தமிழகத்தில் இன்று (செப்-12) இந்த பகுதிகளில் மின்தடை அறிவிப்பு.!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (12-09-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

சிவகங்கை 

சிவகங்கை மாவட்டம் கோவிலூா் அருகே மானகிரி, கண்டரமாணிக்கம் நாச்சியாபுரம் பகுதிகளில் திங்கள்கிழமை (செப்.12) மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது என்று தெரிவித்துள்ளாா்.

திருப்பூர் 

திருப்பூர் மாவட்டம் அவிநாசி கானூா்புதூா், பசூா் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். 

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டி பகுதியில் மின்பாதை பராமரிப்பு பணிகள் இன்று நடைபெறுகிறது. அதன்காரணமாக காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை காந்திநகர், எம்.ஜி.ஆர். நகர், எம்.ஜி.ஆர். காலனி, டால்பின் நகர், அனுமன் நகர், காமராஜபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.