ரூ.1.5 லட்சம் வரி விலக்கு கிடைக்கும் PPF சேமிப்பு; முதலீட்டை இரட்டிப்பாக்க சூப்பர் ஐடியா

Double your PPF income and Tax exemption details in tamil: பொது வருங்கால வைப்பு நிதி சேமிப்பு என்பது அதிக வரி விலக்கு கிடைக்க கூடிய சிறந்த சேமிப்பு திட்டம் ஆகும். இருப்பினும் சில நிபந்தனைகள் காரணமாக இந்த திட்டத்தில் அதிகம் முதலீடு செய்ய முடியாது. ஆனால் இந்த ஐடியாவை பின்பற்றுவதன் மூலம் உங்கள் முதலீட்டுத் தொகையை இரட்டிப்பாக்கலாம். அது என்ன என்பதை இப்போது பார்ப்போம்.

பொது வருங்கால வைப்பு நிதி (PPF) கணக்கு என்பது EEE முதலீடாகும், இதில் முதலீட்டாளர் ஆண்டுக்கு ரூ. 1.5 லட்சம் வரையிலான முதலீடு, PPF வட்டி மற்றும் PPF முதிர்வுத் தொகை ஆகியவற்றில் வருமான வரி விலக்கு பெறுகிறார். இருப்பினும், சம்பாதிக்கும் தனிநபர் ஒன்றுக்கு மேற்பட்ட பிபிஎஃப் கணக்கு வைத்திருக்க முடியாது மற்றும் ஒரு குறிப்பிட்ட நிதியாண்டில் ஒரு பிபிஎஃப் கணக்கில் ரூ.1.5 லட்சத்துக்கு மேல் முதலீடு செய்ய முடியாது.

ஆனால், திருமணமான ஒருவர் தனது மனைவியின் பெயரில் பிபிஎஃப் கணக்கைத் திறப்பதன் மூலம் தனது பிபிஎஃப் முதலீட்டை இரட்டிப்பாக்கலாம். இதனால், வருமானம் ஈட்டும் தனிநபர் ஆண்டுக்கு ரூ. 3 லட்சம் வரை (தனது பெயரில் ரூ. 1.5 லட்சம் மற்றும் மனைவியின் பிபிஎஃப் கணக்கில் ரூ. 1.5 லட்சம்) பிபிஎஃப்-ல் முதலீடு செய்யலாம்.

ஒரு குறிப்பிட்ட நிதியாண்டில் சம்பளதாரர் பிபிஎஃப் கணக்கு வரம்பை முடித்துவிட்டு, கூடுதலாக வருமான வரி விலக்கு பெற விரும்பினால், அவரது மனைவி பெயரில் ஒரு PPF கணக்கை திறக்கலாம். இதன் மூலம் அவர் தனது PPF முதலீட்டு வரம்பை ரூ.3 லட்சமாக இரட்டிப்பாக்க முடியும். இருப்பினும், பிரிவு 80c இன் கீழ் முதலீடுகள் மீதான ஒட்டுமொத்த வருமான வரி விலக்கு ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் என்பது நினைவிருக்கட்டும்.

இதையும் படியுங்கள்: 7% க்கும் குறைந்த வட்டி; செகண்ட் ஹேண்ட் கார் வாங்குபவர்களுக்கு சூப்பர் ஆஃபர்

சம்பளதாரர் மனைவியின் பிபிஎஃப் கணக்கில் முதலீடு செய்தால், அந்த முதலீட்டின் ஆதாரம் கணவரிடம் தொடர்ந்து இருக்கும் மற்றும் மனைவியின் PPF கணக்கில் சம்பாதித்த PPF வட்டி கணவரின் வருமானத்துடன் இணைக்கப்படும். இருப்பினும், PPF வட்டிக்கு வருமான வரி விலக்கு உண்டு என்பதால், அந்த வருடத்தில் மனைவி பெற்ற PPF வட்டி கணவரின் வருமானத்துடன் இணைந்தாலும் அதற்கும் வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.

பரஸ்பர நிதிகள், பங்குகள், NPS போன்ற சந்தையுடன் இணைக்கப்பட்ட முதலீட்டு கருவிகளில் முதலீடு செய்ய விரும்பதா, குறைந்த ஆபத்து விருப்பமுள்ள முதலீட்டாளர்களுக்கு இது சிறந்த முதலீட்டு திட்டமாகும்.

தற்போது, ​​PPF வட்டி விகிதம் 7.1 சதவீதமாக உள்ளது, இது EPF வட்டி விகிதம் மற்றும் சுகன்யா சம்ரித்தி யோஜனா வட்டி விகிதங்களுக்கு அடுத்தப்படியாக அதிக வட்டி விகிதம் ஆகும்.

“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.