ஸ்மார்ட்போன் வாங்க போறிங்களா? இதை படிச்சி பார்த்துட்டு போனா நல்லது!

ஸ்மார்ட்போன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.செல்போன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு கொண்டு பல ஸ்மார்ட்போன்களை வெவ்வேறு பட்ஜெட்களில் அறிமுகம் செய்கின்றனர். ஸ்மார்ட்போன்களுக்கு இடையே ஒருசில வசதிகள் மட்டுமே வேறுபடுவதால், எதனை வாங்கலாம் என்கிற குழப்பம் மக்களிடையே இருப்பது உண்டு. அதனை தீர்க்கும் வகையில், ரூ20 ஆயிரத்திற்குள் இம்மாதம் பெஸ்ட் மொபைலாக தேர்வு செய்யப்பட்ட 5 ஸ்மார்ட்போனை இங்கே காணலாம். இவை பிராசஸர், கேமரா, பாஸ்ட் சார்ஜிங் போன்ற வசதிகளுடன் குறைவான விலையில் கிடைக்கின்றன.

OnePlus Nord CE 2 Lite

ஒன்பிளஸ் நார்ட் சிஇ 2 லைட் மொபைல் தான், ரூ20 ஆயிரத்திற்குள் வெளியான முதல் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் ஆகும். இதில், ஸ்னாப்டிராகன் 695 5ஜி பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இந்த விலையில், உங்களுக்கு 6ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் கிடைக்கும்.

மேலும், மொபைலில் 64 எம்.பி பிரைமரி கேமராவும், இரண்டு 2 எம்.பி சென்சாரும் இடம்பெற்றுள்ளது. அதேபோல், 16 எம்.பி செல்பி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. இறுதியாக, 5000 mah பேட்டரியுடன் 33W பாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

Redmi Note 11 Pro/ Pro+

ரெட்மி நோட் 11 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் டிஸ்பிளே, மீடியாடெக் ஹீலியோ ஜி 96 பிராசஸர் கொண்டுள்ளது. இதில், 5ஜி ஆதரவு கிடையாது. கேமரா பொறுத்தவரை, 108 எம்.பி முதன்மை கேமரா, 8 எம்.பி அல்ட்ரா வைடு கேமரா, 16 எம்.பி செல்பி கேமராவும் உள்ளது. மேலும், 5000mah பேட்டரியுடன் 67W பாஸ்ட் சார்ஜிங் வசதி கிடைக்கிறது.

அதே சமயம், ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் ஸ்மாட்ர்போன் ஸ்னாப்டிராகன் 695 5ஜி ஆதரவுடன் கிடைக்கிறது. இதன் விலை ரூ20,999 நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், விற்பனை சலுகையில் குறைந்த விலையில் பெற வாய்ப்புள்ளது.

Poco X4 Pro

இந்த விலை பிரிவில், போக்கோ எக்ஸ்4 ப்ரோ பெஸ்ட் சாய்ஸாக உள்ளது. 6.67 இன்ச் FHD+ 120Hz AMOLED டிஸ்பிளே,ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர், 64எம்.பி முதன்மை கேமரா, 8 எம்.பி அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா என மூன்று பின்புற கேமராக்களும், 16 எம்.பி செல்பி கேமராவும் உள்ளது.

மேலும், 5000mah பேட்டரியுடன் 67W பாஸ்ட் சார்ஜிங் வசதி கிடைக்கிறது.

Realme 9 5G Speed Edition

இந்த விலை பிரிவில், பெஸ்ட் பிராசஸ்ர் கொண்ட மொபைல் ரியல்மி 9 5ஜி ஸ்பீடு எடிஷன் தான். 144Hz FHD+ IPS LCD டிஸ்பிளே, இரண்டு 2எம்.பி சென்சார்கள் கொண்ட 48எம்.பி முதன்மை கேமரா, 16எம்.பி செல்பி கேமரா மட்டுமின்றி 5000mah பேட்டரியுடன் 30W பாஸ்ட் சார்ஜிங் வசதி கிடைக்கிறது.

Motorola G71 5G

ஸ்டாக் ஆன்ட்ராய்டு கொண்ட ஃபோனைத் தேடுகிறீர்களானால், Motorola G71 5G சிறந்த தேர்வு ஆகும்.

இந்த மொபைல் 6.4 இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 695 5ஜி பிராசஸர், 50 எம்.பி முதன்மை கேமரா, 8எம்.பி அல்ட்ராவைடு கேமரா, 2 எம்.பி சென்சார் என மூன்று பின்பற கேமராக்கள் உள்ளன. மேலும், 5000mah பேட்டரியுடன் 30W பாஸ்ட் சார்ஜிங் வசதி கிடைக்கிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.