கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே திடீரென சாலையை கடக்க முயன்ற லாரியால், இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் கணவன் மனைவி உயிரிழந்த விபத்தின் சிசிடிவிக் காட்சி வெளியாகியுள்ளது.
அன்பு என்பவர் தனது மனைவி மற்றும் 4 மாத குழந்தையுடன் ஐங்குந்தம் பகுதிக்கு பைக்கில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது சாமல்பள்ளம் பகுதியில் திடீரென ஒரு லாரி சாலையை கடக்க முயன்றதால், அன்புவின் பைக் மீது பின்னால் வந்த லாரி பயங்கரமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு கணவன் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் 4 மாத குழந்தையை மீட்ட மக்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.