ஆயுஷ்மான் சுகாதாரத் திட்டம் மூலம் பயன்பெற்றவர்களில் 48% பேர் பெண்கள்

புதுடெல்லி: ஏழை, எளிய மக்கள் சுகாதாரக் காப்பீட்டைப் பெறும் வகையில் மத்திய அரசு ஆயுஷ்மான் சுகாதாரத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்துக்கு ஆயுஷ்மான் பாரத்-பிரதமரின் ஜன் ஆரோக்யா திட்டம் (ஏபி-பிஎம்ஜேஏஒய்) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் ஏழைமக்கள் ரூ.5 லட்சம் வரையில் மருத்துவ சிகிச்சை செய்து கொள்ள முடியும். கடந்த 2018-ம் ஆண்டு முதல் இதுவரை இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.81,979 கோடி மருத்துவக் காப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. 6.5 கோடி பேர் இத்திட்டத்தின் கீழ் … Read more

உலகை திரும்பி பார்க்க வைத்துள்ள அக்னி- 5 ஏவுகணை சோதனை… சில முக்கிய அம்சங்கள்!

Agni-5 Nuclear Missile: இந்தியா நேற்று அக்னி 5 திவ்யாஸ்திரா சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. பல்வேறு இலக்குகளை துல்லியமாக தாக்கிவிட்டு திரும்பி வரும் தொழில்நுட்பம் கொண்டதாக அக்னி 5 ஏவுகணை தயாரிக்கப்பட்டுள்ளது.

பாஜக மத்திய தேர்தல் குழு 2-வது கூட்டம் நிறைவு: 90 வேட்பாளர்கள் இறுதி; தமிழகம், ஒடிசாவில் இழுபறி

புதுடெல்லி: பாஜக மத்திய தேர்தல் குழுவின் 2வது ஆலோசனைக் கூட்டம் நேற்று (திங்கள்) பின்னிரவில் நிறைவுபெற்றது. இதில் 7 மாநிலங்களில் போட்டியிடக் கூடிய 90 வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜெபி நட்டா, மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், பிரஹலாத் ஜோஷி, நித்யானந்த் ராய், … Read more

Citizenship Amendment Act: குடியுரிமை திருத்தச் சட்டம் என்றால் என்ன? இதற்கு ஏன் இந்த எதிர்ப்பு?

Citizenship Amendment Act: CAA என்பது குடியுரிமை வழங்குவதற்கான சட்டம், இது குடியுரிமையை பறிக்கும் சட்டம் அல்ல. இந்த சட்டத்தின் காரணமாக, எந்த ஒரு இந்திய குடிமகனும், அவர் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் குடியுரிமையை இழக்க மாட்டார்கள்.

புதிய தேர்தல் ஆணையர்களை நியமிக்க மத்திய அரசுக்கு தடை விதிக்க கோரி காங்கிரஸ் வழக்கு

புதுடெல்லி: புதிய தேர்தல் ஆணையர்களை நியமிக்க மத்திய அரசுக்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ஜெயா தாக்குர் மனு தாக்கல் செய்தார். மூன்று ஆணையர்களை கொண்ட இந்திய தேர்தல் ஆணையத்தில், இப்போது தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமே பொறுப்பில் இருக்கிறார். தேர்தல் ஆணையராக இருந்த அனுப் சந்திர பாண்டே கடந்த பிப்ரவரி 14-ம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து மற்றொரு தேர்தல் ஆணையரான அருண் கோயல் கடந்த சனிக்கிழமை திடீரென … Read more

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கப்பல் கட்டும் தள அதிகாரி கைது

மும்பை: மும்பை மசகான் கப்பல் கட்டும் தளத்தில் பணியாற்றும் 31 வயது அதிகாரி ஒருவர், பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான மசகான் கப்பல் கட்டும் நிறுவனம் மும்பையில் இருந்து செயல்படுகிறது. கடற்படைக்கான கப்பல்களை கட்டுதல் மற்றும் பழுது நீக்கும் பணிகளை இந்த நிறுவனம் செய்து வருகிறது. இந்நிலையில் இந்த நிறுவனத்தில் கட்டமைப்பு உருவாக்குபவரான பணியாற்றி வரும் கல்பேஷ் பைக்கர் என்ற 31 வயது அதிகாரியை, பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக மகாராஷ்டிர … Read more

மோடியா? தீதியா? – பிரச்சாரத்தை தொடங்கியது மம்தா கட்சி

வங்கத்துக்கு எதிரான கட்சி பாஜக என்ற முழக்கத்தை முன்வைத்து மோடியா? தீதியா (மம்தா) என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும் என மேற்கு வங்க மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தனது பிரச்சாரத்தை நேற்று தொடங்கியுள்ளது. 2019 தேர்தலுக்குப் பிறகு மேற்கு வங்கத்தில் பாஜக ஆழமாக காலூன்ற தொடங்கியுள்ளது. அப்போது நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் 18 இடங்களை பாஜக கைப்பற்றியது. இது, கிழக்கு மாநிலங்களில் அக்கட்சிக்கு அதுவரை கிடைத்திராத மிகப்பெரிய வெற்றியாக … Read more

“திருவனந்தபுர மக்கள் என்னை நன்கு அறிவார்கள்; வெற்றி பெறுவது உறுதி” – சசி தரூர்

திருவனந்தபுரம் (கேரளா): நான் 15 ஆண்டுகளாக திருவனந்தபுரம் மக்களுக்காக பணியாற்றியிருக்கிறேன். இந்த மக்களவைத் தொகுதியில் மீண்டும் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. சமீபத்தில் 195 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது பாஜக. அதன்படி, கேரள மாநிலம் திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரை … Read more

தெலுங்கு தேசம், ஜன சேனா, பாஜக கூட்டணி உடன்பாடு: யாருக்கு எத்தனை சீட்? – ஆந்திர அரசியல்

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் வரும் மக்களவை தேர்தலுடன், அம்மாநில சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை தெலுங்கு தேசம், ஜன சேனா மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து எதிர்கொள்கின்றன. இந்நிலையில், இந்த கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட் என்ற உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இது குறித்து அறிவிப்பை ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ளார். “அமராவதியில் பாஜக, தெலுங்கு தேசம் மற்றும் ஜன சேனா கூட்டணி … Read more

“என்னை ஏன் அழைத்தீர்கள்?!” – கூட்டம் சேராததால் பாஜக நிர்வாகிகளிடம் சுரேஷ் கோபி ஆவேசம்

கொச்சி: திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கும் சுரேஷ் கோபி, அக்கட்சி நிர்வாகிகள் மத்தியில் ஆவேசமாகப் பேசிய காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி. இவர் தமிழில், தீனா, ஐ, தமிழரசன் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். பாஜக மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தவர். வரவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் திருச்சூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இதே தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் முதல்வர் கே.கருணாகரனின் மகன் கே.முரளிதரன், சிபிஐ … Read more