Munnar: ஹனிமூன் ஸ்பாட் மூணாரில் மிஸ் பண்ணக்கூடாத இடங்கள்|Visual Story

`தென்னிந்தியாவின் காஷ்மீர்’ என்று அழைக்கப்படக்கூடிய மூணாரில் மிஸ் பண்ணாமல் பார்க்கவேண்டிய முக்கியமான இடங்கள் பற்றிய Photo Story.

மூணாருக்கு போடி வழியாகச் செல்கிறீர்கள் எனில் இந்த இடத்தை மிஸ் பண்ணாம பாருங்க. காற்றாலை, தேனி மாவட்டத்தின் ரம்மியமானக் காட்சி, மேற்குத்தொடர்ச்சி மலையின் அழகு என ஏராளமான இயற்கை அழகை இங்கு காணலாம்.

கொளுக்குமலை: போடிக்கும் கேரளாவின் இடுக்கிக்கும் இடையில் அமைந்துள்ளது இந்த கொளுக்குமலை. இந்த இடத்திலிருந்து காலை சூரிய உதயத்தைக் காண்பது ரம்மியமான உணர்வைத் தரும். ஜிப் மட்டுமே அனுமதிக்கப்பட்டும் ஒரு தனியார்ப் பகுதியாகும் இது. நல்ல ஆப் ரோடு அனுபவத்தை இங்கு பெறலாம்.

ராஜமலை இரவிகுளம் தேசிய பூங்கா: மலை உச்சியில் மட்டுமே வாழக்கூடிய தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடுகள் நிறைந்த பகுதி இது. இந்த மலையில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப் பூக்கள் இங்கு உள்ளன.

ஆனைமுடி சிகரம்: தென்னிந்தியாவின் மிக உயரமான இடம் இந்த ஆனைமுடி சிகரம்தான். இதன் உச்சியிலிருந்து பச்சைப் பசேலென இருக்கும் மலைத்தொடர்களின் அழகைக் கண்டு ரசிக்கலாம்.

டாப் ஸ்டேஷன்: கண்ணன் தேவன் மலைகளில் ஒரு பகுதியாக உள்ளது இந்த டாப் ஸ்டேஷன். இங்கு அரியவகை நீலக்குறிஞ்சி மலர்களைக் காணலாம். இதனருகில் குறிஞ்சி மலர் சரணாலயம் இருக்கிறது.

மரையூர் சந்தனக் காடுகள்: ஓங்கி வளர்ந்த மரங்கள், சந்தனக் காடுகள், நீரோடைகள் என இயற்கை அழகு கொஞ்சும் இடம் இந்த மரையூர்.

குண்டலா ஏரி: சுற்றி மலைகள் நடுவில் ஏரி என இயற்கை அழகு நிறைந்த இடம் இந்த குண்டலா ஏரி. படகு சவாரிகளுக்கு இங்கு அனுமதி உள்ளது.

அட்டுக்காடு நீர் வீழ்ச்சி : நீரோடைகளையும், சிறிய நீர் வீழ்ச்சிகளையும் கொண்ட இடம் இந்த அட்டுக்காடு நீர் வீழ்ச்சி. இந்த நீர் வீழ்ச்சி கேரளாவின் பிரபலமான நீர் வீழ்ச்சிகளில் ஒன்று.

சின்னாரு வனவிலங்கு சரணாலயம்: 34 வகையான பாலூட்டிகளும் 245 வகையான பறவைகளும், 52 வகையான ஊர்வனங்களும், 965 வகையான பூக்கும் தாவரங்கள் இப்பகுதியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

மாட்டுப்பட்டி அணை: படகு சவாரி, மலைகள் சூழ்ந்த ரம்மியமான ஏரி என ஒரு நல்ல ரிலாக்சிங் ஸ்பாட் இந்த இடம்.

லக்கோம் நீர் வீழ்ச்சி: மூணார்-மாயாயூர் வழித்தடத்தில் அமைந்துள்ள இந்த நீர் வீழ்ச்சி. இந்த நீர் வீழ்ச்சியின் அருகிலேயே சென்று இதன் அழகை ரசிக்கலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.