புதுடில்லி :ஏமனில், ஹவுதி கிளர்ச்சியாளர்களால் சிறைபிடிக்கப்பட்ட ஏழு இந்தியர்கள் உட்பட 14 பேர் விடுவிக்கப்பட்டனர். மேற்காசிய நாடான ஏமனில் கடல் வழியே சென்று கொண்டிருந்த, ஐக்கிய அரபு எமிரேட்சின் சரக்கு கப்பலை, ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் சிறைபிடித்தனர். இக்கப்பலில் பணியாற்றி வந்த இந்தியாவை சேர்ந்த ஏழு பேர் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 14 பேர் சிறைபிடிக்கப்பட்டனர்.அவர்களை மீட்க, ஓமன் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. இதன் பலனாக, ஏழு இந்தியர்கள் உட்பட 14 பேரும் நேற்று முன் தினம் விடுவிக்கப்பட்டனர்.விடுவிக்கப்பட்ட அனைவரும் ஓமன் தலைநகர் மஸ்கட்டுக்கு விமானம் வாயிலாக அழைத்து வரப்பட்டனர்.இந்த விவகாரத்தில் உதவிய ஓமன் அரசுக்கு, நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நன்றி தெரிவித்தார்.
புதுடில்லி :ஏமனில், ஹவுதி கிளர்ச்சியாளர்களால் சிறைபிடிக்கப்பட்ட ஏழு இந்தியர்கள் உட்பட 14 பேர் விடுவிக்கப்பட்டனர். மேற்காசிய நாடான ஏமனில் கடல் வழியே சென்று கொண்டிருந்த, ஐக்கிய அரபு
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.