உக்ரைனுக்கு ஆயுதம் வழங்குவது நிலைமையை மேலும் சீர்குலைக்கும் என ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிப்ரவரி 24 முதல் உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, அதன் தெற்கு கிழக்குப் பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது.
மூன்று மாதத்துக்கு மேல் போர் நீடிக்கும் நிலையில், ரஷ்யாவை எதிர்த்துப் போரிட உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஆயுதம் வழங்கி வருகின்றன. இந்நிலையில் ஜெர்மனிக்கும் பிரான்சுக்கும் விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.