கூகுள் உடன் ஒப்பந்தம் செய்த முதல் நகரம்.. பெங்களூரு மக்களுக்கு கிடைத்த ஜாக்பாட்!

பெங்களூரு நகரத்தில் கடந்த பல வருடங்களாக டிராபிக் பிரச்சினை இருந்து வருகிறது என்றும் பெங்களூர் டிராபிக் போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தும் டிராபிக் பிரச்சனைகளை குறைக்க முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பெங்களூர் காவல்துறை கூகுள் மேப் உடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் காரணமாக பெங்களூரில் மிகப்பெரிய அளவில் டிராபிக் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூகுள் மேப் உதவியுடன் தற்போது பெங்களூரு வாகன ஓட்டிகள் எந்தெந்த இடத்தில் எந்த அளவுக்கு டிராபிக் இருக்கின்றது என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்ப தங்கள் பாதையை நிர்ணயித்து கொள்வதால் இது பெங்களூரு வாகன ஓட்டிகளுக்கு ஒரு ஜாக்பாட் ஆகவே கருதப்படுகிறது.

நார்வே நாட்டில் டெஸ்லா கார்கள் மிக அதிகம் பயன்படுத்துவது ஏன்? இதோ காரணங்கள்

பெங்களூரு டிராபிக்

பெங்களூரு டிராபிக்

பெங்களூரு நகரத்தை சேர்ந்த ஒருவர் தங்கள் வீடு அல்லது அலுவலகத்தில் இருப்பதை விட அதிக நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்வதாக நகைச்சுவையாக சொல்லப்படுகிறது. 2021 TomTom ட்ராஃபிக் இன்டெக்ஸ் படி, பெங்களூரில் 48 சதவீத போக்குவரத்து நெரிசல் உள்ளது மற்றும் சராசரியாக ஒரு குடிமகன் போக்குவரத்து காரணமாக வருடத்திற்கு 110 மணிநேரத்தை இழக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளது.

போக்குவரத்து காவல்துறை

போக்குவரத்து காவல்துறை

பெங்களூருவின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணுவது எளிது இல்லை என்றாலும், சாலை நெரிசலை குறைக்க நகரின் போக்குவரத்து காவல்துறை தொழில்நுட்ப நிறுவனமான கூகுளுடன் கைகோர்த்துள்ளது. இதனால் டிராபிக் லைட் நேரத்தை மேம்படுத்த கூகுளுடன் கூட்டு சேர்ந்த முதல் இந்திய நகரமாக பெங்களூரு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள்
 

கூகுள்

இந்த கூட்டணி காரணமாக இனி பெங்களூரு போக்குவரத்து அதிகாரிகளால் பகிரப்பட்ட வேக வரம்புகளின் தகவல்கள் இனி கூகுள் மேப்பில் தெரியும். இதனால் நகரின் முக்கிய சந்திப்புகளில் சாலை நெரிசலை நிர்வகிக்க உள்ளூர் போக்குவரத்து ஆணையத்திற்கு உதவுகிறது. இதனால் பெங்களூரு டிராபிக் பிரச்சனை ஓரளவு தீர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சேவை விரிவாக்கம்

சேவை விரிவாக்கம்

பெங்களூரு நகரத்தில் கூகுள் மேப் உதவியுடன் டிராபிக் பிரச்சனை கட்டுப்படுத்தப்பட்டால் அடுத்தகட்டமாக கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கும் கூகுள் தனது சேவையை மேலும் விரிவுபடுத்தும் என்று கூகுள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முதல் நகரம்

முதல் நகரம்

பெங்களூரு மக்களின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு கூகுள் உடன் கூட்டு சேர்வதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் என்று பெங்களூரு காவல்துறை இணை ஆணையர் (போக்குவரத்து) டாக்டர் ரவிகாந்தே கவுடா தெரிவித்தார். பயணிகளின் சிக்னல் காத்திருப்பு நேரத்தை குறைக்கும் வகையில் பெங்களூரில் போக்குவரத்தை மேம்படுத்த கூகுள் மூலம் பணியை தொடங்கிய முதல் இந்திய நகரம் நாங்கள் தான் எனவும் அவர் தெரிவித்தார்.

காத்திருப்பு நேரம் குறைவு

காத்திருப்பு நேரம் குறைவு

‘கூகுளுடன் செய்து கொண்ட இந்த கூட்டணி விளைவாக ஒரு ஓட்டுநருக்கு சராசரியாக 20% காத்திருப்பு நேரம் குறைகிறது. போக்குவரத்து நெரிசல், எரிபொருள் நுகர்வு மற்றும் வாயு வெளியேற்றம் ஆகியவற்றை குறைப்பதில் இது ஏற்படுத்தக்கூடிய நேர்மறையான தாக்கத்தால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்’ என்று டாக்டர் ரவிகாந்தே கவுடா மேலும் கூறினார்.

கூகுள் உடன் கைகோர்க்கும் நகரங்கள்

கூகுள் உடன் கைகோர்க்கும் நகரங்கள்

பெங்களூரு, டெல்லி மற்றும் ஹைதராபாத் உட்பட எட்டு இந்திய நகரங்களில் உள்ள குடிமக்களுக்கு சாலை டிராபிக் மற்றும் போக்குவரத்து குறித்த பல தகவல்களை வழங்குவதன் மூலம் நெரிசலான மண்டலங்களைத் தவிர்ப்பதற்கு கூகுள் போக்குவரத்து அதிகாரிகள் வருங்காலத்தில் உதவ உள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

The first Indian city to partner with Google to optimise traffic light timings.

The first Indian city to partner with Google to optimise traffic light timings. | கூகுளுடன் ஒப்பந்தம் செய்த முதல் நகரம்.. பெங்களூரு மக்களுக்கு கிடைத்த ஜாக்பாட்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.