திருமலை:சென்னையில் இருந்து ஏழுமலையான் கோயிலுக்கு கொண்டு வரும் திருக்குடை ஊர்வலத்தின்போது பக்தர்கள் காணிக்கை வழங்க வேண்டாம்.’ என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இது குறித்து தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரமோற்சவம் வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அக்டோபர் 5ம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெறுகிறது. இந்த பிரமோற்சவத்தின் போது சுவாமிக்கு அலங்கரித்துக் கொண்டு செல்வதற்காகவும், கருட சேவையின் போது பயன்படுத்துவதற்காக சென்னையில் இருந்து வெண்பட்டு திருக்குடைகள் பல இந்து அமைப்புகள் சார்பில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு தேவஸ்தானத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது.
எனவே, சென்னையில் இருந்து திருமலைக்கு வரும் திருக்குடை ஊர்வலத்தின் போது பக்தர்கள் காணிக்கை வழங்க வேண்டாம். அவ்வாறு பக்தர்கள் வழங்கும் காணிக்கைகள் தேவஸ்தானத்திற்கு கிடைக்காது. எனவே, திருக்குடை ஊர்வலத்தின் போது வழங்கும் காணிக்கைகளுக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு எந்த தொடர்பும் இல்லை. இவ்வாறு அதில் கூறியுள்ளது.