தர்மபுரி மாவட்ட வில் வித்தை சங்கம் சார்பில் மாநில அளவிலான வில்வித்தை போட்டி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 250 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளை முன்னாள் எம்.பி. செந்தில் தொடங்கி வைத்தார். தொழிலதிபர் வெங்கடேசன், மீனாட்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் கேசவன், மாநில வில்வித்தை சங்க பொறுப்பாளர் சுரேஷ், மாவட்ட வில் வித்தை தலைவர் வெட்டன்ஸ், மாநில செயலாளர் சுதாகர், மாவட்ட செயலாளர் சிவக்குமார், இணை செயலாளர் விஸ்வநாதன், துணை செயலாளர் கோபிநாத் ஆகியோர் போட்டிகளை முன்னின்று நடத்தினர். இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த போட்டியில் முதலிடம் பிடித்த மாணவ-மாணவிகள் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

மாநில வில்வித்தை போட்டி
தர்மபுரி
Related Tags :