பல்கலை., பேராசிரியருக்கு விருது| Dinamalar

புதுச்சேரி-சிறந்த கல்வியாளருக்கான விருது பெற்ற பல்கலைக்கழக பேராசிரியர் ராமையா, துணை வேந்தர் குர்மீத்சிங்கை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.டெல்லியில் இயங்கி வரும் புதிய கல்விக் குறியீட்டு நிறுவனம் சார்பில், இந்திய அளவில் உயர் கல்வியில் சிறந்து விளங்கும் அதிகாரிகள், பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்கு ஆண்டு தோறும் சிறந்த கல்வியாளருக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு சிறந்த கல்வியாளருக்கான விருது, புதுச்சேரி பல்கலைக் கழக தொலைதுார கல்வி இயக்ககத்தின் இயக்குநர் ராமையாவிற்கு வழங்கப் பட்டுள்ளது.இந்த விருதினை மத்திய அரசின் அகில இந்திய தொழில்நுட்பக் கழகத் தலைவர் அனில் சகஸ்ரபுதே, பேராசிரியர் ராமையாவிற்கு வழங்கினார்.விருது பெற்ற பேராசிரியர் ராமையா, துணைவேந்தர் குர்மீத்சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.