரவு வரும் வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அரசு அறிவித்து உள்ளது. சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் முதன்முதலில் பரவிய கொரோனா வைரஸ் தொற்று, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு ஆட்டம் காட்டி வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றின் பிறப்பிடமான சீனாவில், கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், மீண்டும் … Read more

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கில் நெதர்லாந்து வீராங்கனை புது மைல்கல் <!– பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கில் நெதர்லாந்து வீராங்கனை பு… –>

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் தொடரில் ஆயிரத்து 500 மீட்டர் ஸ்கேடிங் பிரிவில் நெதர்லாந்து வீராங்கனை ஐரீன் வுஸ்ட் தங்கம் வென்றார். 1 நிமிடம் 53 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்து ஒலிம்பிக் சாதனை படைத்த ஐரீன், 6-வது முறையாக தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் மொத்த குளிர்கால ஒலிம்பிக் தொடர்களில் 5 பதக்கங்களுக்கு மேல் வென்ற முதல் வீராங்கனை என்ற சிறப்பை பெற்றார். அதேபோல் மகளிருக்கான பனிச்சறுக்கு slalom போட்டியில் சுவீடன் வீராங்கனை சாரா ஹெக்டேர் தங்கம் … Read more

ரஷியாவில் ஒரே நாளில் 1 லட்சத்து 71 ஆயிரம் பேருக்கு கொரோனா

மாஸ்கோ : ஒமைக்ரான் தாக்கத்தால் ரஷியாவில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்தது. அந்த வகையில் கடந்த சில வாரங்களாக அங்கு தினசரி கொரோனா பாதிப்பு 1 லட்சத்துக்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. நேற்று ஒரே நாளில் அங்கு 1 லட்சத்து 71 ஆயிரத்து 905 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. எனினும் முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது பாதிப்பு சற்று குறைந்துள்ளது. நேற்று முன்தினம் 1 லட்சத்து 80 ஆயிரத்து 71 பேருக்கு தொற்று உறுதி … Read more

Oldest Pub Closed: 1000 ஆண்டுகள் பழமையான பப் மூடப்பட்டது! காரணம் இதுதான்…

லண்டன்: கொரோனா பாதிப்பால் பல தொழில்கள் முடங்கியுள்ளன. பிரிட்டனின் மிகவும் பழமையான பப்பையும் கொரோனாவின் தாக்கம் விட்டுவைக்கவில்லை. பொருளாதார சவால்கள் காரணமாக ஆயிரம் ஆண்டு பழமையான பப் மூடப்பட்டதாக  அதன் உரிமையாளர் பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக, பிரிட்டனின் பழமையான பப் பூட்டப்பட்டுள்ளது வருத்தம் அளிப்பதாக அனைவரும் சமூக வலைதளங்களில் வருத்தம் தெரிவிக்கின்றனர். நிதி பிரச்சனை காரணமாக இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டிய நிலை, கொரோனாவின் தாக்கத்தின் ஆயிரக்கணக்கான சீரழிவுகளில் ஒன்றாகும்.  லண்டனின் வடக்கே … Read more