சென்னை Vs பிற மாநிலங்களின் முக்கிய மாநகர சொத்து வரி விலை நிர்ணயம்: ஓர் ஓப்பீடு!

சென்னையில் 600 மற்றும் 1000 சதுர அடி பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடத்திற்கு குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச சொத்துவரி நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நிலையில், பிற மாநகரங்களில் இந்த விலை நிர்ணயம் என்னவாக இருக்கிறது என்பது குறித்த ஒப்பீட்டு விவரங்கள் இங்கே.
தமிழகத்தில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதைக் குறிப்பிட்டு, எதிர்க்கட்சிகள் தமிழகத்தை விமர்சித்து வந்தன. அதற்கு தமிழக அரசு தரப்பில், `தமிழகத்தில் சொத்துவரி உயர்த்தப்பட்ட பின்பும் அது இந்தியாவின் பல மாநகரங்கள் மற்றும் நகரங்களுடன் ஒப்பிடுகையில் குறைவாக இருக்கிறது’ என விளக்கம் தெரிவிக்கப்பட்டது. இதைக் குறிப்பிடுகையில் அரசு தரப்பில் சென்னை மாநகராட்சியில் 600 சதுர அடி குடியிருப்புக்கு குறைந்தபட்ச சொத்துவரியாக 1,215 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளதும்; இதே பரப்பளவுள்ள குடியிருப்புக்கு, மும்பையில் 2,157 ரூபாயும், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 3,464 ரூபாயும், கொல்கத்தாவில் 3,510 ருபாயும் வசூலிக்கப்படுவது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. புதிதாக வரையறை செய்யப்பட்டுள்ள இந்த சொத்துவரிக்கான சீராய்வு, 2022-23ஆம் ஆண்டின் முதலாம் அரையாண்டு முதல் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
image
அரசின் இந்த ஒப்பீட்டை அடிப்படையாக வைத்து, மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் சொத்துவரி எவ்வாறாக உள்ளது மற்றும் சென்னை மாநகராட்சி மற்றும் மற்ற மாநிலங்களில் சொத்து வரி எவ்வளவு வசூலிக்கப்படுகிறது என்ற விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
சென்னை மாநகராட்சியில் 600 சதுர அடி பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடத்திற்கு குறைந்தபட்ச சொத்து வரி 810 ரூபாயில் இருந்து 1215 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதே பரப்பளவு கொண்ட குடியிருப்பு கட்டிடத்திற்கு, குறைந்தபட்ச சொத்துவரியாக
* மும்பை – ரூ. 2,257 ரூபாய்
* பெங்களூர் – ரூ. 3,464.064
* கொல்கத்தா – ரூ. 3,510
* புனே – ரூ. 3,924.6
வசூலிக்கப்படுகிறது.
சென்னை மாநகராட்சியில் 600 சதுர அடி பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடத்திற்கு அதிகபட்ச சொத்து வரி 3,240 ரூபாயில் இருந்து 4,860 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதே பரப்பளவு கொண்ட குடியிருப்பு கட்டிடத்திற்கு,
* பெங்களூர் – ரூ. 8,660.16
* கொல்கத்தா – ரூ. 15,984
* புனே – ரூ. 17,112.6
* மும்பை – ரூ. 84,583.8
வசூலிக்கப்படுகிறது.
image
சென்னை மாநகராட்சியில் 1000 சதுர அடி பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடத்திற்கு அதிகபட்ச சொத்து வரி 9,045 ரூபாயில் இருந்து 13,568 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதே பரப்பளவு கொண்ட குடியிருப்பு கட்டிடத்திற்கு,
* பெங்களூர் – ரூ. 14,433.6
* கொல்கத்தா – ரூ. 26640
* புனே – ரூ. 28521
* மும்பை – ரூ. 1,40,973
வசூலிக்கப்படுகிறது.
தொடர்புடைய செய்தி: தமிழ்நாட்டில் சொத்து வரிகள் உயர்வு – முழு விவரம்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.