இந்தியாவின் பிரபல நட்சத்திர தம்பதிகளான ரன்வீர் சிங் – திபிகா படுகோன் ஜோடி மும்பை பாந்த்ராவில் 119 கோடி ரூபாம் மதிப்பில் குவாட்ரப்ளக்ஸ் அப்பார்ட்மெண்ட் ஒன்றை வாங்கியுள்ளனர்.
119 கோடி ரூபாய்க்கு வீடா, பலரும் வாழ் நாளில் நினைத்து பார்த்திராத இந்த வீட்டில், அப்படி என்ன ஸ்பெஷல்? வாருங்கள் பார்க்கலாம்.
இலங்கையின் இந்த மோசமான நிலைக்கு என்ன காரணம்.. அடுத்து என்ன நடக்கும்?

நாட்டில் விலையுயர்ந்த குடியிருப்பு
பிரபல பாலிவுட் ஜோடியான தீபிகாவும், ரன்வீரும் மும்பையின் பாந்த்ரா பகுதியில் இந்த விலையுயர்ந்த சொகுசு வீட்டினை வாங்கியுள்ளனர். இந்த அபார்ட்மெண்ட் நாட்டின் மிகப்பெரிய விலை உயர்ந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒன்று என்று கூறப்படுகிறது.

அண்டை வீட்டுக் காரர்கள் யார் தெரியுமா?
இந்த அபார்ட்மெண்ட் சல்மான்கானின் கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்புக்கும், ஷாருக்கானின் மன்னத் பங்களாவுக்கும் இடையில் இருக்கும் என கூறப்படுகிறது.
இதன் மூலம் இவர்கள் விரைவில் மற்ற பிரபல நடிகர்களான ஷாருக்கான் மற்றும் சல்மான் கான் வீட்டின் அருகில் குடியேறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

அபார்ட்மெண்ட்டின் பரப்பளவு
இந்த அபார்ட்மெண்ட் 16வது மாடி, 17வது, 18 மற்றும் 19வது மாடிகளை இணைத்து, கட்டப்படுவதாகவும், இதன் மொத்த பரப்பளவும் 11,266 சதுர அடி கார்பெட் பரப்பளவும், 1300 சதுர அடி மொட்டை மாடியையும் கொண்டுள்ளது. இதன் 1 சதுர அடியின் விலை 1 லட்சம் ரூபாயாகும். இதற்கு பதிவு கட்டணம் மட்டும் 7.13 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளதாகவும், பார்க்கிங் ஏரியாவில் வாகனத்தை நிறுத்த மட்டும் 19 வாகனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதிக சம்பளம் வாங்கும் நடிகர்
ரன்வீர் சிங் 2010ல் அறிமுகமானதை தொடர்ந்து, ஹிந்தி திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் ஒரு நடிகராக உள்ளார்.
நாட்டின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் சந்தையான மும்பையில், 2020ம் ஆண்டு மாநில அரசு வரையறுக்கப்பட்ட முத்திரை தாள் கட்டண குறைப்புக்கு பிறகு, பெரியளவிலான ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டு வருகின்றன.

காஸ்ட்லி ரியல் எஸ்டேட் சந்தை
மும்பை நகரத்தில் இந்த பகுதியில் பல பெரிய ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகள், சமீபத்திய காலமாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் அயனாக்ஸ் குழுமத்தின் சித்தார்த் ஜெயின், மும்பையின் லோகேளிட்டியான வொர்லியில் உள்ள டாக்டர் அன்னி பெசன்ட் சாலையில் உள்ள ஒரு சூப்பர் பிரீமியம் குடியிருப்பில் உள்ள குவாட்ரப்ளக்ஸ் அடுக்குமாடியினை 144 கோடி ரூபாய்க்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.

கடலை ரசிக்கலாம்
தீபிகா – ரன்வீரின் இந்த சொகுசு வீட்டில் இருந்து அரபிக் கடலை கண்டுகளிக்க முடியும் என்பது மற்றொரு தனிச் சிறப்பு.
மும்பையில் ரியல் எஸ்டேட் மதிப்பானது அதிகரித்து வரும் நிலையில், தற்போது வட்டி விகிதமும் அதிகரித்துள்ளது. எனினும் முத்திரை தாள் கட்டணம் குறைவாக உள்ளது.

சொத்து பதிவு அதிகரிப்பு
மும்பை கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 9,919 சொத்துகளை பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் 26% அதிகமாகும். இது ஜூன் மாதத்திற்கான ஒப்பந்தங்களின் எண்ணிக்கை மற்றும் 733 கோடி ரூபாய் வரி என்பதிலும் புதிய உச்சத்தினை எட்டியுள்ளது.
Deepika padukone – Ranveer Singh couple who bought a house for Rs 119 crore: What’s so special about it?
Deepika padukone – Ranveer Singh couple who bought a house for Rs 119 crore: What’s so special about it?/அம்மாடியோ.. ரூ.119 கோடிக்கு வீடு வாங்கிய தீபிகா – ரன்வீர் சிங் ஜோடி.. அப்படி என்ன ஸ்பெஷல்!