கர்ப்பமா? என கேட்ட ரசிகர்; கோபத்துடன் கலாய்த்து பதில் அளித்த சீரியல் நடிகை ரேஷ்மா

சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு சீரியல் நடிகை ரேஷ்மா முரளிதரன் நக்கலாக பதிவிட்டு இருக்கும் பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சின்னத்திரையில் சீரியல் மூலம் பிரபலமானவர்கள் ரேஷ்மா- மதன். இவர்கள் இருவரும் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பூவே பூச்சூடவா சீரியலில் நடித்து இருந்தார்கள்.

இதற்கு முன்னர் மதன் விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் என்ற சீரியலில் நடித்திருந்தார். ஆனால், பூவே பூச்சூடவா சீரியலில் தான் மதன் மக்கள் மத்தியில் பிரபலமானார். பின் ரேஷ்மா மற்றும் மதன் இருவருமே மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடம் பிடித்தனர்.

பூவே பூச்சூடவா முடியும் நேரத்தில் இருவரும் காதலிப்பதாக சமூக வலைதளங்களில் அறிவித்திருந்தார்கள். பின்னர், பூவே பூச்சூடவா சீரியல் முடிந்தவுடன் இருவரும் இணைந்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய அபி டெய்லர் என்ற சீரியலில் நடித்திருந்தார்கள்.

இதனிடையே ரேஷ்மா மற்றும் மதன் இருவரும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இவர்களுடைய திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் இருவரும் சேர்ந்து அபி டெய்லர் சீரியலில் நடித்தனர். சமீபத்தில் தான் இந்த தொடர் வெற்றிகரமாக முடிவடைந்தது.

தற்போது, ரேஷ்மா மற்றும் மதன் ஜோடி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

இந்தநிலையில், ரேஷ்மாவிடம் ரசிகர் ஒருவர் சமூக வலைதளத்தில் கேள்வி கேட்க, அதற்கு ரேஷ்மாவின் பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரேஷ்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ’தற்போது எந்த புராஜெக்டிலும் நான் இல்லை. வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்’ என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் நெட்டிசன் ஒருவர், நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பினர். இதை பார்த்து கோபமான ரேஷ்மா, யப்பா, இல்லப்பா. எத்தனை பேர் தான் கிளம்பி இருக்கீங்க. என்று காட்டமாக பதில் கூறினார். மேலும் கேள்வி கேட்ட நபர் Pregnant என்ற வார்த்தையை ஆங்கிலத்தில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் செய்திருப்பதை குறிப்பிட்டும் ரேஷ்மா கலாய்த்து பதிவிட்டார். இந்த பதில் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.