தில்ஷான் மதுசங்க IPL போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார்

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தில்ஷான் மதுசங்க எதிர்வரும் இந்தியன் பிரஜமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார்.

பங்கலாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது காலில் ஏற்பட்ட உபாதை க.hரணமாக அவர் இந்த வாய்ப்பை இழந்துள்ளார். அவருக்குப் பதிலாக, 2024 IPL போட்டிக்கான மும்பை அணியில், தென்னாப்பிரிக்காவின் இளம் வேகப்பந்து வீச்சாளரான Kwena Maphaka  கலந்துகொள்ளவுள்ளார்.

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் தில்ஷான் மதுஷங்க 4.6 கோடி இந்திய ரூபாய்க்கு மும்பை அணியால் வாங்கப்பட்டார். 2024 IPL போட்டி நாளை (22) ஆரம்பமாகவுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.