அரபு நாடுகளில் இருந்து இந்தியா வர, இரட்டிப்பாகும் விமான கட்டணங்கள்: அதிர்ச்சி தகவல்

ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு செல்லும் விமான கட்டணங்கள் இரண்டு மடங்கு உயர வாய்ப்பு இருப்பதாகவும், அது நான்கு மடங்காக உயர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் கூறப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

‘தி கலீஜ்டைம்’ என்ற பத்திரிகையின் அறிக்கையின்படி ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் அதன் காரணமாக விமான கட்டணங்கள் இரண்டு முதல் நான்கு மடங்காக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.

ஓரே நாளில் 3 வங்கி தலைவர்கள் நியமனம்.. யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் தலைவராக மணிமேகலை..!

கோடை விடுமுறை காரணமாக ஏராளமானோர் அரபு நாடுகளில் உள்ள இந்தியர்கள் தங்கள் தாய் நாட்டிற்கு செல்ல விரும்புகிறார்கள் என்றும், அதனால் பயணத்தின் தேவை அதிகரித்து உள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயணிகள்

பயணிகள்

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக விமான பயணத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன என்பதால் விமான பயணத்தின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்தது. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் விதிமுறைகள் தளர்த்தப்பட்டதை அடுத்து மீண்டும் ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கோடை விடுமுறை

கோடை விடுமுறை

குறிப்பாக துபாயில் கோடை விடுமுறை மாதங்கள் என்று கருதப்படும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இந்தியாவில் இருந்து துபாய் செல்லும் பயணிகளின் எண்ணிக்கையும் துபாயில் இருந்து இந்தியா செல்லும் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்றும் அதனால் பயணத்திற்கான தேவை அதிகரித்திருப்பதால் பயண கட்டணம் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

விமான பயணம்
 

விமான பயணம்

பல வெளிநாட்டினர் தங்கள் குடும்பத்துடன் இந்த நேரத்தில் இந்தியாவுக்கு திரும்பி வருகின்றனர் என்றும், அதிக விமான கட்டணங்கள் கடந்த இரண்டு வருடங்களாக இருந்ததன் காரணமாக குடும்பத்துடன் விமான பயணங்கள் செல்வதை தவிர்த்து வந்தாலும் தற்போது வேறு வழி இல்லாமல் பயணம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் பயணிகள் இருக்கிறார்கள் என்று கூறப்பட்டு வருகிறது.

டிக்கெட் விலை

டிக்கெட் விலை

ஐக்கிய அரபு நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு செல்லும் பயணியின் டிக்கெட் சேரும் இடத்தை பொருத்து சுமார் ரூ.33,000 வரை தற்போது உள்ளது என்றும் துபாயில் இருந்து வெளிவரும் ஆங்கில நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

அரபு நாடுகள்

அரபு நாடுகள்

அதேபோல் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் இருந்து அரபு நாடுகளுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாகவும், அதனால் விமான கட்டணங்கள் உயர்வை தடுக்க முயலவில்லை என்றும் புளூட்டோ டிராவல் ஏஜென்சி நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

ரூ.3000 உயர்வு

ரூ.3000 உயர்வு

ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அரபு நாடுகளிலிருந்து இந்திய நகரங்களுக்கு செல்லும் விமான கட்டணம் 3,000 ரூபாய் வரை உயரக்கூடும் என்று பயணத்துறை நிர்வாகிகள் கருதுகின்றனர். இதனால் அரபு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு செல்ல விமான கட்டணம் ரூ.33,000க்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பயணத்துறை

பயணத்துறை

விமானப்பயணம் என்பது தற்போது தவிர்க்க முடியாத அளவில் இருப்பதை அடுத்து பயண கட்டணம் உயர்ந்தாலும் பயணிகள் விமான பயணத்தை மேற்கொள்வார்கள் என்றும், கட்டண உயர்வால் விமான பயணத்தின் எண்ணிக்கை குறைய வாய்ப்பே இல்லை என்றும் பயணத்துறை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Airfare for India bound flights from UAE likely to double during July and August

Airfare for India bound flights from UAE likely to double during July and August

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.