காங்கோ ஜனநாயகக் குடியரசில் ஆற்றில் உள்ள நீர்யானைகளுக்கும் அதன் கரையில் உள்ள மனிதர்களுக்குமான மோதல் அதிகரித்துள்ளது.
ஆப்பிரிக்காவில் உள்ள ருசிசி ஆறு காங்கோ ஜனநாயகக் குடியரசுக்கும், புருண்டிக்கும் இடையே எல்லைக் கோடாக அமைந்துள்ளது.
எப்போதும் நீர்வளம் நிறைந்துள்ள இந்த ஆற்றில் நீர்யானைகள் வாழ்ந்து வருகின்றன.
ஆற்றின் கரையோரப் பகுதிகளை ஆக்கிரமித்துப் பொதுமக்கள் வீடு கட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அவ்வப்போது நீர்யானைகள் தாக்கியதில் பலர் உயிரிழந்ததால் ஆற்றங்கரை ஊர்களில் உள்ள மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.