அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு பழமாக வாழைப்பழம் உள்ளது. ஒவ்வொரு வகையான வாழைப்பழத்திலும் எண்ண முடியாத அளவிற்கு நோய்களை பாதுகாக்கும் ஆற்றல் அடங்கியுள்ளது.
இந்த வாழைப்பழமானது கோடை காலத்திலும் சரி, மழை காலத்திலும் கிடைக்கக்கூடிய அறிய வகை பழ வகையாகும்.
இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி-6, வைட்டமின் சி, மக்னீசியம், நார்ச்சத்துக்கள் ஆகியவை நிறைந்துள்ளன. மற்றும் இது பழவகையான ஆரோக்கிய நன்மைகளை தருகின்றது.
இருப்பினும் இதனை அதிகளவு எடுத்து கொள்ள கூடாது.
ஏனெனில் இது சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாக அமைகின்றது.
அந்தவகையில் தற்போது இதனை அதிகமாக உட்கொள்வது என்ன மாதிரியான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பார்ப்போம்.
- வாழைப்பழம் அதிகமாக சாப்பிட்டு வந்தால் ஒற்றைத்தலைவலி, சுவாசப் பிரச்சனைகள், சிறுநீரகப் பிரச்சனைகள், நரம்புப் பிரச்சனைகள், ரத்தத்தில் அதிக அளவு பொட்டாசியம் இருந்தால் வரும் ஹைபர்கலீமியா, பற்சிதைவு, சோம்பல், மலச்சிக்கல், வாயுத்தொல்லை ஆகியவை உண்டாகும்.
- ஆஸ்துமா மற்றும் நோய் எதிர்ப்பு குறைபாடு உள்ளவர்களுக்கும், வாழைப்பழம் அதிகம் உட்கொள்பவர்களுக்கும் ஒரே மாதிரியான ஒவ்வாமை அறிகுறிகள் உள்ளது.
- சிறுநீரக பிரச்சனை இருந்தால் வாழைப்பழம் உண்பதை குறைக்கவும். ஏனெனில் வாழைப்பழத்தில் பொட்டாசியம் உள்ளது, இதனால் உங்கள் சிறுநீரகம் இரத்தத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்ற சிரமப்படும். இது ஆபத்தை விளைவிக்கும்.
- வாழைப்பழம் அல்லது அதற்கு இணையான சத்துக்கள் கொண்ட வேறொரு பழத்தை சாப்பிடும்போது மூச்சுத் திணறுதல் மற்றும் தொண்டை எரிச்சல் ஏற்பட்டால் உங்களுக்கு ஒவ்வாமை உள்ளது என்று அர்த்தம்.