ப்ளூ சட்டை மாறனை வெளுத்து வாங்கிய ஆரி..மேடையிலேயே திட்டி தீர்த்தார் ..!

நெடுஞ்சாலை படத்தின் மூலம் பிரபலமான ஆரி
பிக் பாஸ்
பட்டத்தை வென்று மேலும் பிரபலமானார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு படவிழாவில் பேசிய
ஆரி
தன் திரைப்பயணத்தில் தவறவிட்ட வாய்ப்புகள் பற்றியும், ப்ளூ சட்டை மாறனை பற்றியும் பேசியுள்ளார்.

அதாவது தனுஷ் நடிப்பில் வெளியான மாரி படத்தில் நடிக்கும் வாய்ப்பை ஆரி தவறவிட்டதாக தெரிவித்தார். மாரி படத்தில் நான் தான் வில்லனாக நடிக்கவேண்டியது. ஆனால் சில புரிதலின்மை காரணாமாக நான் அந்த வாய்ப்பை தவறவிட்டதாக கூறினார்.

பரபரப்பை கிளப்பிய கார்த்திக் நரேனின் பதிவு..ஒருவேளை அதெல்லாம் உண்மையா இருக்குமோ?

மேலும் சீனு ராமசாமியின் தென்மேற்கு பருவக்காற்று படத்தின் வாய்ப்பையும் தவறவிட்டுள்ளேன் என கூறினார் ஆரி. இதுபோன்ற நல்ல வாய்ப்புகளை இனி தவறவிடக்கூடாது என முடிவெடுத்துள்ளதாகவும் கூறினார். மேலும் தற்போது பல படங்களையும் கடுமையாக விமர்சித்து வரும் ப்ளூ சட்டை மாரனைப்பற்றியும் ஆரி பேசினார்.

முதலில் அவரின் பெயரை குறிப்பிடாமல் பொதுவாக திட்டி வந்த ஆரி ஒரு கட்டத்தில் அவருக்கு கோபம் அதிகமானதும் அவரின் பெயரை குறிப்பிட்டார். நான் ப்ளூ சட்டை மாறனை தான் சொல்கின்றேன்.
ப்ளூ சட்டை மாறன்
எங்கிருந்து வந்தார், அப்படி வந்தனர் என்று நினைத்து பார்க்க வேண்டும்.

மேலும் பரோட்டாவிற்கு மாவு பிசைவது போன்ற வார்த்தைகளெல்லாம் கண்டிக்கத்தக்கது என்றார். பல ஆண்டுகளாகவே படங்களை கடுமையாக விமர்சித்து சர்ச்சைகளில் சிக்கிவரும் மாறன் தற்போது வெளியான
வலிமை
படத்தை மிக மோசமாக விமர்சித்துள்ளார்.

இதற்கு சினிமா ரசிகர்களையும் தாண்டி பல திரைபிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து தற்போது மேடையிலேயே ப்ளூ சட்டை மாறனை ஆரி எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கானாவை அதிர வைத்த தல அஜித்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.