ஹவுதி தாக்குதல்.. சேதமடைந்த கப்பலில் இருந்து 21 பேரை மீட்ட இந்திய கடற்படை: வீடியோ

ஏடன் வளைகுடாவில் பார்படாஸ் கொடியுடன் வந்துகொண்டிருந்த எம்/வி ட்ரூ கான்பிடன்ஸ் என்ற சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று தாக்குதல் நடத்தினர். ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் கப்பல் கடுமையாக சேதமடைந்தது. 3 மாலுமிகள் உயிரிழந்தனர், சிலர் காயமடைந்துள்ளனர். ஏமனின் துறைமுக நகரமான ஏடனில் இருந்து 54 நாட்டிக்கல் மைல் தொலைவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதற்கிடையே தாக்கப்பட்ட கப்பலில் இருந்த மாலுமிகள் மற்றும் ஊழியர்கள் என 21 பேரை, ‘ஐ.என்.எஸ். … Read more

மெக்சிகோவில் ஹெலிகாப்டர் விபத்து… கடற்படை வீரர்கள் 3 பேர் பலி

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோ கடற்படை வீரர்கள் நேற்று, பாந்தர் ஹெலிகாப்டரில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். மெக்சிகோ வளைகுடாவில் நிறுத்தப்பட்டிருந்த போர்க்கப்பலில் இருந்து புறப்பட்டுச் சென்ற அந்த ஹெலிகாப்டர் சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து கப்பலில் இருந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஹெலிகாப்டரில் 8 பேர் பயணித்தனர். இதில், 3 வீரர்கள் உயிரிழந்தனர். 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். 2 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் … Read more

கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்.. முதல் முறையாக உயிர்ப்பலியை ஏற்படுத்திய ஹவுதி கிளர்ச்சியாளர்கள்

இஸ்ரேல்-ஹமாஸ் சண்டை முன்னெப்போதும் இல்லாத வகையில் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. இந்த போரில் இஸ்ரேலுக்கு எதிராக களமிறங்கி உள்ள ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், ஏடன் வளைகுடா மற்றும் செங்கடல் வழியாக பயணிக்கும் வர்த்தக கப்பல்களை குறிவைத்து, கடந்த நவம்பர் மாதம் முதல் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு தாங்கள் ஆதரவாக இருப்பதாகவும், இஸ்ரேல் தனது தாக்குதலை நிறுத்த வேண்டும் என்றும் ஹவுதி அமைப்பு வலியுறுத்துகிறது. இஸ்ரேல், பிரிட்டன், அமெரிக்க கப்பல்கள் மற்றும் இஸ்ரேலிய துறைமுகங்களுக்கு … Read more

கிளர்ச்சி குழுக்கள் இடையே பயங்கர மோதல் – 40 பேர் பலி

அபுஜா, மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியாவில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. அதேபோல், கொள்ளை, கொலை,பணத்திற்காக பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள், கால்நடைகளை கடத்தலில் ஈடுபடும் ‘பண்டிட்ஸ்’ என்ற கும்பல்களும் செயல்பட்டு வருகிறது. இந்த குழுக்கள் பொதுமக்கள், பாதுகாப்பு படையினரை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதேபோல், இந்த குழுக்கள் இடையே மோதல் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றனர். இந்நிலையில், நைஜீரியாவின் பினு மாகாணம் உகம் பகுதியில் 2 … Read more

பாகிஸ்தானில் பதவியேற்று கொண்ட சீக்கிய அமைச்சர்… யார் அந்த ரமேஷ் சிங் அரோரா?

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின், முதல் பெண் முதலமைச்சர் ஆக, மரியம் நவாஸ்ர தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து, மற்றொரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், சீக்கிய சமூகத்தை சேர்ந்த ரமேஷ் சிங் அரோரா, அமைச்சராகிய முதல் சீக்கியர் என்ற பெருமையை பெறுகிறார். 

உடலுறவு… கடந்தாண்டு 300 ஆண்கள்… இந்தாண்டு 365 ஆண்கள் – ஒரு பெண்ணின் சபதம் இது!

