பழமையான மரத்துக்கு அருகே நிர்வாண போட்டோஷூட் நடத்திய ரஷ்ய தம்பதி


இந்தோனேஷியாவின் பாலியில் பழமையான மரத்துக்கு அருகே நிர்வாணமாக போட்டோஷூட் நடத்திய ரஷ்ய தம்பதியினர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ரஷ்யாவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலமான அலினா பஸ்லீவா, தனது கணவருடன் இந்தோனேசிய தீவுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

அங்குள்ள பாலியின் தபானன் மாவட்டத்தில் உள்ள 700 ஆண்டுகள் பழமையான கோவிலுக்கு சென்றுள்ளார்.

இயற்கை எழில் கொஞ்சும் மரங்களை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த போது, பழமையான மரம் ஒன்றை ரசித்து பார்த்துள்ளார்.

அந்த மரத்துக்கு அருகே நின்ற அலினா பஸ்லீவா, நிர்வாணமாக புகைப்படங்களை எடுத்துக் கொண்டார், இதை இன்ஸ்டாகிராமில் வெளியிட வைரலானது.

ஆனால் தங்களுடைய மத நம்பிக்கையை இழிவுபடுத்திவிட்டார் என அலினா பஸ்லீவாவுக்கு எதிராக கண்டனங்கள் எழுந்தன.

இதனையடுத்து இவர்களின் செயல் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் விதமாகவும், உள்ளூர் விதிகளை மீறியதாகவும் உள்ளது எனக்கூறி அவரை பாலியை விட்டு வெளியேற உத்தரவிட்டார் குடியேற்றத்துறை தலைவர்.

மேலும் இருவருக்கும் இந்தோனேசியாவில் நுழைய ஆறு மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் உள்ளூர் மக்கள் புனிதமாகக் கருதும் அந்த இடத்தை தூய்மை செய்யும் பணியில் இவர்கள் பங்கேற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து மன்னிப்பு கேட்ட அலினா பஸ்லீவா, நான் தவறு செய்துவிட்டேன், பாலியில் பல புனிதமான இடங்கள் இருந்தாலும் பலகைகள் வைக்கப்படுவதில்லை, மரபுகளை மதிப்பு நடப்பது மிக முக்கியம், அது புனிதமான இடம் என தெரியாததால் இந்த தவறு நடந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.

ஏவுகணைகளுடன் ரஷ்ய போர் கப்பல்: நொடிக்குள் பதம் பார்த்த உக்ரைன் ட்ரோன் விமானம் 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.