கடலூர் திட்டக்குடி அருகே தனியார் பள்ளி பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் மாணவ-மாணவிகள் சிறு காயங்களுடன் உயிர்தப்பியுள்ளனர்.
கடலூர் மாவட்டம் கழுதூரில் இயங்கி வரும் தனியார் பள்ளி பேருந்து ஒன்று வழக்கம்போல் இன்று காலை மாணவ மாணவிகளை ஏற்றுக்கொண்டு சென்றது.
அப்பொழுது கனகம்பாடி கிராமம் அருகே பேருந்து அதிவேகமாக சென்ற நிலையில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் விபத்தில் சிக்கிய மாணவ மாணவிகளை மீட்ட நிலையில், இந்த விபத்தில் சிறு காயங்களுடன் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளனர்.
மேலும் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த ராமநத்தம் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.