World Bizarre News: இந்தாண்டு ஒவ்வொரு நாளும் வெவ்வேறு நபர்களுடன் உடலுறவு மேற்கொண்டு,  365 ஆண்களுடன் உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என பெண் ஒருவர் சபதம் ஏற்றுள்ளார்.

போர் முரசு கொட்டும் கிம் ஜாங் உன்! ராணுவத்தை போருக்கு தயாராக உத்தரவு!

North Korea And War Preparation : அமெரிக்காவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையிலான வருடாந்திர கூட்டு இராணுவப் பயிற்சிகள் தொடங்கிய நிலையில், வட கொரிய ராணுவம் போருக்கு ஆயத்தமாக இருக்க வேண்டும் என கிம் ஜாங் உன் அறிவுறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது

உக்ரைனுக்கு எதிராக போரிட கட்டாயப்படுத்துகின்றனர்: ரஷ்ய ராணுவத்திடம் இருந்து மீட்குமாறு 7 இந்தியர்கள் கதறல்

புதுடெல்லி: உக்ரைன், ரஷ்யா இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாகபோர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சுற்றுலா சென்று உக்ரைனில் சிக்கியுள்ள 7 இந்தியர்கள் வெளியிட்ட வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் இந்தியர்கள் கூறியிருப்பதாவது: கடந்தஆண்டு டிசம்பர் 27-ம் தேதி புத்தாண்டை கொண்டாட ரஷ்யாவுக்குசுற்றுலா வந்தோம். பின்னர் ஒருஏஜெண்ட் மூலம் பெலாரஸ் சென்றோம். ஆனால், விசாவுடன்தான் செல்ல வேண்டுமென்று தெரியாது. எங்களை நெடுஞ்சாலையில் இறக்கிவிட்டு அந்த ஏஜெண்ட் ஓடிவிட்டார். போலீஸார் எங்களைப் பிடித்து ரஷ்ய ராணுவத்திடம் ஒப்படைத்து … Read more

Life Insurance in Dubai for Indian Workers | இந்திய தொழிலாளர்களுக்கு துபாயில் ஆயுள் காப்பீடு

துபாய்: யு.ஏ.இ., எனப்படும், ஐக்கிய அரபு எமிரேட்சில் டிரைவர், மிஷின் ஆப்பரேட்டர், கட்டுமான பணிகள் போன்றவற்றில் உள்ள இந்திய தொழிலாளர்களுக்கு, புதிய ஆயுள் காப்பீடு திட்டம் கிடைக்க வகை செய்துள்ளதாக துபாயில் உள்ள இந்திய துாதரகம் கூறியுள்ளது. இயற்கை மரணங்கள் மேற்காசிய நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில், 35 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். இவர்களில் 65 சதவீதம் பேர் டிரைவர் உள்ளிட்ட முறைசாரா தொழிலாளர்கள். இவர்களை வேலைக்கு எடுக்கும் நிறுவனங்கள், மருத்துவ காப்பீடு மற்றும் … Read more

அதிக சம்பளத்திற்கு ஆசைப்பட்டு… ரஷிய ராணுவத்தில் வேலையில் சேர்ந்த இந்தியர் பலி

மாஸ்கோ, ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது 2 ஆண்டுகளை கடந்தும் தொடர்ந்து, நீடித்து வருகிறது. இந்த நிலையில், ரஷிய ராணுவத்தில் இந்தியர்கள் பணியாற்றுவதும், முறையான பயிற்சி இல்லாமல் பலர் சிக்கி தவித்து வருவதும் தெரிய வந்துள்ளது. இதில், முகமது அப்சான் என்ற ஐதராபாத் நகரை சேர்ந்த இளைஞரும் ஒருவர். வேலைக்காக சென்ற அவர், உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட்டு உயிரிழந்து உள்ளார். அவருடைய மறைவை இந்திய தூதரகம் இன்று உறுதி செய்துள்ளது. அவருடைய குடும்பத்தினர் மற்றும் … Read more