கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது அதிகரிக்கக் கூடும்

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2024 மார்ச் 21ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று : … Read more

பாராளுமன்ற செயற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் பற்றிய பாடநெறியைப் பூர்த்திசெய்த தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு சான்றிதழ்கள்

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்காக இலங்கை பாராளுமன்றத்தினால் நடத்தப்பட்ட பாராளுமன்ற செயற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் பற்றிய குறுகியகால பாடநெறியை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்த பட்டதாரி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அண்மையில் ஓலுவிலில் அமைந்துள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர மற்றும் பிரதம அதிதியாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோஹணதீர கலந்து கொண்டதுடன் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ஏ. ரமீஸ் உள்ளிட்ட … Read more

ஏற்றுமதிப் பொருளாதாரத்தை நோக்கிய விரைவான மாற்றத்தையே எதிர்பார்க்கிறோம்

அதற்குரிய சட்டமூலம் ஏப்ரல் மாதத்தில் பாராளுமன்றத்திற்கு. அரச நிதி நிர்வாகத்திற்கும் புதிய சட்டமூலம். கட்டியெழுப்படும் பொருளாதாரத்தின் பயன் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் – ஜனாதிபதி வலியுறுத்தல். இறக்குமதிக்கும் ஏற்றுமதிக்கும் இடையிலான இடைவெளியை கடனாகப் பெற்றுக்கொள்ளும் பட்சத்தில் இன்னும் 10 வருடங்களில் இலங்கை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுக்க நேரிடும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி விரைவில் ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கிய மாற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். இவற்றுக்குத் தேவையான சட்டத்தை ஏப்ரல் … Read more

தரமான ஊடக தலைமுறையொன்றை உருவாக்க “Kaleidoscope 2024 Screen media for Gen-Z” திட்டம் ஆரம்பம்

ஊடகங்களின் அனுபவத்தையும் நடைமுறை அறிவையும் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கும் நோக்கில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு “Kaledoscope 2024 Screen media for Gen-Z” என்ற கற்கைநெறியை ஆரம்பித்துள்ளது. இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தில் இந்த கற்கை நெறி நேற்று (20) ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி செயலகம், கல்வி அமைச்சு, ஜனாதிபதி ஊடகப் பிரிவு, அரச மற்றும் தனியார் ஊடக நிறுவனங்கள், கல்விமான்கள், ஊடகத்துறையிலுள்ள நிபுணர்கள் ஆகியோரைக் கொண்ட ஆலோசனைக் குழுவின் ஒத்துழைப்புடன் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஊடகப் … Read more

அஸ்வெசும பயனாளிகள் 14,000 பேரை வலுவூட்ட விசேட வேலைத்திட்டம் – சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல்

அஸ்வெசும பயனாளிகள் 14,000 பேரை வலுவூட்டுவதற்கான விசேட வேலைத் திட்டத்தை சிறுதோட்ட அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து செயற்படுத்தவிருப்பதாக சமூல வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்தார். கால்நடை அபிவிருத்தி அமைச்சின் ஊடாக களுத்துறை மற்றும் குருநாகல் மாவட்டங்களை மையமாகக் கொண்டு 10,000 நாட்டுக் கோழி வளர்ப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த … Read more

மகாவலி திட்டத்தில் கைவிடப்பட்ட “A” மற்றும் “B” வலயங்களில் துரித அபிவிருத்தி

மறைந்த காமினி திசாநாயக்கவின் 82 ஆவது ஜனன தின நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு. நாட்டை நவீன விவசாயப் பொருளாதாரத்தை நோக்கி நகர்த்தும் பயணத்தின் போது, மகாவலி திட்டத்தில் கைவிடப்பட்ட ஏ , பி வலயங்களை விரைவாக அபிவிருத்தி செய்து அதன் பலனை மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார். இந்நாட்டின் நீர்ப்பாசன வரலாற்றில் தனித்துவமான மாற்றத்தை ஏற்படுத்திய, மகாவலி திட்டதை காமினி திசாநாயக்க செயற்படுத்தியிருக்காவிடின் இன்று நாடு அரிசியில் தன்னிறைவு அடைந்திருக்காதெனவும் நாட்டுக்கு அவசியமான மின்சாரத்தை … Read more

தில்ஷான் மதுசங்க IPL போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார்

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தில்ஷான் மதுசங்க எதிர்வரும் இந்தியன் பிரஜமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார். பங்கலாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது காலில் ஏற்பட்ட உபாதை க.hரணமாக அவர் இந்த வாய்ப்பை இழந்துள்ளார். அவருக்குப் பதிலாக, 2024 IPL போட்டிக்கான மும்பை அணியில், தென்னாப்பிரிக்காவின் இளம் வேகப்பந்து வீச்சாளரான Kwena Maphaka  கலந்துகொள்ளவுள்ளார். இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் தில்ஷான் மதுஷங்க 4.6 … Read more

இவ்வாண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிரிப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்ளும் பொருளாதார வேலைத்திட்டம் மற்றும் நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள சமாதான சுழல் காரணமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாகவும், அதற்கிணங்க கடுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினை விமானப் பயணிகள் அதிகமாகப் பயன்படுத்தும் இடமொன்றாக்கப்பட்டுள்ளதாகவும், விமான நிலையம் மற்று விமான சேவைகள் இலங்கை தனியார் நிறுவனத்தின் தலைவர் அதுல கல்கெடிய தெரிவித்தார். 2024 ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து மார்ச் மாதம் 19ஆம் திகதி வரையான காலத்திற்குள் விமான நிலைய சேவைகளைப் 850,000 … Read more

கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திகள் மற்றும் நல்லிணக்கம் குறித்து கலந்துரையாடல்

கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திகள் மற்றும் நல்லிணக்கம் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுடன் தூதுவர்கள் கலந்துரையாடல். சுவிட்சர்லாந்துஇ ஜப்பான் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளின் தூதுவர்கள் திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு மரியாதை நிமித்தமாக நேற்று (20) வருகை தந்து மாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் நல்லிணக்கம் குறித்து ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் கலந்துரையாடல் நடத்தினர். இதேவேளைஇ கிழக்கு மாகாணத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களுக்கு ஆதரவளிப்பதாகவும் தூதுவர்கள் ஆளுநரிடம் இணக்கம் … Read more

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று (21) பி.ப 4.30 மணிக்கு

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கந்த 19 முதல் இன்று (21) வரை மூன்று நாள் விவாதமாக நடத்துவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப 12.30 முதல் எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ‘நெல் அறுவடையை விற்பனை செய்தல் உள்ளிட்ட விவசாயிகள் முகங்கொடுக்கும் ஏனைய பிரச்சினைகள்’ குறித்து எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு பிரேரணையை விவாதிக்கத் தீர்மானம் மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணை அன்றையதினம் மு.ப 9.30 … Read more