இரட்டை இலை யாருக்கு? – தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி அளிக்கும் புதிய மனுவை விரைவாக பரிசீலிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு, அதிமுக பெயர் மற்றும் கட்சிக்கொடியை பயன்படுத்துவது தொடர்பாக தங்களது தரப்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவை விரைவாக பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி ஓபிஎஸ் ஆதரவாளரான வா.புகழேந்தி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி சச்சின் தத்தா முன்பாக … Read more

கள்ளுக்கடை திறப்பு குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதற்கு காரணம்? எச் ராஜா விளக்கம்!

BJP H Raja On Election : நாடளுமன்ற தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் காட்டும் புதிய வித்தைகளெல்லாம் எடுபடாது என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச் ராஜா தெரிவித்துள்ளார்… 

சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்ச்சிகளின்போது மறைவான இடத்தில் மதுபானம் விநியோகிக்க திருத்த அறிவிப்பாணை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: சர்வதேச கருத்தரங்குகள், முக்கியவிளையாட்டு நிகழ்ச்சிகளின்போது சிறப்பு விருந்தினர்களுக்கு மறைவான இடத்தில் வைத்து மதுபானம் விநியோகிக்கும் வகையில் நிபந்தனைகளுடன் உரிமம் வழங்க திருத்த அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரி வித்துள்ளது. சிறப்பு விருந்தினர்களுக்கு… சர்வதேச கருத்தரங்குகள், முக்கிய விளையாட்டு நிகழ்ச்சிகளின்போது சிறப்பு விருந்தினர்களுக்கு மதுபானம் விநியோகிக்கும் வகையில் சிறப்பு உரிமம் வழங்கு வது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து பாமக வழக்கறிஞரும், சமூக நீதிக்கான வழக்கறிஞர் பேரவைத் தலைவருமான … Read more

ராகுல் காந்தியின் நடைபயணம் நிறைவு விழா பொதுக்கூட்டம்: முதல்வர் ஸ்டாலின் இன்று மும்பை பயணம்

சென்னை: ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைநீதி நடைபயணம் நிறைவு விழா மற்றும் இந்திய கூட்டணி கட்சித்தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடுகாங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தலைவர்கள் இன்று மும்பை புறப்பட்டு செல்கின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை நீதி நடைபயணத்தை கடந்த ஜனவரி 16-ம்தேதி மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கினார். மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம் வழியாக இந்த பயணம் மும்பை தாதரியில் இன்றுநிறைவடைகிறது. இதில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு … Read more

‘நீங்கள் நலமா’ திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளிடம் முதல்வர் கருத்து கேட்பு

சென்னை: நீங்கள் நலமா? திட்டத்தின் கீழ் பள்ளி,கல்லூரி மாணவிகள் உட்பட 5 பயனாளிகளிடம் முதல்வர் மு.க.ஸ்டா லின் கருத்துகளைக் கேட்டறிந்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: முதல்வரின் முகவரி துறையின் கீழ் பயனாளிகளைத் தொடர்பு கொண்டு அரசின் நலத்திட்டங்கள் குறித்த கருத்துகளைக் கேட்டறியும் புதுமை திட்டமான ‘நீங்களும் நலமா?’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 6-ம் தேதி தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து, பயனாளிகளிடம் நேரடியாக தொலைபேசி யில் தொடர்புகொண்டு, மக்கள் நலத்திட்டங்கள் குறித்து அவர்களின் … Read more

புதுச்சேரி பாஜக வேட்பாளர் யார்? – கட்சித் தலைமைக்கு 4 பேர் பட்டியல் அனுப்பிவைப்பு

புதுச்சேரி: “கட்சித் தலைமை உத்தரவிட்டால் புதுச்சேரி மக்களவை தேர்தலில் அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடுவார்” என்று மாநில பாஜக தலைவர் செல்வகணபதி எம்.பி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் சனிக்கிழமை கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: “தேர்தல் நேரம் என்பதால் முன்னாள் முதல்வர் நாராயணசாமி நிதானம் இழந்து பேசுவது சரியல்ல. அவர் தனது கட்சித் தலைவர்களையே சந்தித்துப் பேச முடியாத நிலையில்தான் உள்ளார். மத்திய அமைச்சர் உள்ளிட்ட உயர்ந்த பொறுப்புகளில் இருந்த நாராயணசாமியால் புதுச்சேரிக்கு என்ன லாபம்? … Read more